நேதாஜி

Friday, February 21st, 2014 @ 5:58PM

இந்தியாவில் மக்கள் தொகையில் அதிகம் உள்ள ஒரு மாவட்டம், உலகத்தின் 80 நாடுகளை விட பெரியது. நம்முடைய வெளி மாநிலங்கள் ஒவ்வொன்றும் மக்கள் தொகையில் பெரிய நாடுகளை ஒத்தது. உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் ஒவ்வொன்றும் ஐரோப்பாவின் பல பெரிய நாடுகளுக்கு ஒப்பாகும். குறைக்கப்பட்ட உத்தரப்பிரதேசம் உலகத்தின் 6வது பெரிய நாடாக இருக்கும்.

இப்படிப்பட்ட ஒரு மிகப்பெரிய நாட்டில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வேற்றுமைகள் கொண்ட ஒரு நாட்டில், அதிகார குவிப்பு பழைமை வாய்ந்ததாகவும், பயனற்றதாகவும் உள்ளது.

ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில் 80 வருடங்களுக்கு முன் நடந்த Netajiஒரு சம்பவம் இந்திய ஜனநாயகத்தில் இருக்கும் அதிகார குவிப்பை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 1924 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட கல்கத்தா மாநகராட்சிக்கு புதிய மேயராக சித்தரஞ்சன்தாஸ் (சி.ஆர்.தாஸ்) தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சியின் தலைவரான தான் மட்டுமே புதிய ஆணையரை தேர்ந்தெடுத்து நியமிக்க வேண்டும் என ஆங்கிலேயரிடம் முறையிட்டார். ஆங்கிலேயரும் அதற்கு ஒத்துக்கொண்டு எந்த இந்திய குடிமைப்பணி (ஐசிஎஸ்) நிர்வாகியையும் தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்கினர். ஆனால் தாஸ் அதை நிராகரித்து தன்னுடைய நபர் ஒருவரை தேர்ந்தெடுத்தார். அறிவும், திறமையும் கூடிய 27 வயதான அவர் சுபாஷ் சந்திர போஸ்.

நகர நிர்வாகியாக போஸ் பல அளப்பரிய பணிகளை செய்தார். எல்லோர் மனதிலும் சிறப்பான இடம் பிடித்தார். பல மாதங்கள் கழித்து, சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தற்காக போஸ் அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். சி.ஆர்.தாஸ் மீண் டும் போஸ் செய்த அறிய பணிகளை விளக்கி, அவர் கைதானது சுதந்திர போராட்டத்தை ஒட்டியே ஒழியே, நிர்வாகியாக அவர் சிறந்து விளங்கினார் என்பதை எடுத்துக்கூறி, சிறையில் இருந்தாலும் நகரத்திற்கு அவரின் சேவை தொடர வேண்டும் என வலியுறுத்தினார். ஆங்கிலேயரும் அதற்கு ஒப்புக் கொண்டனர். சிறையில் இருந்தே போஸ் ஆணையராக தன் பணியை தொடர்ந்தார். கோப்புகள் யாவும் சிறைச்சாலைக்கு அவருக்கு அனுப்பப் பட்டது. அவருடைய ஆணைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. போஸ் பர்மாவிற்கு நாடு கடத்தப்படும் வரை இப்பணி தொடர்ந்தது. போஸ் 1930 ஆம் ஆண்டு கல்கத்தாவின் மேயராகவும், 1938 மற்றும் 39 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தக் கதையை இப்பொழுது நினைவு கூர்வதில் சில சிக்கல்கள் இல்லாமல் இல்லை. கொலைக் குற்றத்திற்காகவோ, லஞ்சப் புகாருக்காகவோ இன்று சிறையில் ஒரு அரசியல்வாதியோ, ஆட்சிப் பணியாளருக்கோ இந்தக் கதை தெரிவது ஆபத்தில்தான் போய் முடியும். ஆனால் இந்த அத்தியாயம் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் வலுவாக இருந்த உள்ளூர் அரசாங்கத்தின் வலிமையை பறைசாற்றுகிறதல்லவா? இன்று ஒரு இரண்டாம் தர நகராட்சியில் பொறுப்பான ஒரு நல்ல ஆணையரை நியமிப்பது கூட முடியாத காரியம். அவர் பிறந்த ஜனவரி மாதத்தில் அவரை நினைவு கொள்வதில் லோக்சத்தா கட்சி பெருமை கொள்கிறது

– தெ.ஜெகதீஸ்வரன் –

Categories: Article, January 2014, Whistle
Tags: , , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: