லோக்சத்தா கட்சியின் 2014 உட்கட்சி தேர்தல் அறிவிப்பு

Saturday, February 15th, 2014 @ 10:42PM

தமிழக லோக்சத்தா கட்சியின் மாநில பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்க உட்கட்சி தேர்தல் வரும் மார்ச் மாதம் 2-ஆம் தேதி நடத்தப்பட இருக்கிறது என தெரிவித்துக் கொள்கிறோம். லோக்சத்தாவில் கடந்த 2013-ஆம் ஆண்டு பொறுப்பேற்ற நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைவதால் இந்த தேர்தல் நடைபெறுகிறது.

உட்கட்சி ஜனநாயகம் லோக்சத்தா கட்சியின் கொள்கைகளின் அடிப்படை தூணாக அமைகிறது. எந்த ஒரு அமைப்பிலும் உட்கட்சி ஜனநாயகத்தை நிலைநிறுத்த உட்கட்சி தேர்தல் இன்றியமையாதது.

இந்த தேர்தல் மாநில தலைவர், மாநில பொதுச்செயலாளர், மாநில அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பதிமூன்று பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் வெற்றிபெரும் நிர்வாகிகள் அடுத்த ஒரு வருடத்திற்கு (அதாவது மார்ச் 2015 வரை) பொறுப்பில் இருப்பர்.

தேர்தல் அட்டவணை பின்வருமாறு:

21- பிப்ரவரி-2014: மாலை 6 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

24-பிப்ரவரி-2014: மாலை 6 மணி வேட்புமனுவை திரும்பப்பெற இறுதிக்கெடு.

25-பிப்ரவரி-2014: வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் இணையதளம், ஈமெயில் மூலம் அறிவிக்கப்படும்.

02-மார்ச்-2014 (ஞாயிறு): தேர்தல் நாள்

மேலும் பிப்ரவரி 21-ஆம் தேதிக்கு முன்னர் கட்சியில் புதிதாக உறுப்பினராக இணைவோர்/உறுப்புரிமை புதுப்பிப்போர் மட்டுமே தேர்தலில் வாக்களிக்கவும் போட்டியிடவும் முடியும்.

இந்த தேர்தலை நடத்த கட்சி சாராதவரும், தம் வாழ்க்கையில் பெரும் பகுதியை சமுதாயத்திற்கு அர்ப்பணித்தவருமான சட்டப் பஞ்சாயத்து இயக்கத் தலைவர் திரு.சிவ இளங்கோ என்ற நடுநிலையாளர் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளார்.
​​
தேர்தல் பற்றிய முழு விவரங்களடங்கிய அறிவிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க: அசோக் – 9952904891

Categories: Elections
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: