தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் நடைபெறும் ஊழல்களும், முறைகேடுகளும்
Sunday, August 9th, 2015 @ 8:27PM
பயணிப்போர் உரிமைகள் இயக்கம் பொதுமக்கள் மேற்கொள்ளும் பயணங்களில் ஏற்படும் இன்னல்களை போக்கவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பேருந்துகளில் சேவை குறைபாடுகளை களையவும் தொடர்ந்து உழைத்து வருகிறது. லோக்சத்தா கட்சி பயணிப்போர் நலச் சங்கத்தில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது.
சமீப காலமாக எங்கள் பார்வைக்கு பொதுமக்கள் கொண்டுவந்த சேவை குறைபாடுகள், போக்குவரத்து துறையில் நடக்கும் சில நூதன திருட்டு, ஊழல்களை தொடர்ந்து பயணிப்போர் நலச் சங்கம் சில போக்குவரத்து கழகங்களுக்கு சென்று ஆய்வுகள் நடத்தியும், தகவல் பெறும் உரிமை மூலம் பல உண்மைகளையும் வெளிக்கொண்டு வந்துள்ளது. அந்த விசயங்களை பத்திரிக்கையாளர் மன்றத்தின் மூலம் பொதுமக்களுக்கு எடுத்துசெல்வதற்காகவே இந்த சந்திப்பு.
1) அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பேருந்துகள் தாங்கள் வசூலிக்க வேண்டிய கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். குறிப்பாக சாதாரண பேருந்துகளில் விரைவு பேருந்துகளுக்கான கட்டணத்தை மக்களிடம் இருந்து வசூலிக்கிறார்கள். இதற்கு ஒரு உதாரணமாக நாங்கள் விழுப்புரம் கோட்டம் திருவள்ளூர் மண்டலத்தில் ஆய்வு மேற்கொண்டதில் தடம் எண் 97, 197, 582, 522, 82C, 171, 172, 173, 86, 105C, 92, 91 ஆகிய அனைத்து சாதாரண பேருந்துகளிலும் விரைவு பேருந்திற்கு வசூலிக்க வேண்டிய கட்டணம் வசூலிக்கிறார்கள்.
Route No. | Type | From | To | Distance | Ordinary Fare | Express Fare |
---|---|---|---|---|---|---|
197 | Ordinary | Thiruthani | Thiruvalllur | 42 km | Rs.18 | Rs.24 |
522 | Ordinary | Thiruvallur | Uthukottai | 27 km | Rs.12 | Rs.16 |
582 | Ordinary | Thiruvallur | Uthukottai | 27 km | Rs.12 | Rs.16 |
92 | Ordinary | Uthukottai | Periyapalayam | 18 km | Rs. 8 | Rs. 11 |
2) விரைவு பேருந்துகள் என்பது சாதாரண பேருந்தைபோல் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் நின்று செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால் பெரும்பாலான பேருந்துகள் (விரைவு பேருந்துக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டும்) அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்கிறது. முதல் பத்தியில் சொன்ன அனைத்து தடங்களும் அவ்வாறே செயல்படுகின்றன.
Route No. | Type | From | To | Distance | Ordinary Fare | Express Fare |
---|---|---|---|---|---|---|
105C | Express | Thiruvallur | Arakonam | 34 km | Rs.15 | Rs.20 |
92 | Express | Uthukottai | Redhills | 42 km | Rs. 18 | Rs. 24 |
82C | Express | Thiruvallur | Chengalpat | 59 km | Rs. 25 | Rs. 34 |
171 | Express | Thriuvallur | Gummidipoondi | 51 km | Rs. 22 | Rs. 29 |
3) மோட்டார் வாகன விதிகள் 1989 பிரிவு 246 (உட்பிரிவு (c)) ன்-படி விரைவு பேருந்துகளின் வழித் தடத்தின் மொத்த தொலைவு 80 கி.மீ-க்கு குறைவாக இருக்கக்கூடாது. இரு கட்டணம் மாறும் நிலைகளுக்கு (Stages) இடையேயான தொலைவு 25 கி.மீக்கு குறைவாக இருக்கக்கூடாது. ஆனால் இங்கு இயக்கப்படும் எந்தவொரு விரைவுப் பேருந்திலும் இந்த விதிமுறை பின்பற்றப்படுவதில்லை. முதல் பத்தியில் சொன்ன அனைத்து தடங்களும் இதற்கும் பொருந்தும்.
Route No. | Type | From | To | Distance |
---|---|---|---|---|
522 | Express | Thiruvallur | Uthukottai | 27 km |
105C | Express | Thiruvallur | Arakonam | 35 km |
92 | Express | Uthukottai | Periyapalayam | 18 km |
Stage of express services falling in short distances (less than 25 kms)
- Thiruthani – Chennai via Thiruvallur
-
Uthukottai – Chennai via Periyapalayam
-
Thiruvallur – Chengalpat via Sriperumbudur
-
Kanchipuram – Chennai via Sriperumbudur
4) போக்குவரத்து துறையின் நிபந்தனைப்படி, எல்லா தடங்களிலும் சாதாரண பேருந்துகள் 60%, விரைவு மற்றும் மற்ற பேருந்துகள் 40% இயக்கப்பட வேண்டும். மாறாக 90% விரைவு பேருந்துகளும், 10% சாதாரண பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அதே போல் சில வழித்தடங்களில் நகர பேருந்துகள் முற்றிலுமாக இயக்கப்படாமல் உள்ளது. உதாரணமாக திருத்தணி – கனகம்மா சத்திரம், ஊத்துக்கோட்டை- பெரியபாளையம், ஊத்துக்கோட்டை – திருவள்ளூர் போன்ற தடங்களில் நகர பேருந்துகளே இல்லை.
