நாடாளுமன்ற தேர்தல் – முதல் வேட்பாளர் பட்டியல் – லோக்சத்தா கட்சி

Monday, March 10th, 2014 @ 12:24PM

அன்பு நண்பர்களே,

தமிழக லோக்சத்தா கட்சியின் 2014 நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

வேட்பாளர் பெயர் (வயது) – தொகுதி

  1. A. ஜெய்கணேஷ் (29) – தென் சென்னை
  2. R. கோபால்சாமி (38) – திருப்பூர்
  3. D. பிரதீப்குமார் (30) – விருதுநகர்

மேலும் வேட்பாளர் தேர்வுக்கென ஒரு குழு அமைக்கப்பட்டு, வெளிப்படையான முறையில் வேட்பாளர் தேர்வு நடத்தப்பட்டது என்பதை தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். அவர்கள் பெயர் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு இவர்களின் தேர்வுக்கு ஆட்சேபம் கோரப்பட்டது. எனினும் இவர்களுக்கு ஆட்சேபம் எதுவும் எழுப்பப்படவில்லை.

இவர்கள் அனைவரும் பல வருடங்களாக பொது வாழ்வில் ஈடுபட்டு வருபவர்கள். ஊழலுக்கு எதிரான மற்றும் சமூக முன்னேற்ற அமைப்புகளில் பங்காற்றி வருபவர்கள். மேலும் இவர்கள் அனைவரும் எந்த ஒரு குற்றப்பின்னணியும் இல்லாதவர்கள்.

மேலும் இவர்களின் தேர்தல் செலவுகள் அனைத்தும் கணக்கு சரிபார்க்கப்பட்டு, தணிக்கை செய்யப்பட்டு வெளியிடப்படும்.

வேட்பாளர்களின் விபரங்கள்

Categories: Elections, MP election 2014, Press Releases
Tags: , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: