Article

Saturday, February 22nd, 2014 @ 1:56PM

அரசியலில் என் பயணம் இதுவரை, இனி….

இரண்டு வருடங்களுக்கு முன்னால் இதே நாளில்தான் என் வேலையை ராஜினாமா செய்தேன். சுமார் 8 வருடங்கள் இரண்டு கணிப்பொறி பணிபுரிந்ததற்கு பிறகு 2012 ஜனவரி 5 வெள்ளிக்கிழமை பணியின் கடைசி நாளாக அமைந்தது. மக்கள் பணியில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் என் கல்லூரி நாள் தொட்டே இருந்து வந்தது. அதே நேரம் நான் ஆற்ற வேண்டிய கடமைகளை செய்து முடித்து, குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபட்டு, அந்த வாழ்க்கைக்கு தேவையான…

Friday, February 21st, 2014 @ 5:58PM

நேதாஜி

இந்தியாவில் மக்கள் தொகையில் அதிகம் உள்ள ஒரு மாவட்டம், உலகத்தின் 80 நாடுகளை விட பெரியது. நம்முடைய வெளி மாநிலங்கள் ஒவ்வொன்றும் மக்கள் தொகையில் பெரிய நாடுகளை ஒத்தது. உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் ஒவ்வொன்றும் ஐரோப்பாவின் பல பெரிய நாடுகளுக்கு ஒப்பாகும். குறைக்கப்பட்ட உத்தரப்பிரதேசம் உலகத்தின் 6வது பெரிய நாடாக இருக்கும். இப்படிப்பட்ட ஒரு மிகப்பெரிய நாட்டில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வேற்றுமைகள் கொண்ட ஒரு…

Thursday, February 20th, 2014 @ 12:47PM

முன்னேற்றத்தின் முன்னோடி எம்.எஸ். உதயமூர்த்தி

மயிலாடுதுறை சு.உதயமூர்த்தி என்றால் ரொம்ப பேருக்கு தெரியாது. அதே நேரம் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி என்றால் எல்லோருக்குமே தெரியும். அவர் இறந்து (21.01.13) ஓராண்டாகிறது. சென்னை திருவான்மியூரில் கடந்த வருடம் அவர் இறந்த போது அவருக்கு வயது 80. ‘உன்னால் முடியும் தம்பி’ என்ற தாரக மந்திரத்தைச் சொல்லி இளைஞர்களின் இதயத்தில் தன்னம்பிக்கைப் பயிரை விதைத்து வளர்த்தவர். செம்பனார் கோயில் பகுதிகளில் வற்றிய நீர்நிலைகளில் தொண்டர்களுடன் சேர்ந்து தூர்வாரி நீர்வளத்தைப் பெருக்கிக்…

Tuesday, February 18th, 2014 @ 9:56AM

லோக்சத்தாவின் பயணம்…

3 ஜனவரி 2014 அன்று இரண்டு ஆண்டுகள் முடிந்து லோக்சத்தா கட்சி (தமிழக கிளை) மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதற்கு முன்னர் மக்கள் சக்தி என்ற பெயரில் இயங்கி தேர்தல்களில் பங்கெடுத்திருந்தாலும், லோக்சத்தா கட்சியாக செயல்பட துவங்கியது ஜனவரி 3, 2012 முதல்தான். முதல் வருடம் முழுக்க கட்சி கட்டமைப்பிற்காக உழைத்தோம். அணியினரை புரிந்து கொண்டோம். ஒவ்வொரு சனிக்கிழமையும் நிச்சயம் சந்தித்தோம். அந்த ஆண்டிற்கான தொலைநோக்கு திட்டம் உருவாக்கினோம்….

Thursday, February 13th, 2014 @ 12:04PM

சகோதரா..! – கடிதம்

நாடாளுமன்றத்தில் லோக்பால் சட்டம் வெற்றி பெற்றாகிவிட்டது. ஊழலில் திளைத்து நிற்கும் நம் நாட்டில் இது ஒரு விடிவெள்ளியாக அமையும் என்று மக்களின் எதிர்பார்ப்பு. சகோதரா, நாடு சுதந்திரம் அடைந்தவுடன் நாம் ஆனந்த எக்காளமிட்டோம். இனி நம் நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடும் என்று நினைத்தோம். ஆங்கில ஆட்சியில் பட்ட கொடுமைகள் நீங்கி இந்த பாரதம் பார் புகழ உயரும் என்று இறுமாப்பெய்தினோம். இந்தியாவில் கல்வி சாலைகள் பல திறந்து மக்கள்…

Wednesday, February 12th, 2014 @ 11:44AM

காவல் துறையினரின் அத்துமீறல்

சென்னை, நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் தமீம் அன்சாரி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் புஷ்பராஜாவால் சுடப்பட்ட சம்பவம் அதிர வைக்கிறது. தமீம் அன்சாரி ஆறாம் வகுப்போடு படிப்பை கைவிட்டவர். சின்ன சின்ன திருட்டுச் சம்பவங்களில் அவருக்கு தொடர்பிருந்தது என்றும் காவல் துறையினரால் கூறப்படுகிறது. சமீபத்தில் அன்சாரியின் வீட்டருகே இருந்த கோயில் உண்டியல் பணம் திருடு போனது தொடர்பாக விசாரிக்க அன்சாரியைப் பிடித்து சென்ற போலீசார்…

Tuesday, February 11th, 2014 @ 2:01PM

விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நீதி கேட்டு பேருந்து சிறை பிடிப்பு! லோக் சத்தா கட்சி போராட்டம்

லோக்சத்தா சென்னை மாவட்டத் தலைவர் குமார் தலைமையிலான அணி நூதன கருப்பு பெயிண்ட் பூசும் போராட்டத்தின் மூலம் ஜப்பார் ட்ராவல்ஸ் பேருந்தை சில மணி நேரம் சிறைபிடித்தது. முறைகேடாக பேருந்து இயக்கி 45 உயிர்களை பலி வாங்கிய ஜப்பார் டிராவல்ஸ் பேருந்து விபத்து நடந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் முடிவடைந்துவிட்டன. ஆனால் காவல்துறை விசாரணை நடைபெறவேயில்லை. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க லோக்சத்தா கட்சி ஜப்பாருக்கு விதித்த ஒரு மாத…

Monday, February 10th, 2014 @ 10:51AM

இபிகோ

அண்மையில் நடந்த இ.பி.கோ. 377 தொடர்பான சர்ச்சை நினைவிருக்கும். மேலோட்டமாகப் பார்த்தால் இது ஓரின சேர்க்கையாளர்களின் பிரச்சனையாக மட்டும் தெரியலாம். ஆனால் இது அனைத்து மக்களையும் பாதிக்கின்ற அரசின் பல தூண்களின் உண்மை நிலயை காட்டும் ஒரு கண்ணாடி. ஓரின சேர்க்கை வாழ்க்கையை யாரும் தெரிவு செய்வதில்லை. அது இயற்கையாக அவர்களுக்கு அமைந்த நிலை. அதற்காக அவர்களை தண்டிப்பது சரியல்ல. மேலும் இரண்டு இசைவளிக்கும் வயது வந்த நபர்களுள் நடைபெறும்…

Friday, February 7th, 2014 @ 1:23PM

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு

தமிழகத்தில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளைப் பார்க்கையில் ‘ஆட்சியாளர்கள்’ என்பவர்கள் எதற்காக என்கிற கேள்வி எழுகிறது? அதிலும் அரசியல்வாதிகள் எதற்காக என்கிற கேள்வி மிக பலமாக எழுகிறது. காரணம், அரசியல்வாதிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாட்டில் அரசு இயந்திரங்கள் சரியாக செயல்பட்டாலே போதும், எல்லாம் சரியாக அல்லது தானாக நடந்துவிடும். அதைவிடுத்து ஆட்சிமுறை என்கிற ஒன்று எழுந்து, அதற்காக தேர்தல் வைத்து மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்து அவர்கள் மூலம் அந்தந்த தொகுதிகளுக்கு…

Thursday, February 6th, 2014 @ 11:32AM

ஆம் ஆத்மியின் எழுச்சி

டெல்லி தற்போதைய டெல்லி சட்டமன்றம் 1991ல் 69வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின்படி அமைக்கப்பட்டது. இந்த சட்டமன்றத்திற்கு முதல் தேர்தல் 1993ம் ஆண்டு நடந்தது. இதில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பா.ஜ.க. ஆண்ட ஐந்து வருடங்களில் மூன்று முதல்வர்கள் மாறினர். 1998ல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போது முதல்வர் ஆனார் ஷீலா தீட்சித். அதில் இருந்து தொடர்ந்து 3 முறை டெல்லியில் ஷீலா தலைமையில் அசைக்க முடியாத சக்தியாக…

Wednesday, February 5th, 2014 @ 11:03AM

அமெரிக்க இறுமாப்பிற்கு வைத்தது ஆப்பு!

20 ஆண்டுகள் கடின உழைப்புடன் கூடிய முயற்சியில் இமாலய வெற்றிகண்டுள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழகம். ஆம், 2000 கிலோவிற்கும் அதிக எடை உள்ள செயற்கைகோள்களை ஏவும் கிரையோஜெனிக் என்ஜின் கொண்ட ஏவுகணையை முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்துடன் இந்திய விஞ் ஞானிகள் தயாரித்து சாதனை புரிந்துள்ளனர். ஜி.எஸ்.எல்.வீ.டி.5 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை 1982 கிலோ எடையுள்ள ஜி சாட் 14 என்ற செயற்கை கோளை இம்மாதம் 5ம் தேதி விண்ணில்…

Tuesday, February 4th, 2014 @ 12:39PM

தமிழக அரசியல் 2013

தமிழகத்தை மின் மிகை மாநிலமாக ஆக்கியே தீருவோம் என்ற 2012 சோகம் சென்ற வருடமும் தொடர்ந்து, மின் வெட்டுகள் இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ‘விஸ்வரூப’ அரசியலில் தமிழக முதல்வர் தவறான காரணங்களுக்கு நாடு முழுவதும் பிரபலமானார். அதிமுக அரசாங்கம் வந்தாலே சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் பக்கத்து மாநிலத்திற்கு பறந்துவிடுவார்கள் என்ற பந்தாவெல்லாம் பறந்து போக, எல்லா மாநிலத்தில் இருந்தும் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் இன்று தமிழகத்தில். முன்னேற்ற பாதையில்…