தமிழ்நாடு தகவல் ஆணையம் திறம்பட செயல்படக் கோரி உண்ணாவிரதம் – லோக்சத்தா கட்சி ஆதரவளிக்கிறது

Tuesday, February 4th, 2014 @ 11:59PM

தமிழ்நாடு தகவல் ஆணையம் சரியான முறையில் செயல்படாமல் இருக்கிறது. லோக்சத்தா கட்சியின் சார்பில் தகவல் கோரி தாக்கல் செய்யப்பட்ட பல மேல் முறையீட்டு மனுக்கள் காலதாமதப் படுத்தப்பட்டும், நியாயமான காரணம் இன்றியும் தகவல் நிராகரிக்கப்பட்டும் உள்ளது.

மேலும் தகவல் உரிமை கோரிக்கைகளை காலதாமதப்படுத்தப்படும் அதிகாரிகளுக்கு அபராதம் விதிப்பதையோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதையோ தகவல் ஆணையம் செய்வதில்லை. இதனால் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசுத்துறைகளில் உள்ள தகவல் அதிகாரிகளும் தகவல் கோரும் மனுக்களை பொருட்டாக கொள்வதில்லை. அவர்கள் வரையறை செய்த காலத்தில் சரியான தகவலையும் தருவதில்லை. தகவல் ஆணையத்தின் இந்தப் போக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் நோக்கத்திற்கு எதிராக அமைகிறது.

தகவல் ஆணையத்தின் போக்கை கண்டித்தும், தகவல் ஆணையத்தை திறம்பட செயல்படுமாறு அமைக்க தமிழக அரசை கோரியும் பல்வேறு சமூகநல அமைப்புகள் சார்பில் நாளை (05-02-14), காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிரில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெறுகிறது. இந்த உண்ணாவிரதத்திற்கு லோக்சத்தா கட்சி ஆதரவளிக்கிறது. இதில் லோக்சத்தா கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்துக்கொள்கிறது.

Categories: Activities, Press Releases
Tags: , , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: