இந்தியாவும் உட்கட்சி ஜனநாயகமும்

Monday, March 4th, 2013 @ 6:56PM

காங்கிரஸ் கட்சி ஜனவரி 29 அன்று ராகுல் காந்தியை கட்சியின் துணைத் தலைவராக நியமித்தது. ராகுல் காந்தியின் திறமையை பற்றி ஆராய்வதை விட, அவர் நியமிக்கபட்ட விதம் முக்கியமாகும். இந்தியாவின் ஜனநாயகத்தின் அடிப்படை சம்பந்தபட்ட விஷயம் அது ஒரு அரசியல் கட்சி யாருடைய சொத்து என்பது போன்ற அடிப்படை கேள்விகளை எழுப்பியது.

Dynasty politics in the traditional political parties of India

இந்தியாவின் பாரம்பரியமிக்க அனைத்து கட்சிகளும், துவக்கப்பட்ட பொழுது மிகவும் உன்னத நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டன. மிகச் சிறந்த தலைவர்கள், பல தொண்டர்களின் கடின உழைப்பால், மக்களின் நிலையை முன்னேற்றுவதற்காக வளர்த்தெடுக்கப் பட்டன.

இப்பொழுது உள்ள காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளும் கொள்கைகளை அடிப்படையாக கொண்டே ஆரம்ப கட்டத்தில் செயல்பட்டன. ஆனால் பலரின் வியர்வையில் உருவான கட்சிகள் இப்பொழுது ஒரு சிலரின் தனிச்சொத்துக்கள் ஆகிவிட்டன. காங்கிரஸில் சுதந்திரத்திற்கு பிறகு பல மக்கள் மதிப்பு பெற்ற தலைவர்களாய் இருந்தனர். அவர்கள் கட்சியில் ஜனநாயகத்தை உறுதி செய்தனர். நேருவின் சில சட்ட மசோதாக்கள் கூட கட்சியில் பெரும்பான்மை பெற முடியாமல் போனதால்
இயற்றப்படவில்லை. ஆனாலும் பிற்காலத்தில் இது படிப்படியாகக் குறைந்து. கட்சிகள் ஒரு சிலரின் சொத்துக்களாக மாறிவிட்டன. தலைவர்கள் தனது உழைப்பாலும் திறமையாலும் வருவதை விட, மன்னராட்சியை போல நியிமிக்கபடுகின்றனர்.

முதிர்ச்சியடைந்த ஜனநாயகங்களில், அரசியல் கட்சிகளில் ஜனநாயகத் தன்மை, சட்டத்தினாலும், தன்னாட்சி கொண்ட ஆணையங்களாலும் உறுதி செய்யப்படுகின்றன. இதற்கு ஜெர்மனியின் அரசியல் சாசனத்தின் 21 ம் பிரிவு, ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

மற்ற ஜனநாயகங்களில் ஒருவர் மாற்றத்தை விரும்பினால், அவர் ஒரு புதிய கட்சி ஆரம்பிக்க வேண்டியதில்லை. தனது கொள்ககையை ஒத்த கட்சியில் சேர்ந்து, தனது திறமையால் மேலே வரலாம். ஆனால் இந்தியாவில் 1300க்கு மேல் கட்சி இருந்தாலும், இது சாத்தியமில்லை.

அரசியல் கட்சிகள் தன் உறுப்பினர்களின் உழைப்பால் உருவானவை. அவ்வாறே இருப்பதை உறுதி செய்வது உட்கட்சி ஜனநாயகம் மட்டுமே. மேலும் நல்ல தலைவர்களை நாம் நாளை பார்க்க விரும்பினால் அதற்கும் விடை உட்கட்சி ஜனநாயகமே.

மகேஷ், ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைக்குழு (Research & Advocacy)

Categories: Article, Feb 2013, Whistle
Tags: , ,

1 Comment to "இந்தியாவும் உட்கட்சி ஜனநாயகமும்" add comment
Ashok
March 11, 2013 at 8:21 am

As Sasi rightly said the first para rather than being an intro to the topic dealt, has served only as an distraction. Probably something poruppu should take care of for future articles.

Leave a Reply

%d bloggers like this: