விருதுநகர் – பிரதீப்குமார்

Pradeep

D. பிரதீப்குமார் [English profile here]

தொகுதி: விருதுநகர்

வயது: 30

கல்வித்தகுதி: B.E in TCE Madurai & M.S. (BITS, Pilani)

முகவரி: 19-C, ஆறுமுகம் சாலை, திருமங்கலம், மதுரை.

திரு. பிரதீப்குமார் ஒரு சமூக ஆர்வலரும், மென்பொருள் பொறியாளரும் ஆவார்.
குறிப்பாக ஊழல் ஒழிப்பு, கிராம முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஆர்வம் மிக்கவர்.

சமூக பணிகளில் சில

  • பசுமை ஒளி அறக்கட்டளை என்ற அரசு சாரா தொண்டு நிறுவனத்தை நிறுவியுள்ளார். இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக இயங்குகிறது.
  • மக்கள் சேவை மையம் என்ற அமைப்பின் மூலம் ஊழல் ஒழிப்பு மற்றும் தகவல் உரிமை சட்ட பயிற்சி ஆகிய தளங்களில் செயல்பட்டு வருகிறார்.
  • திரு M. S. உதயமூர்த்தி ஐய்யா அவர்களின் ‘மக்கள் சக்தி இயக்கம்’ மற்றும் களஞ்சியம் அறக்கட்டளை ஆகியவற்றில் உறுப்பினராக பங்காற்றியுள்ளார்.
  • பசுமை நடை மற்றும் விழித்தெழு மதுரை ஆகிய நிகழ்வுகளில் பங்கெடுத்து உள்ளார்.

அரசியல் அனுபவம்

தற்போது தமிழக லோக்சத்தாவின் மாநில துணைத் தலைவர் (இளைஞர்) பொறுப்பில் உள்ளார்.

%d bloggers like this: