​தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் செல்லாது என்ற உச்சநீதிமன்ற​ ​தீர்ப்பை லோக்சத்தா கட்சி எதிர்க்கிறது

Friday, October 16th, 2015 @ 7:02PM

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைத்தது செல்லாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை லோக்சத்தா கட்சி எதிர்கிறது. இந்தத் தீர்ப்பு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான ஒன்றாகும். உலகில் உள்ள எந்த நாட்டிலும் நீதிபதிகளே நீதிபதிகளை ‘வாரிசு’ முறை போல தேர்ந்தெடுக்கும் கேலிக்கூத்து இல்லை. நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டியதுதான். ஆனால் அதை காரணம் காட்டி வெளிப்படைத்தன்மையை கொண்டுவருவதை தடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

பாராளுமன்றம் அவசரமாக கூடி தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை பாதுகாப்பதை பற்றி விவாதிக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு தங்கள் அரசியல் வேறுபாடுகளை களைந்து இந்த விவகாரத்தில் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என லோக்சத்தா கட்சி கேட்டுக்கொள்கிறது. இந்த நேரத்தில் நீதிபதிகள் நியமன ஆணையம் கொண்டுவர நீதிபதிகள் திரு. J.S வர்மா, திரு. M.N வெங்கடாசலையா மற்றும் திரு. V.R கிருஷ்ண ஐயர் ஆகியோரை ஒன்றிணைத்து லோக்சத்தா கட்சி செயல்பட்டதை இங்கே நினைவு கூற விரும்புகிறோம்.

Categories: Press Releases

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: