தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் – விசாரிக்க கால் சென்டர் வேண்டும்

Monday, June 8th, 2015 @ 2:57PM

இந்த வருடம் கல்வியாண்டு ஆரம்பிக்கும் தருவாயில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் பள்ளிக் கட்டணம் தொடர்பான பிரச்சனைகளை களைய, அரசு நிர்ணயம் செய்த கட்டணதை விட அதிகம் வசூலிக்கும் பள்ளிகள் மீது புகார் அளிக்க கால் சென்டர் உருவாக்க வேண்டும், பள்ளிகளின் கட்டணத்தை அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும் லோக்சத்தா கட்சி கோருகிறது.

அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் சேர்க்கை விகிதம் அதிகரித்து வருவது தனியார் பள்ளிகள் மீது பெற்றோர் அதிகம் நம்பிக்கை வைதிருப்பதை காட்டுகிறது. இதற்கு அரசாங்கம் அரசு பள்ளிகள் மீது கவனம் செலுத்தாமை, அரசு பள்ளிகளில் தன்னாட்சி இல்லாமை, பாடம் தவிர்த்து இன்னபிற செயல்பாடுகளில் (Extra-curricular activities) கவனம் செலுத்தாமை ஆகியவை காரணம். இவற்றை அரசு நிவர்த்தி செய்ய வேண்டும் என நாம் கோரும் வேளையில் தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் அரசாங்கம் அரசு பள்ளிகளில் ஒரு மாணவருக்கு செலவு செய்யும் தொகையை காட்டிலும் தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயம் செய்திருக்கும் தொகை மிக அதிகம் என்ற குற்றச்சாட்டிலும் நியாயம் இருப்பதாக லோக்சத்தா கட்சி கருதுகிறது.

இதற்கு நிரந்தர தீர்வாக அரசு – தனியார் கூட்டு முயற்சி மூலம் (Voucher system) தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் பள்ளிக் கட்டணதை அரசே செய்ய வேண்டும் என்பதே லோக்சத்தாவின் கொள்கை.

எனினும் தற்போதுள்ள பிரச்சனைகளுக்கு தற்காலிகமாக தீர்வு காண்பதும் இந்த வருடதிற்கான மாணவர் சேர்க்கைக்கு பெரிதும் பயனளிக்கும். இதற்கான தீர்வு பின்வருமாரு:

பிரச்சனை: தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் திருத்தி அமைக்கப்படுள்ளது என்று தனியார் பள்ளி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. அதன் படியே அதிக கட்டணமும் வசூலிக்கின்றன. எனினும் அரசின் பள்ளிக்கல்வித்துறையின் இணையதளத்தில் இது பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை. இது பெற்றோருக்கு மிகவும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

தீர்வு: உடனடியாக இந்த வருடம் கல்விக் கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளதா என அரசு தெளிவு படுத்த வேண்டும். அப்படி திருத்தி அமைக்கப்பட்டிருந்தால் அதை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

பிரச்சனை: நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட அதிகம் வசூலிக்கும் பள்ளிகள் மீது புகாரளிக்க பெற்றோர் தயங்குகின்றனர். இதையும் மீறி, மாவட்ட கல்வி அதிகாரியிடம் அளிக்கப்படும் புகார்கள் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

தீர்வு: பெற்றோர்கள் புகாரளிக்க வசதியாக இலவச தொலைபேசி எண் (கால் சென்டர்) உருவாக்கி அங்கே அளிக்கப்படும் புகார்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

பிரச்சனை: தனியார் பள்ளிகளில் நடனம், கராத்தே போன்ற பாடம் தவிர்த்த பிற செயல்பாடுகள் (Extra-Curricular Activities) மாணவருக்கும் பெற்றோருக்கும் விருப்பம் இருப்பினும் இல்லாவிடினும் அதற்கான கட்டணத்தை முழுமையாக செலுத்தும்படி கட்டாயப்படுத்துகிறார்கள்.

தீர்வு: மாணவருக்கு ஆர்வமுள்ள செயல்பாடுகளை பெற்றோர் விருப்பப்படி தேர்வு செய்யுமாறு அமைக்க அரசு உத்தரவிட வேண்டும்.

மேற்கூறிய தீர்வுகளை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டுமென லோக்சத்தா கட்சி கோருகிறது.

Categories: Press Releases

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: