லோக்சத்தா கட்சியின் ‘தேர்தல் அறிக்கை வெளியீடு’ – பாராளுமன்ற தேர்தல் 2014

Wednesday, April 9th, 2014 @ 11:45PM

அன்பு நண்பர்களே,

லோக்சத்தா கட்சியின் வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கான ‘தேர்தல் அறிக்கையை’ வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்

இதில் தேசிய அளவில், மாநில அளவில், மாவட்ட அளவில் மற்றும் தொகுதி அளவில் வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது:

  • தேசிய வாக்குறுதி – அனைத்து மாநிலங்களிலும் ‘சேவை பெறும் உரிமை சட்டம்’ மற்றும் வலுவான லோக் ஆயுக்தா.
  • மாநில வாக்குறுதி – மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு
  • மாவட்ட வாக்குறுதி – போக்குவரத்து ஒழுங்கு
  • தொகுதி வாக்குறுதி – அமைதியான வாழ்க்கை (நெரிசல் குறைப்பு)

லோக்சத்தா கட்சி எப்பொழுதும் தீர்வை நோக்கிய அரசியலையே முன்னிறுத்தும். இந்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் லோக்சத்தா தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக களப்பணி ஆற்றி உருவாக்கிய தீர்வுகள் ஆகும். இவை மக்களை கவர்வதற்கு அளிக்கப்படும் பொய்யான வாக்குறுதியாய் இல்லாமல் நடைமுறை சாத்தியமுள்ள தீர்வுகளாகும்.

இவை தவிர லோக்சத்தா பரிந்துறைக்கும் நீதித்துறை சீர்திருத்தங்கள், காவல்துறை சீர்திருத்தங்கள், தேர்தல் சீர்திருத்தங்கள் மற்றும் லோக்சத்தாவின் அடிப்படை 5௦ வாக்குறுதிகள் ஆகியவற்றுக்கும் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

விரிவான தேர்தல் அறிக்கை இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

Categories: Elections, MP election 2014, Press Releases
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: