​​தகவல் உரிமை சட்ட போராளி பொய் வழக்கில் கைது – லோக்சத்தா கட்சி கண்டனம்

Sunday, April 19th, 2015 @ 7:47PM

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சியை சேர்ந்த திரு. கமலஹாசன் என்ற தகவல் உரிமை சட்ட போராளியை பொய் வழக்கில் காவல்துறை கைது செய்ததை லோக்சத்தா கட்சி கண்டிக்கிறது. இது போன்ற தகவல் உரிமை சட்டத்தை முடக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

திரு. கமலஹாசன் அவர்களை “அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கு பிரிவில் குற்றம் சாட்டி கைது செய்துள்ளனர். அதிகாரியை பணி செய்யாமல் தடுக்கும் பிரிவை அதிகார துஷ்பிரயோகதிற்கும், சமூக ஆர்வலர்களை அடக்க அவர்கள் மீது பொய் வழக்கு போடுவதற்குமே பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள்.

முக்கியமாக திரு. கமலஹாசன், அதிகாரிகள் அவரை தாக்கியதை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது அவரின் புகாரை ஏற்காமல் அதற்கு பின்னர் அரசு அதிகாரிகள் குடுத்த புகாரை ஏற்று பாரபட்சம் காட்டியுள்ளனர். இது போல் காவல் நிலையத்தில் பொது மக்கள் கொடுக்கும் புகார் மீதான விசாரணையை நீதிமன்றம் செய்ய வேண்டும். ஆனால் காவல் துறை அதிகாரிகளே அரசுக்கோ, அரசு அதிகாரிகளுக்கோ எதிராக வரும் புகார்களை ஏற்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்தோ, அல்லது அதிகாரிகளுக்கு சார்பாக புகார் அளிக்க வந்தவரையே கைது செய்வது தொடர்ந்து நடக்கிறது. இது போன்ற சம்பவங்கள் காவல் துறை மீதான நம்பகத்தன்மையை குறைத்து பொதுமக்களுக்கு காவல் துறை மீது வெறுப்பையும் அச்சத்தையுமே ஏற்படுத்துகிறது.

இவற்றை தடுக்க பொது மக்கள் இணையம் மூலமே புகார் பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்த வேண்டும் எனவும் (ஏற்கனவே சில காவல் நிலையங்களில் இந்த வசதி இருப்பினும் பதிவு செய்யப்படும் புகார்கள் கண்டுகொள்ளப்படாமல் இருக்கின்றன), காவல் நிலையங்களில் கண்காணிப்பு காமெராக்கள் பொருத்த வேண்டும் எனவும் லோக்சத்தா கட்சி கோருகிறது.

தகவல் உரிமை சட்ட போராளி திரு. கமலஹாசன் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என லோக்சத்தா கட்சி கோருகிறது. இது போன்று சமூக ஆர்வலர்களை ஒடுக்கும் முயற்சிகளை ஊடகங்கள் எதிர்த்து சமூக ஆர்வலர்களை ஆதரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கிறது.

திரு. கமலஹாசன் வழக்கின் விவரங்கள்

Categories: Press Releases

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: