நிலக்கரி வேலைநிறுத்தம் – லோக் சத்தா கட்சி அறிக்கை

Wednesday, January 7th, 2015 @ 8:43PM

அரசின் ஏகபோகத்தால் ஏற்படும் ஆபத்துக்களை நிலக்கரி வேலைநிறுத்தம் அம்பலப்படுத்துகிறது. இந்திய அரசு தன் சக்திக்கு மீறிய பல பணிகளை எடுத்து, தான் செய்ய வேண்டிய அடிப்படை செயல்பாடுகளில் தோல்வியுறுவது நம் முன்னேற்றத்தை தடுப்பதாய் உள்ளது. அரசின் பணி விரிவடைந்ததால் அரசு செய்யவேண்டிய உள்கட்டமைப்பு , சட்டத்தின் ஆட்சி , சேவை வழங்குதல், அடிப்படை வசதிகளான கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவை மிக ஆபத்தான நிலைமையில் தொடர்ந்து இருந்து வருகிறது.

Workers at a coal mine in Giridih district of Jharkhand on Tuesday.

Workers at a coal mine in Giridih district of Jharkhand on Tuesday. Image Courtesy: The Hindu

நிலக்கரி வேலைநிறுத்தமும் கட்சிகளின் மற்றுமொரு அரசியல் விளையாட்டாக மாறாமல் தடுக்க நாம் இப்பொழுது நமது குரலை உயர்த்த வேண்டும். நாட்டிற்கு எதிராக தொழிலாளர்களோ இல்லை தொழிலாளர்களுக்கு எதிராக நாடு என்பதோ மோசமான விளைவுகளை உண்டாக்கும்.

தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாப்பாக அமையும் பட்சத்தில் எந்த துறையிலும் அரசின் ஏகபோகத்தை அவர்கள் வலியுறுத்த முடியாது. மக்களுக்காகத்தான் நாடு.

நாகரீகமான சமூகத்தில் எவரும் பொருளாதாரத்தையும், பொது நன்மையையும் பணயம் வைக்க முடியாது. ஊழியர்களின் பணி பொது நோக்கத்திற்காக மட்டுமே இருத்தல் வேண்டும். அரசாங்கம்என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒன்று.

அமைப்பு சார்ந்த தொழிலில் இன்று வரை 8% தொழிலாளர்களே இருக்கிறார்கள். வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் லட்சக்கணக்கானவர்களை அமைப்பு சார்ந்த துறையாக கொண்டுவருவதே நம் இலக்காக இருக்க வேண்டும்.

நமக்கு ஏற்கனவே ஒவ்வொரு ஆண்டும் 180MMT நிலக்கரி பற்றாக்குறை இருந்து வருகிறது. தற்பொழுது இருக்கும் மின் தடை பொருளாதாரத்தையே முடக்குகிறது. நடைமுறை நிலைமை தொடர்வது சரியான வாய்ப்பல்ல. வேலைநிறுத்தம் முடிவுக்கு வரவேண்டும்.

பங்குகள் குறித்து மக்களும், பாராளுமன்றமும் முடிவு செய்யவேண்டும்.தொழிலாளர்கள் தமது உரிமைகளை பாதுகாக்க முடியும்; ஆனால் பொதுகொள்கையை ஆணையிட முடியாது.

அரசாங்கம் வாக்காளர்களுக்கும், வரி செலுத்துவோருக்கும் சொந்தமானதே தவிர அரசியல் கட்சிகளுக்கும்,பணியாளர்களுக்கும் சொந்தமானதல்ல. பொது சொத்தின் காப்பாளர்களுக்கும் அதனை தவறாக நிர்வகிக்கும் எந்த உரிமையும் இல்லை.

பொதுத்துறையை தங்களுக்கான் தனியார் துறையை போல் பொதுஊழியர்கள் கருதுகிறார்கள். பொதுத்துறையா அல்ல தனியார் துறையா என்பது தேவையற்றது. அதன் கடமையை அது நிறைவேற்ற வேண்டும்.

சீன தலைவர் டங் சியாவுபிங் சொன்னது போல, பூனை கறுப்பா, வெள்ளையா என்பதை விட அது எலியை பிடிக்கிறதா என்பதே முக்கியம். நம் கவனம் பலன்களில் இருக்க வேண்டும்.

Categories: Press Releases
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: