லோக்சத்தாவின் ‘தமிழக சட்டமன்ற நேரடி ஒளிபரப்பு’ கோரிக்கை – CPI,CPM கட்சிகளுடன் சந்திப்பு

Thursday, August 20th, 2015 @ 6:33PM

தமிழக சட்டமன்றத்தை நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும் என்ற லோக்சத்தா கட்சியின் கோரிக்கை தாங்கள் அறிந்ததே. இதற்காக லோக்சத்தா கட்சி 2012 ஆம் ஆண்டு தொடுத்த பொது நல வழக்கும் தற்பொழுது நிலுவையில் உள்ளது.

ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர மற்ற அனைத்து கட்சியினரும் சட்டமன்ற நேரடி ஒளிபரப்பிற்காக தங்கள் அழுத்தமான பதிவை மேற்கொண்டு வருகிறார்கள். CPI மற்றும் CPM கட்சிகளும் தாங்களும் சட்டமன்ற நேரடி ஒளிபரப்பை ஆதரிப்பார்கள் என்றே கருதினோம்.

இன்று அவர்களை சந்தித்த லோக்சத்தா கட்சி, பின் வரும் இரு கோரிக்கைகளை அவர்களிடத்தில் வைத்தது. அவர்களும் இது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.

1.இது குறித்த ஒரு தீர்மானத்தை சட்டமன்றத்தில் CPI மற்றும் CPM முன்மொழிய வேண்டும். அதற்கு ஆளும் தரப்பு தவிர மற்றவர்களின் ஆதரவு இருக்கும் என நம்புகிறோம்.
2. இது குறித்த கருத்தாக்கம் தொடர CPI மற்றும் CPM சார்பாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடத்த வேண்டும் என்றும் கோருகிறோம்.

CPIயை சார்பாக மனுவை பெற்றுக்கொண்ட தோழர். வீரபாண்டியன் அவர்களும், CPM சார்பாக மனுவை பெற்றுக்கொண்ட தோழர் ஜி.ராமகிருஷ்ணனும் நிச்சயமாக சட்டமன்றத்தில் இது குறித்து பேசுவதாக உறுதி அளித்தார்கள்.

அவர்களிடம் லோக்சத்தா கொடுத்த மனுவும், புகைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் திரு.ஸ்டாலின் அவர்களை இதே கோரிக்கைகாக லோக்சத்தா சந்தித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

Categories: Activities, Assembly Live Telecast, Press Releases

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: