சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஆலையை மூடக்கோரி ​முகக்கவசம் அணிந்து ​போராட்டம்

Sunday, November 30th, 2014 @ 12:46PM

சென்னை கோட்டுர்புரத்தில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வண்ணமும், அந்தப் பகுதி பொதுமக்களின் உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கும் வண்ணமும் செயல்பட்டு வரும் ரெடி மிக்ஸ் கான்க்ரீட் (RMC) ஆலையை மூடக்கோரி கோட்டூர் நலவாழ்வு சம்மேளனத்துடன் இணைந்து லோக் சத்தா கட்சி முகக்கவசம் அணிந்து இன்று போராடியது. போராட்டத்தில் அந்த பகுதியில் வசிக்கும் மக்களோடு, அங்கே இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கணக்கனோர் கலந்து கொண்டனர். பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்த மாணவர்கள் முகக்கவசம் அணிந்து போராட்டத்தில் பங்குபெற்றனர்.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் அடையார் ஆற்றின் கரைக்கு கான்க்ரீட் போட தற்காலிகமாக நிறுவப்பட்ட இந்த ஆலை இப்போது நிரந்தமாக செயல்பட்டு வருகிறது. சி.எம்.டி.ஏ-வின் விதிகளின் படி இந்த நிலம் திறந்தவெளி மற்றும் பொழுதுபோக்கு பயன்பாட்டிற்கான நிலம் என ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கே தொழிற்சாலை அமைக்க அனுமதி இல்லை. கடலோர ஒழுங்கு மண்டல விதிகளின்படி அடையார் ஆற்றின் கரையில் இருந்து 100 மீட்டர் வரை எந்தவித கட்டுமானத்திற்கும் அனுமதி இல்லை.

Kotturpuram-cement-plant

மேலும் இந்த ஆலை இயங்குவதால் அருகில் இருக்கும் பள்ளி, கல்லூரி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபட்டு அந்தப் பகுதி பொதுமக்களின் உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கிறது. மேலும் ஆலைக்கு கனரக வாகனங்கள் பகல் நேரத்தில் குடியிருப்பு பகுதி வழியாக வந்து செல்வதையும் போக்குவரத்துத் துறை கண்டுகொள்ளவில்லை.

இந்தப் பிரச்சனைக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளுக்கும் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு அனுப்பியும் சரியான பதிலோ, நடவடிக்கையோ இல்லாத காரணத்தால் இப்போது போராட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

விதிகளை மீறி, சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, பொதுமக்களுக்கு தொல்லையாக இருக்கும் இந்த ஆலையை உடனடியாக மூடவேண்டும் என்று கோட்டூர் நலவாழ்வு சம்மேளனத்துடன் இணைந்து லோக் சத்தா கட்சி கோரிக்கை விடுக்கிறது.

நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:

Close
28-Nov-2014 11:03
Close
28-Nov-2014 11:16
Close
28-Nov-2014 11:19
 
Close
28-Nov-2014 11:20
Close
28-Nov-2014 11:21
Close
28-Nov-2014 11:21
 
Close
28-Nov-2014 11:21
Close
28-Nov-2014 11:21
Close
28-Nov-2014 11:23
 
Close
28-Nov-2014 11:23
Close
28-Nov-2014 11:24
Close
28-Nov-2014 11:25
 
Close
28-Nov-2014 11:26
 

Categories: Press Releases

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: