Article

Friday, March 8th, 2013 @ 8:56AM

காவல்துறை சீர்திருத்தங்கள் – 1

இரவு 10 மணி. சென்னை 100 அடி சாலையில் இருக்கும் பிரதான சிக்னல் ஒன்றில் சிவப்பு விளக்கு எரிந்ததால் தான் வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி பச்சைக்காக காத்திருந்தார் அவர். பின்னால் வந்தவர்கள் சிக்னலை மதிக்காததோடு பச்சைகாக காத்திருந்த இவரை ஒரு ஏளனப் பார்வையாலும், இவர் வழியை மறிப்பதாய் திட்டியும் கடந்து சென்றனர். கடந்து சென்ற இரு சக்கர வாகனங்களில் ஒன்று வலது புறத்திலிருந்து வந்த கார் ஒன்றின்…

Monday, March 4th, 2013 @ 6:56PM

இந்தியாவும் உட்கட்சி ஜனநாயகமும்

காங்கிரஸ் கட்சி ஜனவரி 29 அன்று ராகுல் காந்தியை கட்சியின் துணைத் தலைவராக நியமித்தது. ராகுல் காந்தியின் திறமையை பற்றி ஆராய்வதை விட, அவர் நியமிக்கபட்ட விதம் முக்கியமாகும். இந்தியாவின் ஜனநாயகத்தின் அடிப்படை சம்பந்தபட்ட விஷயம் அது ஒரு அரசியல் கட்சி யாருடைய சொத்து என்பது போன்ற அடிப்படை கேள்விகளை எழுப்பியது. இந்தியாவின் பாரம்பரியமிக்க அனைத்து கட்சிகளும், துவக்கப்பட்ட பொழுது மிகவும் உன்னத நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டன. மிகச் சிறந்த தலைவர்கள்,…

Saturday, March 2nd, 2013 @ 11:49PM

நேரடி பண பரிமாற்றத் திட்டம் – உண்மை நிலவரம் என்ன?

அரசு தனது சக நல திட்டங்கள் மூலம் பயனாளிகளுக்கு செலவு செய்வதை இரண்டு வகையாக பிரிக்கலாம். 1. நேரடியாக பணம் கொடுப்பது. உதாரணம் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் மூலம் கொடுக்கப்படும் சம்பளம், மாணவர்களுக்கு கொடுக்கப்படும் உதவித்தொகை, முதியோர், விதவை, மாற்று திறனாளி ஆகியோருக்கு அளிக்கப்படும் ஊக்கத்தொகை, ஓய்வூதியம் இதில் அடங்கும். பயனாளிகள் இந்த தொகையை பெரும்பாலும் காசோலையாகவோ அல்லது நேரடி பணமாகவே சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து…

Tuesday, February 26th, 2013 @ 2:37PM

கருகிய பயிருக்கும் உயிருக்கும் நீதி கேட்டு…

இந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனது. காவிரியில் கர்நாடகத்திடமிருந்து கிடைக்க வேண்டிய நமது பங்கு தண்ணீரும் கிடைக்கவில்லை. விளைவு? உழுது, நாற்றுவிட்டு, நீர்பாய்ச்சி, மருந்தடித்து, களையெடுத்து அறுவடைக்கு வேலை செய்ய வேண்டிய விவசாயிகள் ஆர்ப்பாட்டம் போராட்டம், ரயில் மறியல் என வயலுக்கு வெளியே வியர்வை சிந்தி வேலை செய்ய வேண்டிய அவலநிலை ஒரு பக்கம், போட்ட முதல் காய்ந்து போன கவலையில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் மறுபக்கம். இந்த…

Wednesday, February 20th, 2013 @ 11:17PM

இப்போது என்ன புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறாய்?

அது ஆகஸ்ட் 9, 1988. விஸ்வரூப நாயகன் கமல் ஹாசன் நடித்த உன்னால் முடியும் தம்பி திரைப் படம் எந்தத் தடையுமின்றி எளிமையாக வெளியான தேதி. 25 ஆண்டுகள் ஆகிவிட்டது இருந்தாலும், உங்கள் நினைவுத்திறனைச் சோதிக்க ஒரு கேள்வி. இப்படத்தில் கமலின் கதாபாத்திரத்தின் பெயர் என்ன? ஒரு நிமிடம் யோசியுங்கள். விடை தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் மூளைக்குள் சிறு ஸ்கேனிங் செய்து பார்த்தற்கு நன்றி. விடை: உதயமூர்த்தி. படத்தின் இயக்குனர் பாலசந்தர்…

Wednesday, February 20th, 2013 @ 10:27PM

லைஃப் ஆஃப் பை

இலவசங்களைப் பற்றிய கதை ஒன்று உண்டு வாடிக்கையாளர் ஒருவர் குடை வாங்க கடைக்குச் சென்றார். குடையின் விலை 100 என்ற சொல்லப்பட்டது. 50 ரூபாய்க்கு பேரம் பேசினார். முதலில் மறுத்த கடைக் காரர் பிறகு ஒப்புக்கொண்டார். உடனே இவர் 25 ரூபாய்க்கு கேட்டார். கோபமடைந்த கடைக்காரர் எப்படியோ ஒத்துக்கொண்டார். மீண்டும் 12.50.க்கு வாடிக்கையாளர் கேட்க வெறுத்துப் போன கடைக்காரர் இலவசமாகவே அந்த குடையை கொடுக்க முன் வந்தார். வாடிக்கையாளர் அப்படின்னா…