விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நீதி கேட்டு பேருந்து சிறைபிடிப்பு – லோக் சத்தா கட்சி போராட்டம்

Tuesday, January 7th, 2014 @ 12:52PM

லோக் சத்தா சென்னை மாவட்ட தலைவர் குமார் தலைமையிலான அணி இன்று நூதன கருப்பு பெயிண்ட் பூசும் போராட்டத்தின் மூலம் ஜப்பார் ட்ராவல்ஸ் பேருந்தை சில மணி நேரம் சிறைபிடித்தது.

போராட்டம் குறித்து குமார் கூறும் போது, 45 உயிர்களை பலி வாங்கிய, முறைகேடாக பேருந்து இயக்கிய ஜப்பார் ட்ராவல்ஸ் விபத்து நடந்து கிட்டதட்ட இரண்டு மாதங்கள் முடிவடைந்து விட்டன. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க லோக் சத்தா கட்சி ஜப்பாருக்கு விதித்த ஒரு மாத காலக்கெடுவும் முடிந்து விட்டது. ஆனால் காவல்துறை விசாரணை நடைபெறவேயில்லை, எந்த இழப்பீடும் வழங்கப்படவும் இல்லை. போக்குவரத்து துறை அமைச்சரோ தெலுங்கானா தனி மாநில பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளால் நிர்வாகம் ஸ்தம்பித்து இருப்பதைச் சாதகமாக்கிக் கொண்டு பிரச்னையை கிடப்பிலிட்டு இறந்தோரின் குடும்பங்களுக்கு அநீதி விளைவிக்கின்றார்.

இந்த அநியாயத்தை எதிர்த்து நேரடி செயல்பாட்டில் இறங்கி அந்த ட்ராவல்ஸ் பஸ்களை முற்றுகையிட்டு ஓட விடாமல் செய்வது என லோக் சத்தா கட்சி முடிவெடுத்தது. இழப்பீடு கிடைக்கும் வரை அறிவிக்கப்படாத வெவ்வேறு தேதிகளில் இந்திய முழுவதும் என்கேல்லும் ஜப்பார் தட்ராவல்ஸ் பேருந்து இயங்குகிறதோ அங்கெல்லாம் திடீர் போராட்டங்கள் நடத்தப்படும். எனவே பொது மக்களும் ஜப்பார் ட்ராவல்ஸில் சீட்டு பதிவு செய்வதை முற்றிலும் தவிர்த்து பாடம் புகட்ட வேண்டுமென இரண்டு நாட்கள் முன் இதே போராட்டத்திற்காக ஹைதராபாத்தில் கைதான தேசிய தலைவர் திரு.ஜெயப்ரகாஷ் நாராயணன் கூறியிருந்தார்.

இந்த போராட்டங்களின் ஒரு பகுதியாக இன்று இரவு 9:30 மணி அளவில் பிற பல இந்திய நகரங்களை போல சென்னை அடையாரில் பெங்களூர் செல்லவிருந்த ஜப்பார் ட்ராவல்ஸ் பஸ் தடுத்து நிறுத்தப்பட்டது. அதன் முன்பக்க கண்ணாடியில் கருப்பு பெயிண்ட் பூசப்பட்டு அங்கேயே பல மணி நேரம் நிற்கும் படி செய்யப்பட்டது. தங்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்ட போதும் அதே பஸ்சில் பயணம் செய்த பயணிகள் போராட்டத்திற்கு ஆதரவே தெரிவித்தனர்.

இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:

Close
06-Jan-2014 21:26
Close
06-Jan-2014 21:26
Close
06-Jan-2014 21:27
 
Close
06-Jan-2014 21:27
Close
06-Jan-2014 21:27
 

Categories: Activities
Tags: , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: