கோயில்களில் உடைக்கட்டுப்பாடு விதிக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்பு – லோக்சத்தா கட்சி எதிர்க்கிறது

Saturday, January 2nd, 2016 @ 12:12PM

குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் விதமாக உள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு லோக்சத்தா கட்சிக்கு அதிர்ச்சி தரும் விதமாக உள்ளது. மேலும் இத்தீர்ப்பு சட்டமன்றம் மற்றும் நிர்வாகத்துறைகளில் நீதித்துறை தலையிடுவதாகவும் லோக்சத்தா கட்சி கருதுகிறது.

சென்னை உயர் நீதிமன்றம் மக்கள் கோயில்களுக்குள் நுழைய ஒரு பிற்போக்குத்தனமான ஆடை கட்டுப்பாடு விதித்துள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பு அனைத்து பாலர்களுக்கும் ஜீன்ஸ், டி-சர்ட்டுகள், பெண்கள் அணியும் நீண்ட பாவாடை(ஸ்கர்ட்) வகை உடைகளையும் தடை செய்கிறது.

உயர் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தீர்ப்பு என்ற பெயரில் இயற்றப்பட்டுள்ள புதிய சட்டம் இது.

மக்களால் தேர்ந்தடுக்கப்பட்ட சட்டசபையின் அதிகாரத்தை பறிக்கும் இந்த தீர்ப்பை லோக்சத்தா கட்சி கண்டிக்கிறது.

மேலும் பிற மதங்களும் தங்கள் வழிபாட்டுத்தலங்களுக்கு வருபவர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் விதிப்பதைப் போல கோவில்களுக்கும் இத்தகைய கட்டுபாடுகள் “தவிர்க்க முடியாதவை” என நீதிமன்றம் தெரிவிக்கிறது. 

மக்கள் தங்கள் சக சகோதரர்கள் பின்பற்றும் கலாச்சாரங்களில் இருந்து சில அம்சங்களை எடுத்துக்கொள்ளலாம். ஆனால்  யார் எந்த வழக்கினை எடுத்துகொள்வர் என்பது அவரவர் முடிவு செய்ய வேண்டியது. இந்திய கலாச்சாரமும், துணை கலாச்சாரங்களும் செல்லும் போக்கினை நீதிமன்றங்கள் தீர்மானிப்பதை லோக்சத்தா கண்டிக்கிறது.

இந்த தீர்ப்பில் ஒரு சட்டப் பிரிவு கூட மேற்கோள் காட்டப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. நீதித்துறையின் பங்கு சட்டசபை இயற்றும் சட்டங்களை செயல்படுத்துவதே தவிர சொந்த நெறிகளை நிலை நாட்டுவதில்லை என்பதை லோக்சத்தா நினைவூட்டுகிறது.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, தனியார் மற்றும் அறக்கட்டளைகள் நடத்தி வரும் கோயில்களுக்கும் பொருந்தும். இது இந்திய அரசியலமைப்பு வழங்கும் தனிமனித சுதந்திரத்தில் தலையிடும் செயலாகும்.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். மதச்சார்பற்ற நாடுகளில் வழிபாட்டுதலங்களை அரசு நிர்வகிக்கக் கூடாது. கோவில் நிர்வாகங்களை வட்டார மக்களே நிர்வகிக்க விட்டு அரசு ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என லோக்சத்தா வலியுறுத்துகிறது.

Categories: Press Releases

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: