கடற்கரை சுத்தீகரிப்பு முகாம் – அழைப்பு

Friday, May 10th, 2013 @ 10:13PM

லோக் சத்தா கட்சி, ‘V R Volunteers’ சார்பில் நடத்தப்படும் கடற்கரை சுத்தீகரிப்பு இயக்கத்தில் பங்கெடுத்துக்கொள்ளும் என அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறது.

‘V R Volunteers’ எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சுற்றுப்புற பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மை மற்றும் இரத்ததானம் ஆகிய துறைகளில் தற்போது பங்கெடுத்து வருகிறது.

அவர்களின் ‘கடற்கரை சுத்தீகரிப்பு’ முகாமின் ஒரு பகுதியாக ஆறு வாரங்கள் சென்னை சோழிங்கநல்லூர் அருகில் உள்ள அக்கறை கடற்கரை பகுதியில் சுத்தம் செய்தனர். மீண்டும் மீண்டும் குப்பை பெருகவே, அதன் காரணம் போதிய குப்பை தொட்டிகள் இல்லாததுதான் என கண்டறிந்தனர். அங்கே குப்பை தொட்டிகள் வைக்க வேண்டுமென்று கையெழுத்து இயக்கம் நடத்தி, இணையதளத்தில் புகார் பதிவு செய்தனர். அதன் பலனாக இப்போது அங்கே குப்பை தொட்டிகள் நிறுவப்பட்டுள்ளன.

தற்போது அவர்கள் அக்கறை கடற்கரை (சோழிங்கநல்லூர் அருகில்) பகுதியில் மாபெரும் சுத்தீகரிப்பு மற்றும் விழிப்புணர்வு இயக்கம் நடத்த உள்ளனர்.

தேதி/நேரம்: 12-மே-2013 (ஞாயிறு) : மாலை 4:30 முதல் 6:30 வரை.

லோக் சத்தா கட்சி இந்த இயக்கத்தில் கலந்து கொள்ளுமாறு பொது மக்களை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்களை மற்றும் அரசியல் கட்சிகளை அன்போடு கேட்டுக் கொள்கிறது.

அவர்களின் முந்தைய பணிகளின் புகைப்படங்கள்:

தொடர்புக்கு: சுரேஷ் (9843677487) and ஜெய்கணேஷ் (9791050514)

Categories: Activities, Press Releases

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: