அழைப்பு: லோக்சத்தாவின் “அரசியல் பேசலாம்” – கல்வி கொள்கை

Saturday, February 20th, 2016 @ 9:18PM

நீண்ட தினங்களுக்கு பிறகு லோக்சத்தாவின் ஒரு பொது நிகழ்ச்சி. நீண்ட நாட்களாக உத்தேசித்து வரும் நிகழ்வும் கூட.

கொள்கை சார்ந்த அரசியல் கலந்தாய்வுகள் நாளுக்கு நாள் குறைந்தே வருகின்றன. கொள்கை என்பது எது என்பதில் கூட சில குழப்பங்கள் நிலவுகிறது.

அதனை போக்கும் வண்ணம் கொள்கை சார்ந்த, அதே சமயம் மாற்று கொள்கைகளுக்கு, கருத்துகளுக்கு ஒரு களம் அமைக்கும் முயற்சியை லோக்சத்தா துவக்குகிறது.

முதல் தலைப்பாக – கல்வி கொள்கை.

Debate - Free & Quality education vs Opposing Private Schools

ஒரு பக்கம் கல்வி என்பது அரசாங்கம் மட்டுமே செய்ய வேண்டிய சேவை. தனியாருக்கு இதில் துளி இடமில்லை. கல்வி சீரழிந்து போனதற்கு தனியார் மட்டுமே காரணம் என்ற ‘பொதுவுடைமை’ தத்துவத்தின் அடிப்படை கொண்ட வாதங்கள்.

கல்வியை யார் கொடுத்தால் என்ன? – கல்வி தரமானதாக, இலவசமாக இருந்தால் போதுமே. இன்று உலகளவில் நாம் கல்வியில் மிக மோசமாக இருந்தாலும், இந்திய அளவில் ஓரளவிற்கு சிறந்து விளங்க காரணம் – தனியார் பள்ளிக்கூடங்கள்தானே என்ற தனியார்மயத்தை ஆதரிக்கும் ‘தாராண்மை தத்துவத்தின் அடிப்படை கொண்ட வாதங்கள்.

இருவருக்கும் கல்வியில் நாம் சிறப்பான இடத்தை அடைய வேண்டும் என்ற முனைப்பு. எது சிறந்த வழி என்பதில் மாற்று கருத்து. மாற்றுக் கருத்துகளை, மாற்று சிந்தனைகளை மக்கள் முன்வைக்கும் ஒரு தளமாக இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் – நம் தேவை தரமான, இலவசமான கல்வியே (தனியாரை ஆதரிக்கும்) என்று ஒரு அணியும் நம் தேவை தனியார் எதிர்ப்பே (அரசாங்கம் மட்டுமே கல்வியை தர வேண்டும்) என்று ஒரு அணியும் விவாதிப்பார்கள். ஒவ்வொரு அணியிலும் 3 ஆளுமைகள். ஒவ்வொருவருக்கும் 10 நிமிடங்கள் என முதல் 1 மணி நேரம் ஒவ்வொரு அணிக்கும் 30 நிமிடங்கள்.

அடுத்த 1 மணி நேரம் பார்வையாளர்களுக்கானது – முதல் 30 நிமிடங்கள் ஒவ்வொரு பார்வையாளரும் தங்கள் கருத்தை சுருக்கமான பதிவிடும் நேரம், அடுத்த 30 நிமிடம் பார்வையாளர்களுக்கான கேள்வி பதில் நேரம்.

கடைசி 20 நிமிடங்கள் – இரு அணிகளில் இருந்தும் ஒருவருக்கு மட்டும் 10 நிமிடம். (இறுதிச்சுற்று)

இடம் : சினி சிட்டி ஹோட்டல், கோடம்பாக்கம்
நாள் : பிப் 21, ஞாயிறு
நேரம் : மாலை 4 – 6.30 வரை

சிறப்பு விருந்தினர்கள்:

  1. திரு. பாடம் நாராயணன்
  2. திரு.அருமைநாதன்
  3. திரு. பத்ரி சேஷாத்ரி, கிழக்கு பதிப்பகம்
  4. திரு. மகேஷ், லோக்சத்தா
  5. திரு.அகிலன், லோக்சத்தா
  6. திரு. ராசன் காந்தி, இளந்தமிழகம் இயக்கம்.

நிகழ்விற்கான ஃபேஸ்புக் பக்கம்: https://www.facebook.com/events/1014942858546845/

இது அவசியம் என நினைப்பவர்கள் அவசியம் கலந்துகொள்ளவும். மற்றவர்களுக்கு பகிரவும்.

Categories: Activities

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: