சி.பி.ஐ அமைப்பை அரசியல் பிடியிலிருந்து தளர்த்திய உச்சநீதிமன்ற தீர்ப்பை லோக்சத்தா வரவேற்கிறது

Tuesday, May 6th, 2014 @ 10:03PM

மத்திய குற்ற புலனாய்வு துறையினர் (CBI) ஊழல் வழக்குகளில் இணை செயலாளர் மற்றும் அதற்கு மேலுள்ள அதிகாரிகளை விசாரிக்க அரசின் முன் அனுமதியை பெற வேண்டும் எனும் டெல்லி சிறப்பு காவல் நடைமுறை சட்டம் (DPE) பிரிவு 6A-ஐ ரத்து செய்து உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவை லோக்சத்தா கட்சி வரவேற்கிறது.

Central Bureau of Investigation

Image courtesy: http://ibnlive.in.com/

இதுகுறித்து லோக்சத்தா கட்சியின் தேசிய தலைவர் டாக்டர்.ஜெயபிரகாஷ் நாராயண் தெரிவிக்கையில் லோக்சத்தா இந்த அரசியலமைப்புக்கு முரணான சட்டப்பிரிவை திரும்பப்பெற லோக்சத்தா குரல்கொடுத்து வருவதை நினைவுகூர்ந்தார். சமீபத்தில் நடைபெற்ற ஊழல் தடுப்பு சட்டதிருத்தம் குறித்த கூட்டத்திலும் பாராளுமன்ற குழுவினரிடம் கட்சி சார்பில் இதே கருத்து வலியுறுத்தப்பட்டது.

ஏற்கனவே இது அரசியலமைப்புக்கு முற்றிலும் எதிரானது என்று நீதிமன்றங்கள் தெரிவித்திருந்தாலும், மத்திய அரசு பிரிவு 6A-ஐ DPE சட்டத்தில் கொண்டுவந்து குற்ற புலனாய்வில் அரசு தனது அதிகாரத்தை செலுத்தியது என டாக்டர்.ஜே.பி. குறிப்பிட்டார்.

தற்போது இந்த சட்டபிரிவு ரத்து செய்யப்பட்டுவிட்டதால், மத்திய குற்றப்புலனாய்வு துறையினர் எந்தவித அரசியல் தலையீடுமின்றி ஊழல் வழக்குகளில் இனி சுதந்திரமாக எந்த அதிகாரியையும் விசாரிக்கலாம் என அவர் தெரிவித்தார். “சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்தும் இந்த தீர்ப்பு இனி அனைத்து அரசு ஊழியர்களையும் சரிசமமாக நடத்த வழிவகுக்கும்” என்றார்.

இதேபோல், ஊழல் அதிகாரிகளை விசாரிக்க அரசின் அனுமதியை கோரும் ஊழல் தடுப்பு சட்டம், பிரிவு 19 மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டம், பிரிவு 197 ஆகியவையும் திருத்தப்பட வேண்டும் என டாக்டர்.ஜே.பி. தெரிவித்தார்.

இந்த சட்டப்பிரிவுகளை ஒவ்வொரு அரசும் ஊழல் அதிகாரிகளை பாதுகாக்க தவறான வழியில் பயன்படுத்துவதாக அவர் கூறினார். மேலும் தேவைப்பட்டால் இம்மாதிரியான அதிகாரங்கள் தேசிய அளவில் லோக்பால் அல்லது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கோ, மாநில அளவில் லோக்ஆயுக்தாவிற்கோ அளிக்கலாம் என ஆலோசனை கூறியுள்ளார்.

Categories: Press Releases
Tags: , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: