Article

Thursday, January 30th, 2014 @ 8:35PM

குடி மக்கள் சாசனம் – 1

இந்த பகுதியில் ஒவ்வொரு மாதமும் சேவை பெறும் உரிமை சட்டம் வலியுறுத்தும் அனைத்து துறைகளின்‘குடிமக்கள் சாசனம்’ பற்றி பார்க்க இருக்கிறோம். ‘குடிமக்கள் சாசனம்’ என்பது அந்த அரசுத் துறை என்னென்ன சேவைகளை வழங்குகிறது. அதற்கான கால நிர்ணயம் என்ன என்பதை உறுதி செளிணியும் ஆவணம். துறை : உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு எண் சேவை காலவறை (தேவையான ஆதாரம் அளிக்கப்படும் பட்சத்தில்) விண்ணப்பம் எந்த அலுவலருக்கு சமர்ப்பிக்கப்பட…

Wednesday, January 29th, 2014 @ 10:57AM

என் சேவை! என் உரிமை!! – 1

புதிய தொடர் சேவை பெறும் உரிமையின் அவசியத்தையம், மக்களுக்கு அரசு அலுவலகங்களில் அது விளைவிக்கும், விளைவிக்கப் போகும் நன்மைகளையும் லோக் சத்தா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக ‘சேவை பெறும் உரிமைச் சட்டம்’ பற்றியும், அச்சட்டம் இந்தியாவில் எங்கெல்லாம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கும் தொடர்தான் இது. இந்த சட்டத்தை முதன் முதலில் அமுல்படுத்தியது மத்திய பிரதேச அரசாங்கம் தான். அங்கு இச்சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை…

Tuesday, January 28th, 2014 @ 3:08PM

ஓயாத அலைகள் – பாகம் 7

கச்ச(ட்சி)த் தீர்வு அரசியல் – 6 1920களில் இருந்தே கச்சத்தீவு பிரச்னை இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இருந்து வந்ததை நாம் பார்த்தோம். 1974ம் ஆண்டு மற்றும் 1976ம்ஆண்டு ஒப்பந்தங்களையும் விரிவாகப் பார்த்தோம். பல வருடங்களாக இந்தப் பிரச்னை இருந்து வந்த போதிலும் 1976ம் ஆண்டோடு இப்பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அந்த குறிப்பிட்ட வருடங்களின் கட்டாயம் என்னவாக இருந்தது? நாம் கீழே தரும் தகவல்கள்யாவும் வெவ்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை….

Saturday, January 25th, 2014 @ 11:13AM

மாமனிதன் பாரதி

மனிதனாகப் பிறந்தவன் மனிதனாக வாழ்ந்து, புனிதனாக உயர்ந்து எப்போதும் மக்கள் மனங்களில் சிம்மாசனமிட்டு வீற்றிருக்க வேண்டும். அதுதான் வாழ்தல். மற்றொரெல்லாம் வாழவில்லை. வீழ்கிறார்கள்.இதனை பாரதியார்… தேடிச் சோறுநிதந் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிப் கிழப்பருவம் எய்தி கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?…

Friday, January 24th, 2014 @ 12:12PM

விவாதத்திற்கு உள்ளான பாரத ரத்னா!

ஒவ்வொரு நாடும் அந்நாட்டின் தலைசிறந்த குடிமகன்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கி கௌரவிக்கும். இந்திய அரசு கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் தலைசிறந்த பொதுத் தொண்டு ஆற்றும் அறிஞர்களுக்கு பல கட்டமாக விருதுகள் வழங்குகிறது. பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் என்ற வரிசையில் உயர்ந்த விருது பாரத ரத்னா விருது. 1954ம் வருடம் இந்த விருது வழங்கும் முடிவு எடுக்கப்பட்ட போது உயிரோடு இருப்பவர்களுக்கு மட்டும் தான் இத்தகைய விருதுகள் வழங்கப்பட வேண்டும்…

Sunday, January 5th, 2014 @ 8:15AM

சகோதரா கடிதம்

சகோதரா, டிசம்பர் 3ம் தேதி மாற்றுத் திறனாளிகள் தினம் என்று கடைப்பிடிக்கிறோம். நமக்கு தெரிந்த பழைய வார்த்தைகள் எல்லாம் நொண்டி, குருடு, செவிடு, இதர பல. பின் ஊனமுற்றவர்கள் என்று பொதுபடையாக்கினோம். பின் மீண்டும் சமூக மதிப்பீட்டிற்காக மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்கிறோம். சரி சற்று ஊன்றி இதை கவனிப்போம். இம்மாதிரி உடற் குறைபாடுகள் உள்ளவர்கள் எப்படி வாழ்கிறார்கள், எப்படி பார்க்கப்படுகிறார்கள்? உளவியல், உணர்வியல் நிலைப்பாடுகள் எப்படி உள்ளது என்று யோசிக்க…

Saturday, January 4th, 2014 @ 12:25PM

புலி வருது புலி வருது தெலுங்கானா புலி வருது

தனித் தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னமும் தனி மாநிலம் குறித்த முடிவு இறுதி வடிவம் பெறாமல் குழப்பத்திலேயே போய் கொண்டிருக்கிறது. நமது ஆகஸ்டு மாத இதழிலேயே நாம் இது குறித்து காங்கிரஸ் அரசு கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கும் முயற்சியாக இப்பிரச்னையை கையில் எடுத்து அரசியல் லாபம் பார்க்க நினைக்கிறது என்று குறிப்பிட்டிருந்தோம். அது உண்மைதான் என்பதற்கு இணங்க தெலுங்கானா பகுதியுடன்…

Friday, January 3rd, 2014 @ 5:43AM

புதிய அரசியலுக்கு தேவை உள்ளூர் சாதனையாளன்!

2011 தமிழக தேர்தலுக்குப் பின்னும் அதற்கு முன்னரும் லஞ்ச ஊழலுக்கு எதிரான செயல்பாடுகள், தகவல் பெறும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு, தீவிர மதுக்கட்டுப்பாடு, ஆட்டோ மீட்டர் பிரச்னை, சட்டசபை நேரடி ஒளிபரப்ப கோரிக்கை போன்று பொதுவான பிரச்சனைகளை கொள்கை அளவிலும் சற்று உயர்மட்டத்திலும் எடுத்து தமிழக லோக் சத்தா கட்சி தீவிரமாக செயல்பட்டு வந்தது. 2012 ஆண்டு முடிவல் கட்சி செயல் பாடுகளை ஆய்வு செய்யும் பொருட்டு மாநில நிர்வாகக் குழு கூட்டப்பட்டு…

Thursday, January 2nd, 2014 @ 5:05PM

அரசு நிர்வாக பரவலாக்கமும் உள்ளூர் அரசாங்கங்களும் – பாகம் 2

ஐக்கிய நாடுகள் அரசு பன்முகபடுத்துதளையும் அரசு நிர்வாக பரவலாக்கத்தையும் “மத்திய பிராந்திய மற்றும் உள்ளூர் மட்டங்களின் அரசு நிறுவனங்கள் இடையே இணை பொறுப்பை அமைக்க சீரமைப்பு அல்லது அதிகாரம் மறுசீரமைப்பு படுத்துதல்” என விவரித்துள்ளது. இந்தியாவில் உள்ளூர் ஆட்சிமுறை நகர்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி, பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் என பிரிக்கப்பட பரிந்துரைக்கப்பட்டது.உள்ளாட்சி மன்றங்களில் மாநகராட்சிகளும், நகராட்சிகளும் உள்ளடக்கமாகும். தமிழகத்தின் 1920ஆம் மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின்படி நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களுக்கு…

Tuesday, December 31st, 2013 @ 5:53PM

எடுத்தோம் கவிழ்த்தோம்! கெயில் எரிவாயுக் குழாய் திட்டத்திற்கு தடையில்லை உயர்நீதிமன்றம்

நீதிமன்றங்களால் குட்டு வாங்குவது ஒன்றும் இரண்டரை வருட தற்போதைய தமிழக அரசுக்கு புதிதல்ல. சமீபத்திய குட்டு கெயில் எரிவாயுக் குழாய் திட்டம் தொடர்பானது என்பதைவிட விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், மக்கள் நலனையும் வைத்து விளையாடிய விளையாட்டிற்கு கிடைத்த சவுக்கடி என்றுதான் சொல்ல வேண்டும். கெயில் திட்டம் சம்பந்தமாக நேரில் பாதிப்படைந்த மக்களை நேரில் சந்தித்து, கடந்த மார்ச் மாத விசிலில் அது குறித்தான தகவல்களை தெரிவித்திருந்தோம். கொச்சின் முதல் மங்களூரு வரையில் தமிழகம் வழியாக…

Tuesday, December 31st, 2013 @ 9:17AM

ஓயாத அலைகள் – பாகம் 6

                              கச்ச(ட்சி)த் தீவு அரசியல் – 5 மன்னார் வளைகுடா மற்றும் வங்காள விரிகுடாவில் இலங்கை மற்றும் இந்தியா என்ற இரு நாட்டுகளுக்கிடையே கடல் எல்லைக்கோடு மற்றும் அது தொடர்புடைய  விசயங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம்                                 23 மார்ச் 1976  இந்திய குடியரசு மற்றும் இலங்கை குடியரசு, பாக் ஜலசந்தியின்…

Tuesday, December 31st, 2013 @ 4:47AM

உறங்கிக் கொண்டிருக்கும் வழங்கல்துறை அலுவலகங்கள்!

ஒரு குடும்ப அட்டை அல்லது ரேஷன் அட்டை என்பது அன்று வழங்கப்பட்ட காரணத்திலிருந்து மாறி இன்று ஒரு குடிமகனின் அடிப்படை குடியிருப்பு சான்று என்றாகிவிட்டது. வங்கிக் கணக்கு முதல் விலை யில்லா பொருட்கள் வரை அனைத்துக்கும் இந்த குடும்ப அட்டையே ஆதாரம். முன்பெல்லாம் குடும்ப அட்டை இல்லா வீடுகள் என்று கூறும் பங்களா வீட்டுக் காரர்களுக்கும் தற்போது பொருளில்லா அட்டை என தனியரு நிறமாய் வெள்ளை அட்டை என வழங்கப்பட்டு வருகிறது….