மாற்று அரசியலுக்கு நான் தயார்; மாற்றுவதற்கு நீங்கள் தயாரா? – தென் சென்னை வேட்பாளர்

Thursday, March 20th, 2014 @ 4:20PM

“சேவை பெறும் உரிமை சட்டத்தை” தமிழ்நாட்டில் அமுல்படுத்தக்கோரி நானும், இன்னொருவரும் தமிழகம் முழுக்க பைக் பயணம் சென்றோம். இரவு நேரங்களில் அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த ஏதாவது ஒரு கிராமத்தில் தங்கி அவர்கள் பிரச்சனைகள் குறித்து தெரிந்துகொள்வது எங்கள் வழக்கம். அப்படி காஞ்சிபுரம் மாவட்ட்த்தில் புதுப்பாக்கம் என்னும் கிராமத்தில் ஓரிரவு தங்கினோம்.

அன்றிரவு அந்த கிராமத்து இளைஞர்களுடன் பேசும்போது ஒரு மாணவன் எழுந்து, “எப்படி சார் உங்களால் லஞ்சத்த ஒழிக்க முடியும்? நான் B.E படிக்கிற மாணவன். நான் என் சாதி சான்றிதழ் வாங்குறதுக்காக எங்க அப்பாவோட தாசில்தார் அலுவலகத்துக்கு போனேன். தொடர்ந்து 4 நாள் லீவு போட்டு என்ன அலையவிட்டாங்க. 5வது நாள் வெறுத்துப்போய், இனிமேலும் லீவு போட முடியாம, ஒரு 400 ரூ கொடுத்து அத வாங்கிட்டு வந்தேன். நான் சம்பாதிக்க இன்னும் 4 வருசம் ஆகும். நான் ஒரு மாணவன். என் மனச விட்டு இந்த சம்பவம் மறையவே மறையாது? அதே மாதிரி இந்த நாட்ட விட்டும் இந்த லஞ்சம் ஒழியாது” என்றான்.

Dinakaran-Trichy Edition Feb 16

இதே லஞ்சமும், ஊழலும்தான் என் தூக்கத்தை கெடுத்தது. லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்கவே முடியாது என்று நினைத்த என்னையும் வீதிக்கு வந்து போராட வைத்தது. அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போர்தான், இன்று என்னை “அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்கும் சேவை பெறும் உரிமை சட்டத்திற்காக என் குடும்பத்தை, நண்பர்களை மறந்து தமிழ்நாடு முழுக்க பைக் பயணம் போகவைத்தது”. அன்னாவின் போர் எனக்கு தூண்டுகோலாக அமைந்ததென்றால், நான் மேற்கொண்ட என் பயணம் என்னை போராட்ட களத்தில் வலுப்படுத்தியுள்ளது.

ஆனால் இந்த போரில் நான் வெற்றியடைவது நிச்சயம் என்றாலும், உங்கள் ஆதரவின்றி அணுவும் அசையாது. என்னைப் போன்றவர்கள் அரசியலை தூய்மைப்படுத்த துவங்கிய பின் இங்கு மாற்றங்கள் நிகழ துவங்கியுள்ளது. இந்த மாற்றங்கள் தொடர்ந்து நடக்க, நம் சமூகம் முன்னேற உடனடி தேவை – உங்கள் ஆதரவு.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலே நல்ல அரசியலுக்கு வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தென் சென்னையிலே போட்டியிடுகிறேன். உங்களுடைய ஆதரவு 3 வகையாக தேவைப்படுகிறது.

  1. தன்னார்வலர்களாக (Volunteers)
  2. நன்கொடையாக (Donations) – http://tn.loksatta.org/donate/
  3. இணைய, தொலைபேசி உதவி செய்பவராக

மாற்று அரசியலுக்கு நான் தயார்; மாற்றுவதற்கு நீங்கள் தயாரா?

என்னைப் பற்றி மேலும் அறிய : எனது அரசியல் – ஜெய்கணேஷ்

தொடர்பு விவரங்கள்

ஜெய்கணேஷ், வயது 29.
அமைப்பு செயலாளர், லோக்சத்தா கட்சி,
31, தென் மேற்கு போக் சாலை, தி.நகர், சென்னை – 17.
கைபேசி : 9791050514, மி : jaiganeshloksatta@gmail.com;
முகநூல் : https://www.facebook.com/jaiganeshlsp
இணையம் : http://tn.loksatta.org/mp-election-2014/candidate-profiles/south-chennai/

Categories: Elections, MP election 2014
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: