அழைப்பிதழ் – மாற்றுத்திறனாளி சாதனையாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி

Friday, January 9th, 2015 @ 7:14PM

அன்பு நண்பர்களே,

வரும் சனிக்கிழமை மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி சாதனையாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சிக்கு தங்களை அழைப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். இந்நிகழ்ச்சி லோக் சத்தா கட்சி, தோழன் அமைப்பு, லிட் தி லைட் அமைப்பு ஆகியோரால் இணைந்து நடத்தப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் இந்திய கிரிகெட் அணியின் விளையாட்டு வீரர் திரு. ஸ்ரீகாந்த் மற்றும் முன்னாள் கல்லூரி முதல்வர் திரு. பிரபு ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் பார்வையற்றோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியில் இடம்பெற்ற ஒரே தமிழக வீரர் திரு. ரமேஷ் அவர்களுடன் கிரிக்கெட், பண்பலை தொகுப்பாளர், ஜூடோ, பள்ளிக் கல்வி, சிறுவர் பாராளுமன்றம் ஆகிய துறைகளில் சாதனை புரிந்து வரும் பிற மாற்றுத் திறனாளிகளையும் கவுரவித்து அங்கீகரிக்க உள்ளோம். இது போன்ற நிகழ்வுகள் பிற மாற்றுத் திறனாளிகளையும் ஊக்குவித்து அவர்களையும் சாதனையாளர்களாக ஆக்க பெரிதும் துணை புரியும்.

இடம்: ஆர்.கே கன்வெண்ஷன் சென்டர், ஓ.எம்.எஸ் லக்ஷனா, நெ 146, மூன்றாவது தளம், இராயப்பேட்டை சாலை, மயிலாப்பூர், சென்னை.

தேதி: 10-01-2015, சனிக்கிழமை (மாலை 3:30 முதல் 5:30 வரை)

தொடர்புக்கு: 9791050512 / 9894949878

இந்நிகழ்சிக்கு வருகை தந்து தங்கள் ஆதரவை தர வேண்டுமென்று ஊடக நண்பர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட பொதுமக்களை அன்புடன் அழைக்கிறோம்.

Invitation for the felicitation of differently abled achievers on 10-Jan-2015

Categories: Activities, Press Releases
Tags: , , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: