லோக்சத்தா கட்சி தமிழ்நாடு மாநில பொதுக்குழு

Wednesday, June 3rd, 2015 @ 4:08PM

லோக்சத்தா கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் கடந்த ஞாயிறு (31 மே, 2015) அன்று திருப்பூரில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தேசிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் கடந்த ஒரு வருட செயல்பாடுகள் மற்றும் நிதி நிலைமை ஆகியவற்றை திரு. ஜெகதீஸ்வரன் அவர்கள் தாக்கல் செய்தார். மேலும் செய்தித்தொடர்பு யுக்தி, அரசியல் யுக்தி, அமைப்பு முன்னேற்றம் ஆகியவை விவாதிக்கப்பட்டது. மேலும் கட்சியின் முக்கிய கொள்கைகள் பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது. அடுத்த ஒரு வருடத்திற்கான செயல்பாடு முடிவு செய்யப்பட்டது.

சிறப்பாக செயல்படுவதால் திருப்பூர் மாவட்ட லோக்சத்தா அணிக்கு பாராட்டு வழங்கப்பட்டது. அடுத்த ஒரு வருடத்திற்கு மாநில அணி, திருப்பூர் மாவட்டத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது. வரும் 2016-ஆம் ஆண்டு வரும் மாநகராட்சி தேர்தலில் திருப்பூர் மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் போட்டியிட தயாராகும் எனவும் அதற்கான தலைவர்களை உருவாக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் உறுப்பினர்களுக்கு தொடர்ந்து கொள்கை பயிற்சி, சமூக ஊடகங்களில் (Facebook, WhatsApp உள்ளிட்டவை) திருப்பூர் லோக்சத்தா கட்சியை பிரபலப் படுத்தும் முயற்சிகள் எடுக்கப்படும். திருப்பூரில் தொடர்ந்து இளைஞர்கள் மற்றும் பெண்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகாண கட்சி உழைக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டது. இவற்றை மாநில பொதுச் செயலாளர் திரு. குமார் அவர்கள் தெரிவித்தார்.

புதிதாக ஏற்படுத்தப்பட்ட பொறுப்புகளுக்கு நியமனங்களை மாநில தலைவர் திரு. பழனி குமார் அவர்கள் அறிவித்தார். நிகழ்வின் இறுதியாக பொதுக்குழுவிற்கு வருகைதந்த உறுப்பினர்களுக்கு அவர் நன்றியுரை தெரிவித்தார்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இத்துடன் இணைத்துள்ளோம்.

Close
31-May-2015 19:01
Close
31-May-2015 19:02
 

Categories: Press Releases
Tags:

1 Comment to "லோக்சத்தா கட்சி தமிழ்நாடு மாநில பொதுக்குழு" add comment
Muthu
June 5, 2015 at 7:04 am

Hi Mr. Palanivel and Jagadeeswaran and others:

I should appreciate your efforts and untiring efforts in getting the politics cleaned up, by your team.

But, I doubt, whether you’re having the right strategy to make clean politics or just trying to follow BJP and AAP, in making yet another vote bank politics…

I’m not concluding.. But, just doubting…

More of my thoughts are at the below link…

https://groups.yahoo.com/neo/groups/HamaraBharat/conversations/messages/4391

Go through it and let me know your thoughts…

BTW, TamilNadu Loksatta FaceBook page has only one member. I doubt, whether that is the right face book page.

https://www.facebook.com/groups/23390704994/

Could you check and confirm.

Thx…

Muthu

Leave a Reply

%d bloggers like this: