விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நீதி கேட்டு பேருந்து சிறை பிடிப்பு! லோக் சத்தா கட்சி போராட்டம்

Tuesday, February 11th, 2014 @ 2:01PM

லோக்சத்தா சென்னை மாவட்டத் தலைவர் குமார் தலைமையிலான அணி நூதன கருப்பு பெயிண்ட் பூசும் போராட்டத்தின் மூலம் ஜப்பார் ட்ராவல்ஸ் பேருந்தை சில மணி நேரம் சிறைபிடித்தது. முறைகேடாக பேருந்து இயக்கி 45 உயிர்களை பலி வாங்கிய ஜப்பார் டிராவல்ஸ் பேருந்து விபத்து நடந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் முடிவடைந்துவிட்டன. ஆனால் காவல்துறை விசாரணை நடைபெறவேயில்லை. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க லோக்சத்தா கட்சி ஜப்பாருக்கு விதித்த ஒரு மாத காலக்கெடுவும் முடிந்துவிட்டது. எந்த இழப்பீடும் வழங்கப்படவும் இல்லை. போக்குவரத்துறை அமைச்சரோ தெலுங்கானா தனி மாநில பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளால் நிர்வாகம் ஸ்தம்பித்து இருப்பதைச் சாதகமாக்கிக் கொண்டு பிரச்சனையை கிடப்பிலிட்டு இறந்தோரின் குடும்பங்களுக்கு அநீதி விளைவிக்கின்றார்.

இந்த அநியாயத்தை எதிர்த்து நேரடி செயல்பாட்டில் இறங்கி அந்த ட்ராவல்ஸ் பஸ்களை முற்றுகையிட்டு ஓட விடாமல் செய்வது என லோக்சத்தா கட்சி முடிவெடுத்தது. இழப்பீடு கிடைக்கும் வரை அறிவிக்கப்படாத வெவ்வேறு தேதிகளில் இந்தியா முழுவதும் எங்கெல்லாம் ஜப்பார் ட்ராவல்ஸ் பேருந்து இயங்குகிறதோ அங்கெல்லாம் தீடீர் போராட்டங்கள் நடத்தப்படும். எனவே பொது மக்களும் ஜப்பார் டிராவல்ஸில் சீட்டு பதிவு செய்வதை முற்றிலும் தவிர்த்து பாடம் புகட்ட வேண்டுமென இரண்டு நாட்கள் முன் இதே போராட்டத்திற்காக ஹைதராபாத்தில் கைதான தேசியத் தலைவர் திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணன் கூறியிருந்தார்.

இந்த போராட்டங்களின் ஒரு பகுதியாக இரவு 9.30 மணி அளவில் பிற இந்திய நகரங்களைப் போல சென்னை அடையாறில் பெங்களூர் செல்லவிருந்த ஜப்பார் டிராவல்ஸ் பஸ் தடுத்து நிறுத்தப்பட்டது. அதன் முன்பக்க கண்ணாடியில் கருப்பு பெயிண்ட் பூசப்பட்டு அங்கேயே பல மணி நேரம் நிற்கும்படி செய்யப்பட்டது. தங்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்ட போதும் அதே பஸ்சில் பயணம் செய்த பயணிகள் போராட்டத்திற்கு ஆதரவே தெரிவித்தனர்.

– குமார் –

Close
06-Jan-2014 21:27
Close
06-Jan-2014 21:27
Close
06-Jan-2014 21:26
Close
06-Jan-2014 21:27
Close
06-Jan-2014 21:26
 

Categories: Article, January 2014, Whistle
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: