​நிர்பயாவிற்கு மெழுகுவர்த்தி ஏற்றி இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்

Tuesday, December 16th, 2014 @ 10:11PM

தில்லியில் வன்புணர்வுக்கு உள்ளாகி மரணமடைந்த ‘நிர்பயா’ நிகழ்வு நடந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இந்நிகழ்வை நினைவுகூற இன்று மாலை 6 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சியை லோக் சத்தா கட்சி நடத்தியது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த நிர்பயா சம்பவம் இந்த நாட்டையே உலுக்கியது. வன்புணர்வின் கொடுமைகள் பற்றியும் மற்றும் அதை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் எண்ணற்ற விவாதங்கள் நாடு முழுவதும் நடந்தன. இதன் மூலம் வன்புணர்வுகள் குறைந்துள்ளனவா என்றால் இல்லை என்ற பதிலையே வருத்தத்துடன் சொல்ல வேண்டியுள்ளது. மாறாக இரண்டு வருடங்களில் வன்புணர்வுகள் அதிகரித்துள்ளன.

தேசிய குற்ற ஆவன ஆணையத்தின் புள்ளிவிவரப்படி தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டு பதிவான வன்புணர்வு எண்ணிக்கை 677. இது 2012-ஆம் ஆண்டு 737 என அதிகரித்து கடந்த 2013-ஆம் ஆண்டு 923 என மேலும் அதிகரித்து உள்ளது. இதே போல் வன்புணர்வு தவிர்த்து பெண்கள் மேல் தொடுக்கப்படும் வன்முறைகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தயா முழுவதுமான வன்புணர்வுகளில் 2125 சம்பவங்கள் 14 வயதுக்கும் குறைவான சிறுமிகள் மீது நடத்தப்பட்டுள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

வன்புணர்வு வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படும் சதவீதம் மிகவும் குறைவாக உள்ளது. சுமார் 20% வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டனை பெறுகின்றனர். மேலும் இந்தியா முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் 23,000 வழக்குகளும் (ஃபிப்ரவரி 2014 கணக்கின்படி), உச்ச நீதிமன்றத்தில் 309 வழக்குகளும் (செப்டம்பர் 2012 கணக்கின்படி) நிலுவையில் உள்ளது.
இதனால் குற்றம் செய்தால் தண்டனை இன்றி எளிதில் தப்பித்து விடலாம் என்ற மனநிலை வருகிறது. இதற்கு காவல் துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் மெத்தனப்போக்கே காரணம். காவல் துறை மற்றும் நீதித்துறையில்சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விதிக்கிறோம்.

இன்று கூட வேலூர் அருகே ஆறாம் வகுப்பு படித்த 11 வயது மாணவி வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டர் என்ற செய்தி நமக்கு பேரதிர்ச்சி தருகிறது.

இன்று நாங்கள் கூடியது நிர்பயாவிற்கு நினைவேந்துவதர்க்கு மட்டும் அல்ல. இனி இது போல் சம்பவங்கள் நிகழாமல் நம் அடுத்த தலைமுறை வன்புணர்வும் பெண்கள் மீதான வன்முறையும் இல்லா தலைமுறையாக உருவாக்கும் பொறுப்பு நமக்கு இருப்பதையும் அதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைவு படுத்துவதற்கே!

Close
16-Dec-2014 18:49
 
Close
16-Dec-2014 18:49
 

Categories: Activities, Press Releases
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: