நீதியரசர் ஜே.எஸ். வர்மா – தேச மனசாட்சியின் காப்பாளர்

Wednesday, April 24th, 2013 @ 9:38PM

Justice Vermaலோக் சத்தா கட்சியின் தேசிய தலைவர் டாக்டர் ஜே.பி அவர்கள் நீதியரசர் ஜே.எஸ். வர்மா அவர்களை தேசத்தின் மனசாட்சியின் காப்பாளர் என வர்ணித்துள்ளார். “நாம் ஒரு மிகப்பெரிய மனிதரை இழந்துவிட்டோம். அவர் தன் வாழ்நாள் முழுவதும் தாராண்மை கொள்கையை நிலைநிறுத்தி, மனிதநேயம் மற்றும் நேர்மை ஆகியவற்றை கடைபிடித்தார்.”

பொது வாழ்வில் ஒரு நல்ல நீதிமானாக, மனிதநேய மிக்கவராக, நேர்மையானவராக திகழ்ந்தார். அவர் ஈடுபட்ட எந்த ஒரு வழக்கிலும் ஆர்வமுடனும், தெளிவுடனும், சமநிலையுடனும் பங்கெடுத்து ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கினார்.

கடந்த பத்து வருடங்களாக நீதியரசர் வர்மாவுடன் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்ததற்கு தான் பெருமை கொள்வதாக டாக்டர் ஜே.பி அவர்கள் கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் 2011-இல் தில்லியில் நடந்த லோக் சத்தாவின் ‘லோக் பால் வட்ட மேஜை’ மாநாட்டில் வர்மா தலைமை தாங்கியது, லோக் சத்தாவின் கோரிக்கையை ஏற்று நீதியரசர்கள் எம்.என். வெங்கடாசலையா மற்றும் வீ.ஆர். கிருஷ்ண ஐயர் ஆகியோருடன் கூட்டாக நீதித்துறை சீர்திருத்தங்களை பரிந்துரைத்தது ஆகியவற்றை டாக்டர் ஜே.பி நினைவுகூர்ந்தார்.

இம்மூன்று நீதியரசர்களும் பரிந்துரைத்த சீர்திருத்தங்கள், நீதிபதிகள் நியமனத்தை மேற்கொள்ள தேசிய நீதிமுறை ஆணையம் மற்றும் இந்திய நீதிவியல் பணி ஆகியவற்றை ஏற்படுத்துவது ஆகியன.

நீதிபதி வர்மா சுதந்திரமான லோக் பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைப்பது, ஊழல்வாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய கடுமையான சட்டம் ஏற்படுத்துவது ஆகியவற்றையும் பரிந்துரை செய்தார்.

நீதியரசர் வர்மா பரிந்துரைத்த சீர்திருத்தங்களை நடைமுறைபடுத்தி நாட்டில் மக்கள் நலனை உயர்த்துவதே நாம் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலி என டாக்டர் ஜே.பி தெரிவித்துள்ளார்.

லோக் சத்தா கட்சியின் சார்பில் வர்மா அவர்களை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு தம் ஆழ்ந்த இரங்கலை டாக்டர் ஜே.பி தெரிவித்தார். நாட்டுக்காக உழைக்கும் மாமனிதர்களின் குடும்பங்கள் பெரும் விலை கொடுக்க வேண்டியதாகிறது. நீதியரசர் வர்மாவின் குடும்பத்தினருக்கு எம் வீர வணக்கங்கள்.

Categories: Press Releases
Tags: , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: