சசிபெருமாள் அய்யா உண்ணாவிரதம் – தமிழகத்தில் தீவிர மதுகாட்டுப்பாடு கோரி -பங்கேற்க லோக்சத்தா உறுப்பினர்களுக்கு அழைப்பு

Wednesday, March 5th, 2014 @ 5:29PM

புனித ஆத்மா காந்தியவாதி சசி பெருமாள் அய்யா அவர்கள் மதுவிற்கு எதிராக, மதுவின் கோரப்பிடி ஏழை எளிய மக்களை பாதிக்கக்கூடாது​, நம் அடுத்த தலைமுறை வளமுடன் வாழ வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் 3​5​​-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார்.

லோக்சத்தா கட்சியின் மாநிலத் தலைவர் திரு. பழனிகுமார் அவர்களின் தலைமையில், தமிழகத்தில் தீவிர மதுக்கட்டுப்பாடு கோரி, கட்சி உறுப்பினர்கள் நாளை (06-மார்ச்-2014) ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்து சசிபெருமாள் அய்யா அவர்களுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உண்ணாவிரதக் களமாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் (சென்னை கடற்கரை இரயில் நிலையம் எதிரில்) இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள நினைக்கும் கட்சி உறுப்பினர்கள் +91 8608822667 என்ற எண்ணில் தொர்பு கொள்ளவும். உறுப்பினர்கள் நாள் முழுவதும் இல்லாவிட்டாலும், ஒரு சில மணிநேரங்களாவது உண்ணாவிரதத்தில் பங்கேற்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இத்துடன் தமிழக லோக்சத்தாவின் தலைவர் திரு. பழனிகுமார், ​திரு. பார்த்திபன், திரு. முத்துராஜன் ஆகியோர் சசிபெருமாள் அய்யாவை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிட்டு வேறு வழிகளில் போராட்டத்தை தொடர வேண்டுமென கேட்டுக்கொண்டோம்

Close
04-Mar-2014 17:38
 
Close
04-Mar-2014 17:39
 

 

லோக்சத்தாவின் தீவிர மதுக்கட்டுப்பாடு கொள்கை குறித்து அறிந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்

Categories: Activities

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: