வீணாகும் மக்கள் பணம்

Saturday, May 4th, 2013 @ 1:28PM

childrens-parkகோவை மாவட்டம் பாப்பநாயக்கன் பாளையம் ‘சென்ட்ரல் என்ஸைஸ் காலனி’யில் வசிக்கும் மக்களின் நலம் கருதி 2008 ஆம் ஆண்டில் சுமார் 60 சென்ட் நிலத்தில் குழந்தைகள் பூங்கா அமைக்க நிலம் ஒதுக்கப்பட்ட்து. அந்த நிலத்தில் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் விளையாடி வந்தனர். 2009 ஆம் ஆண்டு அந்த நிலத்தில் பூங்கா அமைக்க ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ரூ. 2லட்சம் மதிப்பிலான வேலை முடிவடைந்த நிலையில், வேலை முற்றிலூம் முடிக்கப்படாமல், பூங்கா திறக்கப்படாமல் இருக்கிறது. அந்த பூங்காவின் சாவி யாரோ தனியார் வசம் இருப்பதாக தெரிகிறது. பூங்காவினுள் யாரும் அனுமதிக்கப்படுவது இல்லை. இப்பொழுது குழந்தைகள் சாலையில் விளையாடி வருகிறார்கள். அதனால் அவர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இப் பூங்கா பாம்புகளின் குடியிருப்பாக மாறி வருகிறது. இது குறித்து அப்பகுதியில் வசித்து வரும் அருணா என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். மக்கள் பணம் வீணாகாமல், மக்கள் பயனடைய ஆவன செய்யுமா அரசு??

– விசில் துரை

Categories: April 2013, Article, Whistle

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: