Article

Monday, December 30th, 2013 @ 7:48AM

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் – 3

முதல் பகுதி இரண்டாம் பகுதி சென்ற இதழில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி ஏன் புகார் செய்யவேண்டும், யார் புகார் செய்யலாம், புகார் செய்வது எப்படி என்று பார்த்தோம். மேலும் இச்சட்டத்தை பற்றி பார்போம். • புகார் செய்வதற்கான காலவரையறை:- நீங்கள் ஆதாரமாக குறிப்பிடும் எதிர்த்தரப்பின் குற்றத்தை ஒப்புக்கொண்ட கடிதம் நோட்டிஸ் பில், ரசீது போன்றவற்றில் எது தேதிவா¡¢யாக கடைசியில் வருகிறதோ, அதனுடைய தேதியிலிருந்து இரண்டு வருடங்களுக்குள் புகாரைப் பதிவு செய்யவேண்டும்….

Sunday, December 29th, 2013 @ 7:28PM

நீதிபதிகள் நியமன ஆணையம் நீதித்துறையின் நம்பகத்தன்மை மற்றும் நாணயத்தை பாதுகாக்கும் வழி

நமது ஜனநாயகத்தின் சமநிலையை உறுதி செய்வதில் நீதித்துறை மிக முக்கிய பங்காற்றுகின்றது. மக்களுடைய மனதில் இன்று அதிகமாக மதிக்கப்படும் துறையும் இதுவே. தாமதமான நீதி, மேல் முறையீட்டில் சரி செய்யப்படும் தீர்ப்புகள், நிலுவை யிலுள்ள வழக்குகள் போன்று மற்ற தூண்களை (நிர்வாகம், பிரதிநிதிகள்) போல தனது பங்கிற்கு குறைகள் இருந்தாலும், ஒரு சராசரி இந்தியனின் மனதில், மிகவும் உயரிய இடத்தில் இத்துறை உள்ளது. இது மிகவும் முக்கியமாகும். மிகவும் சர்ச்சைக்குரிய பிரச்சனைகளான இட ஒதுக்கீடு,…

Sunday, December 29th, 2013 @ 11:37AM

அங்குசம்

தகவல் பெறும் உரிமைச்சட்டத்தை கருவாகக்கொண்டு எடுக்கப்பட்ட படம் அங்குசம். அங்குசம் படம் வெளியாவதற்கு பல்வேறு தடைகள் உருவாகியுள்ளது. ஆகவே, இயக்குனர் மனுக்கண்ணன் அவர்கள், சமூக ஆர்வலர்களுக்கு இப்படத்தை திரையிட்டுக் காட்டி, மக்களிடம் படம் குறித்த செய்தியை கொண்டு சேர்ப்பதற்காக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள் போர்-பிரேம்ஸ் அரங்கில் சிறப்புக் காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். 125ஆர்வலர்கள் வந்திருந்தனர். அங்குசம்: “சமுதாயத்தின் பழுது போக்கும் செய்தியுள்ள பொழுதுபோக்கு படம்”. படத்தில் வரும் சாராயம், குத்துப்பாட்டு, மற்றும் பல கமர்சியல் காட்சிகள் நமக்கு உடன்பாடில்லை. ”புகை உயிருக்குப் பகை, மது உயிருக்குக் கேடு” என்ற…

Saturday, December 28th, 2013 @ 2:47PM

மாற்றத்தை நோக்கி மாநில செயற்குழு

லோக் சத்தா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நமது கட்சி தலைமை அலுவலகத்தில் நவம்பர் மாதம் 24ம் தேதி நடைபெற்றது. மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண் டனர். இக்கூட்டத்தில் நமது கட்சியின் முக்கிய தூணாக கருதப்படும் விசில் மாதப் பத்திரிக்கையை பதிவு செய்வது தொடர்பாக முக்கிய விவாதம் மேற்கொள்ளப்பட்டது. முடிவில் நமது கட்சியின் மகளிர் அணி செயலாளரும், சட்ட ஆலோசகருமான எலிசபெத்…

Friday, December 27th, 2013 @ 9:50PM

அரசு நிர்வாக பரவலாக்கமும் உள்ளூர் அரசாங்கங்களும் – பாகம் 1

உலகிலுள்ள மாபெரும் ஜனநாயக நாடுகளில் முக்கிய இடத்திலிருக்கும் இந்தியாவில் அரசின் மையப்படுத்தப்பட்ட அதிகாரத்துவம் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவிலுள்ள மாவட் டங்களும் பெரிது. மக்கள் தொகையும் பெரிது. ஆனால் அரசு நிர்வாகம் மட்டும் மையப்பட்டு கொண்டேயிருக்கிறது. சுதந்திரத்திற்கு முன்பு ஆண்ட ஆங்கிலேயர்கள் தங்களது பொறுப்புகளை குறைத்துக் கொள்ள எடுத்த முயற்சிதான் அரசு நிர்வாக பரவலாக்கமும், உள்ளூர் அரசாங்கங் களும். சுதந்திரத்திற்கு பின்னர் அமைந்த மத்திய மாநில அரசுகள் உள்ளூர் அரசாங்கங்கள் இயங்கு வதற்கு போதுமான…

Friday, December 27th, 2013 @ 2:43PM

அசத்தல் ஆம் ஆத்மி! யோசிக்கவும் மோடி!! எங்கே ராகுல்?

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் அனைத்து அரசி யல் கட்சிகளுக்கும் பலவிதமான பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளன. மக்கள் மத்திய பிரதேசம் மற்றும் சத்திஸ்கர் மாநில அரசின் சாதனைகளை அங்கீகரித்து மீண்டும் ஒருமுறை ஆட்சி செய்ய வாய்ப்பளித்துள்ளனர். காங்கிரஸ் எதிர்ப்பு அலை மற்றும் பிரதேச காங்கிரஸ் பிரச்சனைகள் இராஜஸ்தானில் மிகவும் மோசமான தோல்வியை காங்கிரஸ் கட்சிக்கு அளித்துள்ளது. டெல்லி தேர்தல் முடிவுகள் பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வரும் காலங்களில் சந்திக்க இருக்கும்…

Friday, December 27th, 2013 @ 8:01AM

தீபாவளி பண்டிகை – சொந்த ஊர் செல்பவர்களின் நிலைமை

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று எண்ணி கோயம்பேடு பேருந்து நிலைத்தில் சில லட்ச மக்கள் கூடினார்கள். அந்த கூட்ட நெரிசலில் மக்களுக்கு எந்தவித பிரச்சனைகளும் நேரிடாமல் இருக்க காவல் துறை Asst. Commissioner  திரு. செந்தில் குமரன், மூன்றாவது சக்தி பாலு ஐயா அவர்களிடம் பொது மக்களுக்கு உதவும்படி அழைப்பு விடுத்தார். எனவே அந்த அழைப்பை ஏற்று 3-வது சக்தி சார்பாக பொது மக்க்ளின் உதவிக்கு தீபாவளிக்கு…

Thursday, December 26th, 2013 @ 11:22PM

டெல்லி தேர்தலில் புதிய வெளிச்சம் ஆம் ஆத்மி கட்சி

ஆம் ஆத்மி கட்சியின் வரவால் தில்லி தேர்தல் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் வெறும் ஒரு வருடத்திற்கு முன் உருவாக்கப்பட்ட ஒரு கட்சி, நேர்மையான முறையில் மக்களிடமிருந்து நன்கொடை பெற்று, ஓட்டு வங்கி அரசியலை பின்பற்றாமல், ஊழல் ஒழிப்பு, அதிகாரப் பரவலாக்கல், நேர்மையான ஆட்சி ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி தேர்தலைச் சந்தித்து இவ்வளவு வாக்காளர்களின் ஆதரவை பெற்றி ருப்பது தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது….

Thursday, December 26th, 2013 @ 3:09PM

அகில இந்திய லோக்சத்தா தொழிற்சங்க செய்திகள்

திருப்பூரில் அமைந்துள்ள வர்தமான் திரெட்ஸ் பி.லிட் என்கிற நிறுவனத்தில் பணிபுரிந்த 7 தொழிலாளர்களுக்கு பல ஆண்டுகளாக வேலை செய்தும் முறைப்படி சம்பளம், போனஸ், நஷ்டஈடு ஆகியவை தரப்படவில்லை என்ற புகார் வரப்பெற்றது. அதர்கு லோக்சத்தா தொழிற்சங்க தலைவர் எஸ்.மூர்த்தி, துணைத்தலைவர் ஆர்.விஜயராஜன், செயலாளர் பால்பாண்டியன் பொருளாளர் மதன கோபால், மாநில அமைப்புச்செயலாளர் சே.ஈஸ்வரன், மாவட்ட தலைவர் மகாலிங்கம் ஆகியோர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை அணுகி மேற்படி நிவாரணம் பெறுவது குறித்து முறையிட்டார்கள்….

Thursday, December 26th, 2013 @ 8:45AM

நோட்டா (NOTA)

10.12.2001 அன்று தேர்தல் ஆணையம் எழுதிய கடிதத்தில் வாக்காளர்களின் எதிர்மறை வாக்குகளை தான் ஆதரிப்பதாக தெரிவித்தது. அதன் பிறகு பல விவாதங்கள் நடந்தன. பல கட்டங்கள் கடந்து சில வழக்குகளும் பதியப்பட்டு கடைசியாக 2013ம் ஆண்டு 27 செப்டம்பர் அன்று உச்சநீதி மன்றத்தால் தீர்ப்பளிக் கப்பட்டு, நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களிலும், 2 மாநிலங்களில் நடந்த இடைத் தேர்தல்களிலும் நோட்டா (NOTA நோட்டா – None of the above) வாக்கு இயந்திரத்தில்…

Monday, December 23rd, 2013 @ 6:06PM

கடிதம்

சகோதரா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நாம் இன்னும் சில மாதங்களில் நம்மை ஆள வேண்டிய தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும். நம் முன் பல முடிவு காண முடியாத ஏக்கத்தை பதிலாக தரக்கூடிய கேள்விகள் ஏராளமாய் உள்ளது. இந்த நிலை தரும் அழுத்தத்திலும் அதிகாரம் நம்மை பயமுறுத்துவதையும் கணக்கில் கொண்டு வாழ்வை அல்லது வாழ்தல் எனும் சடங்கை தக்க வைத்துக்கொள்ளும், முயற்சியில் தேர்தலை ஏதோ ஒரு சடங்காகவும், விடுமுறை அனுபவிக்க…

Friday, December 13th, 2013 @ 3:02PM

மக்கள் பணத்தில் கட்சி விளம்பரம்

தற்போதுள்ள கட்சிகள் ஒவ்வொன்றும் ஆட்சிக்கு வரும்போது மக்களுக்கு நன்மை செய்கிறார்களோ இல்லையோ, தங்களையும் தங்கள் கட்சி சின்னத்தையும் விளம்பரப்படுத்திக்கொள்வதில் முனைப்போடு இருக்கிறார்கள். உத்திரப்பிரதேசத்தில் மாயாவதி ஆட்சியில் இருந்தபோது மக்களின் பல கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்து தனது கட்சியின் சின்னமான யானை சிலைகளை நாட்டின் பல பகுதிகளை நிறுவினார். விளைவு ஆட்சியை இழந்து நிற்கிறார். எம்.ஜி.ஆர் அவர்களின் மறைவிற்குப்பின் ஆட்சிக்கு வந்த கருனாநிதி அவர்கள் எம்.ஜி.ஆருக்கு குடை போன்ற வடிவத்தில்…