1. Thiruvallur – Arakonam
2. Thiruvallur – Sriperumbudur
Town services not operated
- Thiruvallur – Kanakamma Chatram (24 km)
-
Thiruthani – Thomur (26 km)
-
Uthukottai – Thiruvallur (27 km)
-
Thiruvallur – Poonamallee (26 km)
-
Thiruvallur – Avadi (22km)
-
Thiruvallur – Thakkolam, (30 km)
-
Thiruvallur – Periyapalayam. (30 km)
-
Uthukottai – Periyapalayam (18km)
5) இதை தவிர ஒரு குறிப்பிட்ட குற்றச்சாட்டாக பின் வருவதை பதிவு செய்கிறோம். 16 கி.மீ தொலைவு தூரம் கொண்ட பூந்தமல்லி – மதுரவாயல் – கோயம்பேடு செல்லும் சாலையில் அனைத்து விரைவு பேருந்துகளிலும் அரசு நிர்ணயித்தபடி வசூலிக்க வேண்டிய கட்டணம் ரூ.9 ஆகும். ஆனால் இத்தடத்தில் இயங்கும் எல்லா பேருந்துகளிலும் அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு புறம்பாக ரூ.14 வசூலிக்கப்படுகிறது. இதனால் ஒரு பயணியிடமிருந்து மட்டும் ரூ.5 அதிகப்படியாக வசூலிக்கப்படுகிறது. இதன்படி ஒரு நாளைக்கு இத்தடத்தில் குறைந்தபட்சம் 400 முறை இயக்கப்படும் பேருந்துகளின் மூலம் அரசு போக்குவரத்து, பயணிகளிடமிருந்து முறைகேடாக வசூலிக்கப்பட்டிருக்கும் கட்டணம் ரூ.80,000 (400 முறை * 40 பயணிகள் * 5 ரூ)ஆக இருக்கும். இதே கணக்கின்படி ஒரு வருடத்திற்கு 2 கோடி 88 லட்சம். (80,000 * 30 * 12) மற்றும் புதிய கட்டணம் வசூலிக்கப்பட்ட நாளிலிருந்து (நவம்பர் 2011) இது நாள் வரை – 10 கோடி 80 லட்சம் முறைகேடாக வசூலிக்கப்பட்டிருக்கும்.
From | To | Via | Distance | Fare to be collected | Current collection fare |
---|---|---|---|---|---|
Poonamallee | Koyambedu | Maduravoyal | 16 km | ₹9 | ₹14 |
Poonamallee | Koyambedu | Porur,Guindy | 24 km | ₹14 | ₹14 |
6) நெடுஞ்சாலை துறையால் வழங்கப்பட்டுள்ள தொலைதூரத்தைவிட அதிகமான தொலைதூரம் போக்குவரத்து துறையால் கடைப்பிடிக்கப்பட்டு அதற்கேற்றார்போல் அதிக கட்டணமும் வசூல் செய்யப்படுகிறது. உதாரணத்திற்கு திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து பூந்தமல்லி பேருந்து நிலையம் வரை நெடுஞ்சாலை துறை அளவீட்டின் படி 25.8 கி.மீ ஆகும். போக்குவரத்து துறையின் அளவீட்டின்படி 29 கி.மீ என்ற தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற முறைகேடு பல வழித்தடங்களில் நடந்துவருகிறது என்பதை தெரிவித்துகொள்கிறோம்.
From | To | Transport | Highway | Diff |
---|---|---|---|---|
Kanchipuram | Sriperumbudur | 40 km | 35 km | 5 km |
Thiruvallur | Poonamallee | 29 km | 26 km | 3 km |
Koyambedu | Thiruvanmiyur | 26 km | 17 km | 9 km |
Koyambedu | Tirupati | 152 km | 167 km | 15 km |
Koyambedu | Avadi | 22 km | 17 km | 5 km |
Thiruvallur | Sriperumbudur | 23 km | 20 km | 3 km |
Thiruvallur | Thiruthani | 42 km | 40 km | 2 km |
7) அரசு அனுமதியில்லாமல், 1 To 1 (One to One), 1 TO 2, 1 TO 3, 1 TO 4, 1 TO 5, Deluxe. போன்ற சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
8) நகர பேருந்துகளிலும் குறைந்தபட்ச கட்டணம் 3 ரூபாய் வசூலிப்பதற்கு பதிலாக சில பகுதிகளில் 4 ரூபாயும், சில பகுதிகளில் 5 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
9) உள்ளூர் தனியார் பேருந்துகளும் சாதாரண கட்டணத்திற்கு பதிலாக, விரைவு பேருந்துக்கான கட்டணத்தையே வசூலிக்கிறது.
மேற்கூரிய விசயங்களை ஒரு மனுவாக தமிழக போக்குவரத்து துறைக்கு 22.06.2014 அனுப்பிய பிறகு காஞ்சிபுரம் மண்டல மக்கள் தொடர்பு அதிகாரி எங்கள் அலுவலகம் வந்து மேற்கூரிய யாவும் உண்மையென்றும் இன்னும் 3 மாதத்தில் இதனை சரி செய்வதாக உறுதியளித்தார். ஆனால் ஒரு வருடம் ஆகியும் இதுவரை எந்த மாற்றமும் ஏற்படாமல், மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுவதால் இந்த பத்திரிக்கையாளர் மன்றத்தில் இதனை சமர்ப்பிக்கிறோம்.
Categories: Press Releases