அழைப்பிதழ்: திருப்பூரில் உண்ணாநிலைப் போராட்டம் – தமிழகத்தில் சேவை பெறும் உரிமை சட்டம் கோரி

Monday, December 8th, 2014 @ 8:30AM

RTS posterதமிழகத்தில் சேவை பெறும் உரிமை சட்டம் கோரி லோக் சத்தா கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. இதுவரை அதற்காக கையெழுத்து முகாம்கள், விழுப்புணர்வு நடைபயணம், தமிழகம் முழுவதும் பைக் யாத்திரை, ஆர்ப்பாட்டம், சென்னையில் உண்ணாநிலை போராட்டம் தொடர்ந்து இப்போது திருப்பூரில் உண்ணாநிலைப் போராட்டம்.

இடம்: திருப்பூர் இரயில் நிலையம் எதிரில், திருப்பூர்.

தேதி: 8-டிசம்பர்-2014 (திங்கள்கிழமை) காலை 10 மணி முதல் 5 மணி வரை

இந்த போராட்டதை தலைமை தாங்கி நடத்த லோக் சத்தா கட்சியின் மாநில தலைவர் திரு. பழனி குமார் அவர்கள் வருகிறார்.

சேவை பெறும் உரிமை சட்டம் என்றால் என்ன?

அனைத்து அரசு சேவைகளுக்கும் கால நிர்ணயம் செய்து (உதாரணமாக ரேஷன் கார்டு 60 நாட்கள், புதிய மின் இணைப்பு 7 நாட்கள்), அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த சேவை வழங்கப்படாவிடில் அதை செய்யத் தவறிய அரசு அதிகாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அந்தத் தொகை பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு நிவாரணமாக வழங்கப்படும். இதனால் அரசு சேவைகள் விரைந்து கிடைப்பதோடு லஞ்சமும் பெருமளவில் குறையும்.

​லோக் சத்தாவின் கோரிக்கைகைகள்

  1. குடிமக்கள் சாசனம் ஏற்கனவே இருக்கும் அரசு துறைகளின் அலுவலகங்களில் அவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.
  2. குடிமக்கள் சாசனம் ஏற்படுத்தப்படாத அரசு சேவைகளுக்கு படிப்படியாக குடிமக்கள் சாசனம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
  3. குடிமக்கள் சாசனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள ‘கால நிர்ணயம்’ பின்பற்றப்பட வேண்டும்.
  4. சட்டத்திற்கு உட்பட்டு, மக்களுக்கு உரிமையாக வழங்கப்பட வேண்டிய சேவைகள் அரசிதழில் வெளியிடப்பட வேண்டும்
  5. அவை பின்பற்றப்படாத பட்சத்தில், நிர்ணயித்த காலத்திற்குள் சேவை வழங்காத அதிகாரியின் மீது புகார் தெரிவிக்க மேல் முறையீட்டு அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
  6. வழங்கப்பட்ட புகார் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொண்டு, சேவை குறைபாடு ஏற்படும்பொழுது, அதற்கு தக்க இழப்பீட்டை பொது மக்களுக்கு வழங்க வேண்டும்.
  7. சிறப்பாக செயல்படும் அரசு அதிகாரிக்கு பரிசு, பாராட்டு.
  8. அரசு சேவைகள் யாவும் தொழில்நுட்பத்துடன் இணைப்பு.
  9. இவற்றை வலியுறுத்தும், 16 மாநிலங்களில் அமுலில் இருக்கும் சேவை பெறும் உரிமை சட்டத்தை தமிழ்நாட்டிலும் அமுல்படுத்த வேண்டும்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க ஊடக நண்பர்களையும் சமூக ஆர்வலர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

Categories: Activities, Press Releases, Right to Services

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: