இ. ஆ. ப. அதிகாரி திரு. டி. கே. ரவி அவர்களின் மரணம் – லோக் சத்தா கட்சி இரங்கல் – ஆட்சியரை அடக்கினாலும் போராட்டம் அடங்காது!

Thursday, March 19th, 2015 @ 10:53AM

D K Ravi IASகர்நாடக இ.ஆ.ப அதிகாரியான திரு. டி. கே. ரவி அவர்களது மரணம், ஒரு பேரிழப்பு. எழுச்சியும், நம்பிக்கையும் அளித்த ஓர் இளம் சுடர் பாதியிலேயே அணைக்கப்பட்டுவிட்டது. அவரது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், அவர் செயற்பாட்டினால் வாழ்வில் மாற்றம் அடைந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

அவர் மரணத்திற்கும் மக்கள் நலன் பேணுவதற்கு அவர் செய்த தீரமிகு பணிகளுக்கும் தொடர்புள்ளது. இது கொலையோ அல்லது தாங்கொணா மன அழுத்தத்தால் செய்து கொண்ட தற்கொலையோ அன்றி வேறில்லை. எதுவாயினும், உண்மையை வெளிக்கொணர துரிதமான, நம்பகமான, முழுமையான விசாரணை உடனடியாகத் தொடங்கப்படவேண்டும். அவர் விட்டுச்சென்ற பணிகளை நாம் நிறைவு செய்யவேண்டும்.

அரசின் வணிகவரித் துறை, நிலவணிகம் செய்வோரின் கணக்குகளையும் வரி ஏய்புகளையும் பொதுவில் வெளிப்படுத்த வேண்டும். அவரது உயிரிழப்பு வீணாக்க விடப்படக்கூடாது. மூத்த ஆட்சித் துறை அதிகாரிகளும், ஊழல் தடுப்பு அதிகாரிகளும், காவல் துறையினரும், நீதித் துறையினரும் தத்தம் கடமைகளை முறையாகச் செய்திருந்தால், ரவி, சத்யேந்திர தூபே, மஹந்தேஷ், மஞ்சுநாத் போன்ற தீரர்களை நாம் இழக்க நேரிட்டுருக்காது.

நமது அரசியந்திரத்தை வலுப்படுத்த வேண்டும். மக்கள் நலம் பேணும் பொறுப்பை ஒருசிலர் மட்டுமே சுமக்குமாறு செய்துவிட்டனர். மக்கள் நலமே முதன்மையானது என்பதை உணர்ந்து பலரும் பொறுப்பேற்க முன் வர வேண்டும். பொது மக்களின் கள்ளமற்ற குமுறல், நேர்மைக்கும், ஆட்சித் திறனுக்கும், நம்பகத்தன்மைக்கும் அவர்கள் எவ்வளவு ஏங்குகிறார்கள் என்பதைக் காட்டுகின்றது. ஆட்சிதுறையினர் இத்தகைய மக்கள் ஆதரவைக் கண்டு மன உறுதியும் துணிவும் பெற வேண்டும்.

டி. கே. ரவி அவர்களது மரணம், ஊழலுக்கு எதிரான போரின் மரணமாக அமைந்துவிடலாகாது!

Categories: Press Releases

1 Comment to "இ. ஆ. ப. அதிகாரி திரு. டி. கே. ரவி அவர்களின் மரணம் - லோக் சத்தா கட்சி இரங்கல் - ஆட்சியரை அடக்கினாலும் போராட்டம் அடங்காது!" add comment
mhanukkannan
March 20, 2015 at 10:12 am

Yes. I do agree. We need joint movement to eliminate this atrocities. Also there is continuous agitation from kolar public. This should be centralised and extend our support to them.

Leave a Reply

%d bloggers like this: