குரோம்பேட்டை மாநகர போக்குவரத்து பணிமனையில் குழந்தை தொழிலாளர்கள் பயன்படுத்தியதற்கு நடவடிக்கை : புதிய தகவல்

Sunday, September 21st, 2014 @ 8:55AM

இன்று காலை ‘மாநகர போக்குவரத்து துறையின் குரோம்பேட்டை பணிமனையில்’ குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டது குறித்து லோக் சத்தா கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க கோரி ‘மாநகர போக்குவரத்து துறையின்’ பொது மேலாளரை சந்திக்கச் சென்றனர். கட்சி உறுப்பினர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அதிகாரிகளின் இந்த செயலை லோக் சத்தா கட்சி கண்டிக்கிறது. மேலும் இதுவரை குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதே இல்லை எனவும் அதிகாரிகள் சார்பில் மீண்டும் பொய்யான தகவல் வழங்கப்பட்டது. இது தொடர்பான ஆவணங்களை காண்பிக்கும்படி எழுப்பிய கோரிக்கைகளையும் அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

இதைத் தொடர்ந்து லோக் சத்தா கட்சி உறுப்பினர்கள் குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அங்கேயே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்ட புகைப்படம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இன்று ஆர்பாட்டத்தை ஒளிபரப்பி ஆதரவு அளித்த அணைத்து காட்சி ஊடகங்களுக்கும் லோக் சத்தா கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதே போல் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க லோக் சத்தா கட்சி தொடர்ந்து செயல்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Categories: Press Releases
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: