அமைதியான முறையில் போராட்டம் செய்யும் உரிமை

Tuesday, May 14th, 2013 @ 4:16PM

மதுவுக்கு எதிரான மக்கள் இயக்கத்தை சேர்ந்த திரு.சசி பெருமாள் அவர்கள் அரசின் மது விற்பனை கொள்கைக்கு எதிராக வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி இருந்தார். அனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன் அதற்கு எந்த ஒரு நியாயமான காரணமும் குறிப்பிடப் படவில்லை. இதை கண்டித்து சட்டமன்ற கட்டிடம் முன் மதுவுக்கு எதிரான மக்கள் இயக்க தோழர்களும், லோக் சத்தா கட்சி உறுப்பினர்களும் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியதற்காக திரு. சசி பெருமாள் மற்றும் லோக் சத்தாவின் செயலாளர் திரு. பழனிகுமார் ஆகியோரை காவல் துறை கைதுசெய்துள்ளது.

Close
14-May-2013 12:21
Close
14-May-2013 12:23
Close
14-May-2013 12:23
 
Close
14-May-2013 12:24
Close
14-May-2013 17:11
Close
14-May-2013 17:11
 
Close
14-May-2013 17:12
 

பிறருக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், அமைதியான முறையில் போராட்டம் நடத்த ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் உரிமை உண்டு என லோக் சத்தா கட்சி வலியுறுத்துகிறது. போராடும் உரிமையை மறுத்து, அமைதியான முறையில் போராடுபவர்களை கைது செய்த காவல் துறையை லோக் சத்தா கட்சி கண்டிக்கிறது.

Categories: Activities, Press Releases
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: