தகவல் உரிமை சட்ட போராளி மீது பொய் வழக்கு மற்றும் ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி மறுத்த காவல் துறையை கண்டித்து​ பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம்

Saturday, April 25th, 2015 @ 7:29PM

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சியை சேர்ந்த திரு. கமலஹாசன் என்ற தகவல் உரிமை சட்ட போராளியை கடந்த ஏப்ரல் 16 அன்று பொய் வழக்கில் காவல்துறை கைது செய்தது. மேலும் இந்த கைதை கண்டித்து ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த லோக்சத்தா கட்சிக்கு அனுமதியும் மறுத்துள்ளனர். இதைக் ​​​கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தியது.

திரு. கமலஹாசன் அவர்களை “அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கு பிரிவில் குற்றம் சாட்டி கைது செய்துள்ளனர். அதிகாரியை பணி செய்யாமல் தடுக்கும் பிரிவை அதிகார துஷ்பிரயோகதிற்கும், சமூக ஆர்வலர்களை அடக்க அவர்கள் மீது பொய் வழக்கு போடுவதற்குமே பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள்.

முக்கியமாக திரு. கமலஹாசன், அதிகாரிகள் அவரை தாக்கியதை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது அவரின் புகாரை ஏற்காமல் அதற்கு பின்னர் அரசு அதிகாரிகள் கொடுத்த புகாரை ஏற்று பாரபட்சம் காட்டியுள்ளனர். இது போல் காவல் நிலையத்தில் பொது மக்கள் கொடுக்கும் புகார் மீதான விசாரணையை நீதிமன்றம் செய்ய வேண்டும். ஆனால் காவல் துறை அதிகாரிகளே அரசுக்கோ, அரசு அதிகாரிகளுக்கோ எதிராக வரும் புகார்களை ஏற்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்தோ, அல்லது அதிகாரிகளுக்கு சார்பாக புகார் அளிக்க வந்தவரையே கைது செய்வது தொடர்ந்து நடக்கிறது. இது போன்ற சம்பவங்கள் காவல் துறை மீதான நம்பகத்தன்மையை குறைத்து பொதுமக்களுக்கு காவல் துறை மீது வெறுப்பையும் அச்சத்தையுமே ஏற்படுத்துகிறது.

இவற்றை தடுக்க பொதுமக்கள் இணையம் மூலமே புகார் பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்த வேண்டும் எனவும் (ஏற்கனவே சில காவல் நிலையங்களில் இந்த வசதி இருப்பினும் பதிவு செய்யப்படும் புகார்கள் கண்டுகொள்ளப்படாமல் இருக்கின்றன), காவல் நிலையங்களில் கண்காணிப்பு காமெராக்கள் பொருத்த வேண்டும் எனவும் லோக்சத்தா கட்சி கோருகிறது.

இது போன்று சமூக ஆர்வலர்களை ஒடுக்கும் முயற்சிகளை ஊடகங்கள் எதிர்த்து சமூக ஆர்வலர்களை ஆதரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கிறது.​ மேலும் இது குறித்து விரிவான விசாரணை கோரியும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் வலியுறுத்துகிறது.

இது போன்ற தகவல் உரிமை சட்டத்தை முடக்கும் முயற்சிகளை எதிர்த்து லோக்சத்தா கட்சி தொடர்ந்து போராடும் வண்ணம் இன்று (ஏப்ரல் 25) பெரம்பலூர் மாவட்டத்தில் ஆர்பாட்டம் நடத்த மாவட்ட ​காவல்துறையிடன் அனுமதி கோரியிருந்தோம். எங்களுக்கான அனுமதி நேற்று இரவு மறுக்கப்பட்டது. காவல்துறை எங்களுக்கு வழங்கியுள்ள அனுமதி மறுப்பு கடிதம் எந்த ஒரு அமைப்பும் பெரம்பலூர் மாவட்டத்தில் ஜனநாயக போராட்டம் நடத்த முடியாது என்பதும், சொல்லப்படாத 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையும் காட்டுகிறது.

மேலும் அனுமதி மறுப்பிற்கு காரணமாக சமூக விரோதிகள் மற்றும் தீவிரவாதிகள் குழுக்களால் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் சூழ்நிலை இருப்பதாக தெரிவிக்கிறது. அப்படியொரு அசாதர சூழல் நிலவுவதால் தமிழக அரசாங்கம் மத்திய அரசாங்கத்திடம் பேசி பெரம்லூர் மாவட்டத்திற்கு ராணுவ உதவியை உடனடியாக கோர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.

அதே சமயம் லோக்சத்தா நீதிமன்றத்தை நாடி மறுக்கப்பட்ட அனுமதியை பெற்று கண்டிப்பாக பெரம்பலூரில் சமூக ஆர்வலர்களின் பாதுகாப்புக்காக எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சனையும் இல்லாமல் போராட்டம் நடத்தப்படும். எங்கு தகவல் உரிமை போராளி தாக்கப்பட்டாலும், பொய் வழக்கில கைது செய்யப்பட்டாலும் லோக்சத்தா கட்சி அவர்களுக்கான குரலாக ஓங்கி ஒலிக்கும் என்றும் தெரிவித்துகொள்கிறது.

இன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காவல்துறையின் அனுமதி மறுப்புக் கடிதம் ஆகியவற்றை இணைத்துள்ளோம்.

Close
24-Apr-2015 18:37
Close
25-Apr-2015 12:19
Close
25-Apr-2015 12:52
 

Categories: Activities, Press Releases
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: