லோக்சத்தாவின் ‘தமிழக சட்டமன்ற நேரடி ஒளிபரப்பு’ கோரிக்கை – திரு.ஸ்டாலினுடன் சந்திப்பு

Thursday, August 13th, 2015 @ 5:33PM

​​தமிழக சட்டமன்றத்தை நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும் என்ற லோக்சத்தா கட்சியின் கோரிக்கை தாங்கள் அறிந்ததே. இதற்காக லோக்சத்தா கட்சி தொடுத்த பொது நல வழக்கும் தற்பொழுது நிலுவையில் உள்ளது.

ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர மற்ற அனைத்து கட்சியினரும் சட்டமன்ற நேரடி ஒளிபரப்பிற்காக தங்கள் அழுத்தமான பதிவை மேற்கொண்டு வருகிறார்கள். இது குறித்து திரு.ஸ்டாலின் அவர்களும் சரியான கேள்விகளை அரசிடம் முன்வைத்திருந்தார்.

இன்று அவரை சந்தித்த லோக்சத்தா கட்சி, பின் வரும் இரு கோரிக்கைகளை அவரிடத்தில் வைத்தது. அவரும் இது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.

  1. இது குறித்த ஒரு தீர்மானத்தை சட்டமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் முன்மொழிய வேண்டும். அதற்கு ஆளும் தரப்பு தவிர மற்றவர்களின் ஆதரவு இருக்கும் என நம்புகிறோம்.

  2. இது குறித்த கருத்தாக்கம் தொடர திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடத்த வேண்டும் என்றும் கோருகிறோம்.

அவரிடம் லோக்சத்தா கொடுத்த மனுவும், புகைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது.​

Categories: Activities, Assembly Live Telecast, Press Releases

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: