அரசு நிர்வாக பரவலாக்கமும் உள்ளூர் அரசாங்கங்களும் – பாகம் 2

Thursday, January 2nd, 2014 @ 5:05PM

ஐக்கிய நாடுகள் அரசு பன்முகபடுத்துதளையும் அரசு நிர்வாக பரவலாக்கத்தையும் “மத்திய பிராந்திய மற்றும் உள்ளூர் மட்டங்களின் அரசு நிறுவனங்கள் இடையே இணை பொறுப்பை அமைக்க சீரமைப்பு அல்லது அதிகாரம் மறுசீரமைப்பு படுத்துதல்” என விவரித்துள்ளது. இந்தியாவில் உள்ளூர் ஆட்சிமுறை நகர்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி, பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் என பிரிக்கப்பட பரிந்துரைக்கப்பட்டது.உள்ளாட்சி மன்றங்களில் மாநகராட்சிகளும், நகராட்சிகளும் உள்ளடக்கமாகும். தமிழகத்தின் 1920ஆம் மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின்படி நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களுக்கு அரசியலமைப்பில் அந்தஸ்து முதன்முறையாக வழங்கப்பட்டது. 1920 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தமிழக மாவட்ட மற்றும் நகராட்சி சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட திருத்தத்தினால் நகராட்சியின் 18 செயல்பாடுகளை 12 பஞ்சாயத்துகளுக்கு மாற்றப்பட்டது, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு வரிகளை மறு ஆய்வு செய்யவும் புது வரிகளை விதிக்கவும் அதிகாரம் அளிக்கப்பட்டது. ஆனால் செயல்பாடுகளில் மாற்றங்கள ஏற்படுத்தவில்லை.

தமிழகத்தின் நகராட்சிகளின் கீழ் வாழ்கின்ற மக்களின் சதவீதம் 48.45% ஆக உள்ளது. அதில் 10 நகராட்சிகள், 150 முனிசிபால்டிகள், 559 டவுன் பஞ்சாயத்துகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்கள் அங்கு வாழும் மக்களின் மொத்த வருமானத்தின்படி தரம்  பிரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 22 சிறப்பு தர நகராட்சிகளில் ₹10 கோடிக்கு மேலும், 35 தேர்வுத்தர நகராட்சிகளில் ₹6 கோடியிலிருந்து ₹10 கோடி வரை வருமானம் ஈட்டும் நகராட்சிகளாகவும், 36 முதல் தர நகராட்சிகள் ₹4 கோடியிலுருந்து ₹6 கோடி வரை வருமானம் வாங்கும் நகராட்சிகளாகவும், 45 இரண்டாம் தர நகராட்சிகள் ₹4 கோடிக்கு குறைவாக வருமானம் வாங்கும் நகராட்சிகளாகவும், 12 மூன்றாம் தர நகராட்சிகள் 30000 குறைவாக மக்கள் தொகை கொண்ட நகராட்சிகளாகவும் வகைபடுத்தப் பட்டுள்ளது. 12 சிறப்பு தர டவுன் பஞ்சாயத்துகள் ₹10 லட்சத்திற்கு  மேல் வருடாந்திர வருமானம் வாங்கும்  பஞ்சாயத்துகளாகவும் , 244 தேர்வுத்தர பஞ்சாயத்துகள் ₹16 லட்சத்திற்கு அதிகமாகவும் ₹20 லட்சம் வரை வருமானம் ஈட்டும் பஞ்சாயத்துகளாகவும், 221 முதல் தர பஞ்சாயத்துகள்  ₹8 லட்சத்திற்கு அதிகமாகவும் ₹16 லட்சம் வரை வருமானம் வாங்கும் பஞ்சாயத்துகளாகவும், 82 இரண்டாம் தர பஞ்சாயத்துகள்  ₹4 லட்சத்திற்கு அதிகமாகவும் ₹8 லட்சம் வரை வருமானம் வாங்கும் பஞ்சாயத்துகளாகவும் வகைபடுத்தப் பட்டுள்ளது.

மாநகராட்சிகள், நகராட்சிகள், மற்றும் லவுன் பஞ்சாயத்துகளில் தலைவரின் பொறுப்பில் பொதுநலம் மற்றும்  சுகாதாரம், நகர திட்டமிடல், பொது பணிகள், வரிவிதிப்பு மற்றும் நிதி, கல்வி மற்றும் கணக்குகள், வரி விதிப்பு மேல்முறையீட்டு குழுக்கள் அமைக்கப்பட்டது. குழுக்களின் தலைவரை உறுப்பினர்கள் மத்தியில் தேர்வு செய்யப்படுகிறது. மாவட்ட திட்டமிடல்க்குழுவின் உருப்பினகர்களை மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள்,நகர மாநகராட்சி தலைவர்கள், ஜில்லா அதிகாரிகள், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், டவுன் பஞ்சாயத்து உறுப்பினர்கள், கவுன்சிலர்கள், மற்றும் நகராட்சி உறுப்பினர்களை கொண்டு உருவாக்கப்பட்டது. ஊராட்சி ஒன்றியங்கள் அல்லது கிராம பஞ்சாயத்திலிருந்து பிரதிநிதித்துவம் இல்லை. மாவட்ட பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன் சபை, கிராம பஞ்சாயத்து, உள்பஞ்சாயத்துகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் தயாரித்த திட்டங்களை மாவட்ட திட்டமிடல் குழு ஒருங்கிணைத்து மாநில அரசிடம் சமர்ப்பிக்கும். ஆனால் அரசு மட்டத்தில் தயாராகும் ஆண்டு திட்டங்கள் மாவட்ட திட்டங்களாக ஏற்கப்படுகிறது.

மாநில திட்ட உதவிகள், கடன்கள், ஒதுக்கப்படுகின்றன வருவாய், சொந்த வருவாய் ஆகியவற்றை அங்கு குடியிருக்கும் மக்களிடமிருந்தும், மாநில மத்திய அரசாங்கத்திடமிருந்தும் பெற்று வங்கிகளில் நகராட்சிகளும் பஞ்சாயத்துகளும் சேர்கின்றனர். உள்ளாட்சிகளை கணக்காய்வு செய்து வெளியிடப்பட்ட அறிக்கையில் அதிகாரிகள் இடமாற்றபடவில்லை என்றும், 12 இருந்து 48 % வரை ஒட்டுமொத்த சேமிப்பு கணக்கில் காடபட்டாலும், கணக்குகள் சரியான நேரத்தில் சமர்பிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றது.

மாவட்ட பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன் கவுன்சில், கிராம பஞ்சாயத்து ஆகியவற்றை பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களாக நிறுவப்பட்டுள்ளது. மாவட்ட பஞ்சாயத்துகளின் முக்கிய பணிகளாக மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்களை வகுப்பதாகவும், நிர்வாக அறிக்கைகளை தொகுக்கவும்,முக்கிய நீர் விநியோக திட்டங்களை கண்டறியும் ஆலோசனை மற்றும் அறிவுறுத்தும் பொறுப்புகளும் அடங்கியுள்ளது. மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு வரிவிதிக்கும் அதிகாரம் இல்லை என்றாலும் மாநில நிதி குழு மானியம், வளர்ச்சி மானியங்கள், மற்றும்  சட்டரீதியான மானியங்களை மாநில மத்திய அரசிடமிருந்து பெற்று பகிர்ந்தளிக்கவும் பொறுப்புகள் இருக்கின்றன.

பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்களுக்கு கட்டுமானம், பழுதுபார்த்தல்,சாலை பராமரிப்பு வேலைகள், குடிநீர் வழங்குதளுக்கான கட்டுமான வேலைகள், அடிப்படை மற்றும் நடுநிலை பள்ளிகளில் கட்டுமான மற்றும் பராமரிப்பு வேலைகளை செய்யும் பொறுப்புகள் தற்போது உள்ளது. ஊராட்சி ஒன்றியங்கள் எந்த வரியும்  வசூலிக்க முடியாது, ஆனால் வரி அல்லாத வருவாயை பெருக்கவும், ஒதுக்கப்பட்ட மற்றும் பகிர்க்கப்பட்ட வருவாய் மானியங்களை உபயோகிக்கும் பொறுப்புள்ளது.

கிராம பஞ்சயத்துகளில் தலைவரை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். உறுப்பினர்கள் வார்ட்களிலிருந்து தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். கிராமத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப கிராம பஞ்சாயத்தில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். 500 லிருந்து 2000 வரை உள்ள கிராமத்திலிருந்து 6 உறுப்பினர்களும், 10000 திற்கும் மேல் உள்ள கிராமத்திலிருந்து 15 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். கிராமத்தின் மக்கள் தொகை, இடம் போன்றவற்றை பொருத்து இரண்டிலிருந்து ஐந்து வார்டுகள் வரை உருவாக்கப் படுகின்றது. கட்டுமானம், பழுதுபார்த்தல், அனைத்து கிராம சாலைகள், குளங்கள், நீர் தொட்டிகள், வடிகால்கள், தெருக்கள், சுடுகாடுகள், பூங்காக்கள், படிப்பறைகள், கட்டிடங்களின் ஒழுங்கு பராமரிப்பு, மாநில மற்றும் மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்துதல் கிராம பஞ்சாயத்துகளின் வேலைகளாக அமைக்கப்பட்டுள்ளது. வரி, வீட்டு வரி, விளம்பர வரி, தொழில் வரி, உரிமம் வழங்கும் வரி வருவாய், மாநில மத்திய அரசுகளால் ஒதுக்கப்பட்ட  மற்றும் பகிரப்பட்ட வருவாய், மானியங்களின் உதவியால் கிராம பஞ்சாயத்துகள் வருவாய் ஈட்டுகின்றன.

செயல்பாடுகள், அலுவலர்களில் இடமாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை, மொத்த செலவு 24% இருந்து 12% ஆகா குறைக்கப்பட்டுள்ளது, கணக்கியல் மென்பொருள் சரியாக செயல்ப்படுதப்படவில்லை என கிராம பஞ்சாயத்துகளின் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

–  தொடரும்…

– கண்ணன் 

Categories: Article, November 2013, Whistle
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: