அரசு கேபிள் விவகாரம் – ஊடக சுதந்திரம் வேண்டும்

Saturday, June 7th, 2014 @ 10:37AM

தமிழகத்தில் அரசே கேபிள் டிவி விநியோகம் மற்றும் ஒளிபரப்பை ‘அரசு கேபிள் நிறுவனம்’ என்ற பெயரில் நடத்தி வருகிறது.

அரசு கேபிள் தொழிலில் தொடர்ந்து பொய் பிரச்சாரகங்கள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருவது வருத்தமளிக்கிறது. மக்களை சென்று சேரும் ஊடகங்களில் பாரபட்சம் இருக்கக்கூடாது என்பதுதான் விதி. இந்த விதியைதான் ட்ராய் அமைப்பும் தொடர்ந்து வலியுறுத்துகியது.

ஆனால் தமிழக அரசு நடத்தும் ‘அரசு கேபிள்’ மக்களை மற்ற தனியார் கேபிள் நிறுவனங்களிடம் இருந்து காப்பாற்றுவதாக சொல்லிக் கொண்டு, தான் மட்டுமே கேபிள் தொழில் நடத்த வேண்டும் என்று பிரத்தியேக உரிமையுடன் செயல்படுகிறது. இதில் ரூ 70 மட்டுமே வசூலிப்பதாக பொய் சொல்லி கேபிள் ஆபரேடர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதும், இது குறித்து பலமுறை புகார் அளித்தும் அரசு கேபிள் அதிகாரிகள் புகாரை கண்டுகொள்ளாமல் எந்த நடவடிக்கையும் எடுக்காதது தனிக்கதை.

அரசு கேபிள் தொழில் ஆரம்பித்ததிலிருந்து எதிர்க்கட்சியின் தொலைக்காட்சியான ‘கேப்டன் செய்திகள்’ எந்த இடத்திலும் (ஊரிலும்) தெரியாமல் பார்த்துக்கொண்டனர். பின்னர் சன் நியூஸ் தொலைக்காட்சிக்கும் அதே நிலைமை ஏற்பட்டது. அரசுக்கு ஆதரவான/எதிரான செய்திகளை பொறுத்து மற்ற தொலைக்காட்சிகளும் மிரட்டப்பட்டன.

சென்னையில் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை இருப்பதால் மற்ற 31 மாவட்டங்களை போல் இங்கு கோலோச்ச முடியாத தமிழக அரசு, இதனை மத்திய-மாநில பிரச்சனையாக மாற்றியது.

ஏதோ நம் மாநிலம் மட்டுமே வஞ்சிக்கப்படுவதாக பொய் பிரச்சாரம் செய்தது. மீண்டும் செய்ய முயற்சிக்கிறது. (தற்பொழுதைய மத்திய அரசும் ட்ராய் சொல்வதை ஏற்று செயல்பட்டால் நாளை பி.ஜே.பியும் நம்மை வஞ்சிப்பதாக செய்து வரும்). பலருக்கு தெரியாத ஒன்று – தமிழகம் தவிர காங்கிரஸ் ஆண்ட ஆந்திரா மற்றும் இன்னும் 2 மாநிலங்களுக்கும் அரசே கேபிள் தொழிலில் தாங்கள் ஈடுபட விருப்பம் தெரிவித்து அதுவும் மறுக்கப்பட்டது.

தற்பொழுதைய தமிழக அரசு புரிந்துகொள்ள மறுப்பது ஒன்றுதான். இன்று அரசு கேபிளாக மற்ற தொலைக்காட்சிகளை அவர்கள் முடுக்க நினைப்பது நாளை ஜெயா தொலைக்காட்சிக்கும் நடக்கலாம் என்பதைதான்.

கேபிள் தொழிலில் இருந்து அரசு வெளியேறி பாரபட்சமற்ற ஊடகம் தமிழகத்தில் உருவாக வழி வகுக்க வேண்டும் என்று லோக்சத்தா கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

Categories: Press Releases

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: