உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா அரசே?

Saturday, May 4th, 2013 @ 1:30PM

“தற்பொழுது சட்டமன்ற வாக்காளர் பட்டியலின் சுருக்கத் திருத்தப் பணிகள் (summary revision) நடைபெற்று வருவதால் அதன் பின்னர் ஆயுத்தப் பணிகளை உறுதி செய்து இவ்வாணையத்தால் தற்செயல் தேர்தல் காலி இடங்களை நிரப்பிட உரிய தேர்தல் அறிவிக்கை தக்க தருணத்தில் வெளியடப்படும் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.” 27/11/12 அன்று லோக் சத்தா கட்சி காலியாகவுள்ள உள்ளாட்சி இடங்களுக்கு தேர்தல் நடத்த வைக்க கோரிக்கைக்கு 13/12/2012 அன்று கிடைத்த பதில் இது.

electionசுருக்கத் திருத்தப் பணிகள் முடிவடைந்து 2 மாதம் ஆகிவிட்டது. இதுவரை ஒரு அறிவிப்பும் நம்மக்கு கிடைக்கப் பெறவில்லை. ஊடக செய்திகளும் இது பற்றி செய்தி வாசிக்கவில்லை. முக்கிய கட்சிகளுக்கு இதைப் பற்றிய அக்கறை இல்லாதது ஆச்சர்யமில்லை. தேர்தல் ஆணையம் நிர்ணயித்த ரூ.57,000/-மட்டும் (வார்டு கவுன்சிலருக்கு) செலவழிக்க வேண்டிய இடத்தில் எவ்வளவு அவர்கள் செய்கிறார்கள் என்பது நம் கண்கூடாக பார்த்து வரும் ஒன்று.

மேலும் மக்களுக்கு நேரடியாக, உடனடியாக அவர்களின் பொது வேலைகளை முடிப்பது மூன்றாவது முக்கிய அரசாங்கமான உள்ளாட்சி என்பதும், அதற்கு அதனை செயல்படுத்த வேண்டிய பிரதிநிதிகள் அவசியம் என்பதும் மாநில அரசாங்களுக்கு பெரிதாய்படுவதில்லை.

கடிதம் வந்த திசை நோக்கி பயணித்தோம். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சென்றடைந்தோம். செயலாளர் திருமதி.ஜோதி நிர்மலா தேர்தல் குறித்த கேள்விகளுக்கு ஆணையர் மட்டுமே பதில் வழங்க முடியும் என்றதால் ஆணையரை சந்திக்க ஆயுத்தமானோம். அதற்கு முன் மற்றுமொரு செயலாளர் திரு. நாராயணன் நம்மை சந்தித்தார். அவருடன் நடந்த உரையாடல்:

“வாக்காளர் பட்டியல் தயாரா இருக்கு. ஒவ்வொரு மாவட்டத்திலயும் எவ்வளவு இடங்கள் காலியாக இருக்குன்னும் தகவல் தயாரா இருக்கு. தேர்தல் அறிவிச்சா நாங்க நடத்துறதுக்கு தயாரா இருக்கோம்”.

“பின்பு எது உங்களை தடுக்கிறது?” என்ற நம் கேள்விக்கு, “இது மாநில அரசு நடத்துற தேர்தல், மாநில அரசு மனசு வச்சாதான் எதுவுமே நடக்கும், அவங்க நடத்த சொன்னா நாங்க அடுத்த நிமிடமே நடத்துவோம்” என்றார். உள்ளாட்சி தேர்தல் நடக்குமா அரசே?

Categories: April 2013, Article, Elections, Whistle

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: