தமிழகத்தில் சேவைபெறும் உரிமை சட்டம் கோரி லோக்சத்தா கட்சி ஒருநாள் உண்ணாவிரதம் – 15 நவம்பர்

Wednesday, November 12th, 2014 @ 5:12PM

RTS posterதமிழகத்தில் சேவை பெறும் உரிமை சட்டம் கோரி லோக் சத்தா கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. இதுவரை அதற்காக கையெழுத்து முகாம்கள், விழுப்புணர்வு நடைபயணம், தமிழகம் முழுவதும் பைக் யாத்திரை, ஆர்ப்பாட்டம் தொடர்ந்து இப்போது உண்ணாவிரதம்.

நாள்: 15 நவம்பர் 2014 (சனிக்கிழமை)
இடம்: வள்ளுவர் கோட்டம் அருகில், சென்னை.
நேரம்: காலை 9 மணி – மாலை 6 மணி

சேவை பெறும் உரிமை சட்டம் என்றால் என்ன?

அனைத்து அரசு சேவைகளுக்கும் கால நிர்ணயம் செய்து (உதாரணமாக ரேஷன் கார்டு 30 நாட்கள், புதிய மின் இணைப்பு 7 நாட்கள்), அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த சேவை வழங்கப்படாவிடில் அதை செய்யத் தவறிய அரசு அதிகாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அந்தத் தொகை பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு நிவாரணமாக வழங்கப்படும். இதனால் அரசு சேவைகள் விரைந்து கிடைப்பதோடு லஞ்சமும் பெருமளவில் குறையும்.

உண்ணாவிரதத்திற்கு ஆதரவளிக்க அழையுங்கள்: 9791050512 / 9791050513.

ஃபேஸ்புக் நிகழ்வு: https://www.facebook.com/events/263593720431515/

Categories: Activities, Right to Services

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: