மாற்றுத்திறனாளி சாதனையாளர்களை ​அங்கீகரிக்கும் பாராட்டு நிகழ்ச்சி

Saturday, January 10th, 2015 @ 7:17PM

அன்பு நண்பர்களே,

​இன்று சென்னை மயிலாப்பூரில் மாற்றுத்திறனாளி சாதனையாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி​ சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சி லோக் சத்தா கட்சி, தோழன் அமைப்பு, லிட் தி லைட் அமைப்பு ஆகியோரால் இணைந்து நடத்தப்​பட்டது.​.
​​
​இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் இந்திய கிரிகெட் அணியின் விளையாட்டு வீரர் திரு. ஸ்ரீகாந்த் மற்றும் முன்னாள் ​நந்தனம் கலைக் ​கல்லூரி முதல்வர் திரு. பிரபு ஆகியோர் கலந்து ​கொண்டு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை பாராட்டினர்.

தமிழகத்தின் முதல் பார்வையற்ற கல்லூரி முதல்வர் திரு. பிரபு (நந்தனம் கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர) பேசுகையில் “மாற்றுத் திறனாளிகளுக்கு தேவை அனுதாபம் இல்லை. இந்த சமூகத்தின் ஊக்கம் மட்டுமே” என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பார்வையற்றோர் உலகக் கோப்பை கிரிகெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியில் இடம்பெற்ற ஒரே தமிழக வீரர் திரு. ரமேஷ் அவர்களுடன் கிரிகெட், பண்பலை தொகுப்பாளர், ஜூடோ, பள்ளிக் கல்வி, சிறுவர் பாராளுமன்றம் ஆகிய துறைகளில் சாதனை புரிந்து வரும் பிற மாற்றுத் திறனாளிகளும் அங்கீகரிக்கப் பட்டனர். இது போன்ற நிகழ்வுகள் பிற மாற்றுத் திறனாளிகளையும் ஊக்குவித்து அவர்களையும் சாதனையாளர்களாக ஆக்க பெரிதும் துணை புரியும்.

​சாதனையாளர்கள்​ பட்டியல்​:

திரு.இரமேஷ் – கிரிக்கெட்
திரு.வெங்கடேஷ் – கிரிக்கெட்
திரு.குமார் – பண்பலை தொகுப்பாளார் (FM)
திரு.மனோகரன் – ஜூடோ
தோழி.மோனிஷா – ஜூடோ
தோழி.விஜய சாந்தி – ஜூடோ
தோழி.பாப்பாத்தி – ஜூடோ
திரு.விஜய் – பள்ளி கல்வி
திரு.அருள்ராஜ் – பள்ளி கல்வி
தோழி.சுவர்ண லட்சுமி – சிறுவர் பாராளுமன்றம்
திரு.சாய் கிருஷ்ணா
திரு.விக்னேஷ் – பள்ளி கல்வி
திரு. சிவபிரகாஷ் – பள்ளி கல்வி ​

​நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.​

Close
10-Jan-2015 04:21
Close
10-Jan-2015 04:23
Close
10-Jan-2015 04:24
 
Close
10-Jan-2015 04:33
Close
10-Jan-2015 04:50
 

Categories: Activities, Press Releases

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: