குரோம்பேட்டை மாநகர போக்குவரத்து பணிமனையில் குழந்தை தொழிலாளர்கள் பயன்படுத்தியதற்கு நடவடிக்கை

Friday, September 19th, 2014 @ 6:01PM

குரோம்பேட்டை மாநகர போக்குவரத்து பணிமனையில் குழந்தை தொழிலாளர்கள் பயன்படுத்தபடுவதாக லோக்சத்தா கட்சிக்கு கடந்த 13.09.2014 சனிக்கிழமை செய்தி கொண்டுவரப்பட்டது. இது குறித்து லோக்சத்தா உடனடியாக குழந்தை தொழிலாளர்களை காக்கும் ‘Childline India Foundation’ அமைப்பிற்கு புகார் தெரிவித்தது. நம் புகாரை ஏற்றுக்கொண்டவர்கள் இது குறித்து தாம்பரத்தில் செயல்பட்டு வரும் தொழிலாளர் துறைக்கு இந்த புகாரை உடனே தெரிவித்ததாக அறிகிறோம். தொழிலாளர் துறைக்கு தெரிவிக்கப்பட்டபின் ஊடகத்திற்கும் இது குறித்து தெரிவிக்கப்பட்டது. பணிமனையில் வேலை செய்யும் குழந்தை தொழிலாளர்களை ஒரு ஊடகம் படம்பிடித்து அன்று மாலை செய்தியாகவும் வெளியிட்டது – அரசு துறையில் குழந்தை தொழிலாளர்கள்.

Child-Labour

 

இதனை பார்த்த போக்குவரத்துத்துறை அவசர அவசரமாக குழந்தை தொழிலாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி அவர்கள் குறித்த பதிவுகளையும் அகற்றியதாக அறிகிறோம். 15.09.2014 திங்கட்கிழமை ‘Childline India Foundation’ அமைப்பிற்கு பணிமனைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு,பின் தொழிலாளர் துறை அதிகாரிகள் வந்த பிறகே அவர்களும் அனுபதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்கள் அனைவரிடத்திலும் குழந்தை தொழிலாளர்களை தாங்கள் ஒரு போதும் பயன்படுத்தியது இல்லை எனவும், இனிமேலும் பயன்படுத்தமாட்டோம் என்றும் பொது மேலாளர் எழுத்துப்பூர்வ அறிக்கை தந்ததாகவும் அறிகிறோம். ஆனால் இதுவரை குழந்தை தொழிலாளர்கள் பயன்படுத்தபட்டதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் இது மேன்மேலும் தொடரக் கூடிய சாத்தியங்கள இருப்பதாக லோக்சத்தா கட்சி கருதுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாளை 20.09.2014 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் பொது மேலாளரை சந்திக்க முடிவெடுத்துள்ளது.

Categories: Press Releases
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: