புலி வருது புலி வருது தெலுங்கானா புலி வருது

Saturday, January 4th, 2014 @ 12:25PM

தனித் தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னமும் தனி மாநிலம் குறித்த முடிவு இறுதி வடிவம் பெறாமல் குழப்பத்திலேயே போய் கொண்டிருக்கிறது. நமது ஆகஸ்டு மாத இதழிலேயே நாம் இது குறித்து காங்கிரஸ் அரசு கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கும் முயற்சியாக இப்பிரச்னையை கையில் எடுத்து அரசியல் லாபம் பார்க்க நினைக்கிறது என்று குறிப்பிட்டிருந்தோம். அது உண்மைதான் என்பதற்கு இணங்க தெலுங்கானா பகுதியுடன் மேலும் இரண்டு மாவட்டங்களைச் சேர்த்து ‘ராயல தெலுங்கானா’ உருவாக்கலாமா என ஒரு விஷப் பரீட்சை நடத்த அமைச்சரவை கூட் டத்தில் காங்கிரஸ் அரசு முடிவு எடுக்க முயற்சி செய்தது. லாபக்கணக்கு போட்டுப் பார்த்து தன்னிச்சையாக எடுத்த இந்த முடிவு மீண்டும் ஆந்திராவில் புயலைக் கிளப்பியது. ஏற்கனவே தெலுங்கானா மாநிலம் வேண்டும் என ஒரு பிரிவினரும், ஒருங்கிணைந்த ஆந்திராதான் வேண்டும் என மற்றொரு பிரிவினரும் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் புதிதாக ராயல தெலுங் கானா வேண்டாம் என ஒரு போராட்டம் பயங்கரமாக உருவாகி ஆந்திர மாநிலத்தை உருக்குலைத்தது. மறு தினமே இத்திட்டத்தை கைவிட்டு அக்டோபர் மாதம் எடுத்த முடிவின் படியே பத்து மாவட்டங்கள் மட்டும் உள்ளடக்கிய தெலுங்கானா மாவட்டத்திற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து தீர்மானத்தை ஜனாதி பதிக்கு அனுப்பி வைத்தது.

எப்போது உருவாகும் தெலுங்கானா?

ஜுலை மாதம் காங்கிரஸ் கட்சி சார்பில் தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என அறிவித்து மத்திய அரசிடம் அதற்கான பூர்வாங்க நடவடிக்கை எடுக்கக்கோரியது. மத்திய அரசும் அக்டோபர் மாதம் நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் இந்த அறிவிப்புக்கு ஒப்புதல் அளித்து இந்தியாவின் 29ஆவது மாநிலமாக தெலுங் கானா மாநிலம் 10 மாவட்டங்களுடன் அமையும் எனவும், புதிய தலைநகரம் உருவாக்கப்படும் வரை ஐதராபாத் பொது தலைநகரமாக செயல்படும் எனவும் இரு மாநிலங் களுக்கிடையே ஆன தண்ணீர் மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசிய தேவைகள் பங்கிடுவது குறித்து முடிவுகள் எடுக்க அனைத்து துறைகளையும் சார்ந்த மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அறிவித்து அறிக்கை சமர்ப்பிக்கப் பணித்தது. இக்குழு பல்வேறு பரிந்துரைகளைக் கேட்டறிந்து டிசம்பர் மாதம் மத்திய மந்திரிகள் குழுவிடம் சமர்ப்பித்தது. அதன்படி இரண்டு மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். ஐதராபாத் நகர சட்டம் ஒழுங்கு ஆளுநர் ஆட்சியின் கீழ் இருக்கும் மற்றும் உயர்கல்வி, நதி நீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் ஆந்திர பகுதியில் மேம்படுத்தப்படும் போன்ற பல அறிவிப்புகளுடன் கூடிய அறிக்கையை மத்திய மந்திரிசபை ஒப்புதலுக்கு அனுப்பியது. மந்திரி சபையும் ஒப்புதல் அளித்து ஜனாதிபதியின் பரி சீலனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்தத் தீர்மானம் ஜனாதிபதியால் ஆந்திர மாநில அரசுக்கு அனுப்பி வைக் கப்பட்டு மாநில அரசின் முடிவை அறிந்து பாராளுமன்ற ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின் தெலுங்கானா மாநிலம் உருவாகும்.

புலி வருமா?

நான்கு மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளி வந்துள்ள இந்த சூழலில் காங்கிரஸ் இந்த முடிவை நிறைவேற்றுமா? ஆந்திர மாநில சட்டசபை இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்காவிட்டாலும் பாராளுமன்றத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் புதிய மாநிலம் உருவாக்க முடியும். ஆனால் தற்போது உள்ள நிலைமையில் காங்கிரசுக்கு இதனால் லாபம் கிடைக்குமா என்பது சந்தேகமே. அதே சமயம் புதிய மாநிலம் உருவாக்குவதை தள்ளிப் போட்டாலும் காங்கிரசுக்கு பின்னடைவுதான். இப்போதே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆந்திர மாநில மக்களவை உறுப்பினர்கள் அவர்கள் கட்சி அரசு மீதே நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளார்கள். அதே போன்று தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்களும் காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர உள்ளார்கள். மேலும் பல்வேறு கட்சிகளும் சட்டசபை தோல்வியை ஒப்புக் கொண்டு மந்திரி சபையை ராஜினாமா செய்யக் கோரிக்கை விடுத்துள்ளன. லோக் சத்தா கட்சியின் தேசியத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாரா யணன் அவர்களும் மக்களின் ஒருமித்த ஒப்புதல் இன்றி புதிதாக மாநிலம் உருவாக்க நினைக்கும் காங்கிரஸ் அரசை வன்மையாக கண்டிப்பதுடன், மக்களின் செல் வாக்கை இழந்துள்ள காங்கிரஸ் அரசு இனி ஒரு நொடியும் ஆட்சியில் நீடிக்க உரிமை இல்லை, தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்வதுதான் சிறந்தது எனக் கூறியுள்ளார். இந்நிலையில் தெலுங்கானா புலி வருவது சந்தேகமே.

– தினகரன் போஸ்

Categories: Article, December 2013, Whistle
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: