அமெரிக்க இறுமாப்பிற்கு வைத்தது ஆப்பு!

Wednesday, February 5th, 2014 @ 11:03AM

20 ஆண்டுகள் கடின உழைப்புடன் கூடிய முயற்சியில் இமாலய வெற்றிகண்டுள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழகம். ஆம், 2000 கிலோவிற்கும் அதிக எடை உள்ள செயற்கைகோள்களை ஏவும் கிரையோஜெனிக் என்ஜின் கொண்ட ஏவுகணையை முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்துடன் இந்திய விஞ்

Radhakrishnan

ஞானிகள் தயாரித்து சாதனை புரிந்துள்ளனர். ஜி.எஸ்.எல்.வீ.டி.5 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை 1982 கிலோ எடையுள்ள ஜி சாட் 14 என்ற செயற்கை கோளை இம்மாதம் 5ம் தேதி விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. இதில் சிறப்பு என்னவென்றால் இத்தகைய என்ஜின்கள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இதில் ஏற்கனவே வெற்றி கண்ட நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், சீனா போன்ற நாடுகள் ரகசியமாகவே வைத்துக் கொண்டனர். அதனால் இந்தியா உட்பட இதர நாடுகள் செயற்கைகோள்களை அனுப்ப இத்தகைய தொழில்நுட்பம் கொண்ட நாடுகளை சார்ந்து இருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. இந்த தொழில்நுட்பத்தை ரஷ்யா இந்தியாவிற்கு பகிர்ந்துகொள்ள முன்வந்த போது அமெரிக்கா இதற்கு முட்டுக்கட்டைப் போட்டதால் இந்திய விஞ்ஞானிகள் முழு வேகத்துடன் முயற்சிகள் மேற்கொண்டு இந்த சாதனையை நிகழ்த்தி உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளனர். அதோடு அவர்களின் இறுமாப்பிற்கு சரியான ஆப்பும் வைத்துள்ளனர்.

கிரியோஜெனிக் இன்ஜின்
ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் வாயுக்களை திரவ நிலையில்

Cryogenicபயன்படுத்தி இயக்கப்படும் இஞ்சின் தான் கிரையோஜெனிக் எஞ்சின் ஆகும். இது அதிக எடையுள்ள செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த தேவையான உயர்சக்தி கொண்ட இஞ்சின் ஆகும். இதில் ஆக்சிஜன் வாயு 184 டிகிரி மற்றும் ஹைட்ரஜன் வாயு 253 டிகிரி அளவில் குளிர்ந்த நிலையில் பயன்படுத்தப்படுவதால், இஞ்சின் இயக்கப்படும் போது இவை ஒன்று சேர்ந்து எரிந்து வாயுவாக மாறி அதிக உந்து சக்தியைக் கொடுக்கிறது. அதனால் இந்த இஞ்சின் 2000 கிலோ எடைக்கும் அதிகமான எடையுள்ள கோள்களை விண்ணில் செலுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது. தற்போது 1982 கிலோ எடையுள்ள செயற்கைகோள் வெற்றிகரமாக செலுத்தியுள்ள இந்த இஞ்சின் மூலம் 4,000 கிலோ எடையுள்ள மார்க் 3 ஏவுகணையை விரைவில் செலுத்தவுள்ளது. மேலும் சந்திராயன் 2, ஜிசாட் 6,7,8,9 என பல செயற்கைகோள்களையும் விண்ணில் செலுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

இந்தியாவிற்கு பெருமை
இந்த வெற்றியின் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துள்ளது. தகவல் தொடர்பு, அறிவியல், கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் மேலும் சிறந்து விளங்க உதவும். மேலும் இனிமேல் செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்த எந்த நாட்டையும் நாடவேண்டிய நிலை இல்லை. மாறாக பிற நாடுகள்தான் இனிமேல் இந்தியாவை நாடி வரும். ஏனென்றால் பிறநாட்டு ஏவுதளத்தில் இருந்து ஏவுகணை விண்ணில் செலுத்தும் பணிக்கு ஆகும் செலவு நம் நாட்டை விட பல மடங்கு அதிகம் ஆகும். எனவே வணிக ரீதியாகவும், இனி இந்தியாவிற்கு அதிக வாய்ப்புகள் உருவாக உள்ளது என்று பெருமைபட்டுக் கொள்ளலாம். 1975ல் ஆரியபட்டா என்ற செயற்கைகோளுடன் தனது முதல் விண்வெளி ஆராய்ச்சிப் பயணத்தை மேற்கொண்ட இந்தியா இன்று இதுவரை 63 செயற்கைகோள்கள் மற்றும் 37 ஏவுகணைகள் என வரலாற்று சாதனை படைத்துள்ளது. மேலும் விண்வெளி ஆராய்ச்சிக்கு என இந்தியா இதுவரை சுமார் 72,0000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது இந்த தொகை அவர்கள் செலவிடும் தொகையை விட பாதிக்கும் குறைவாகவே உள்ளது. பலமுறை தோல்விகளை சந்தித்திருந்தாலும் மனம் தளராமல் தோல்விகளை சாதனைகளாக மாற்றி இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழக தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் சக விஞ்ஞானிகள் அனைவருக்கும் லோக் சத்தா கட்சி சார்பாக நமது பாராட்டுதல்களை தெரிவிப்பதில் நாமும் பெருமைப்படுகிறோம்.

– தினகரன் போஸ்

Categories: Article, January 2014, Whistle
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: