பாஸ்போர்ட் பெறும் வழிமுறைகள்

Tuesday, June 4th, 2013 @ 4:32PM

passportவெளிநாடுகளுக்கு நாம் பாஸ்போர்ட் (கடவுச் சீட்டு) இருந்தால் மட்டுமே செல்ல முடியும். இந்த பாஸ்போர்ட் பெறும் வழிமுறைகள் பற்றி இந்த மாதம் பார்ப்போம்.

நாம் புதிய பாஸ்போர்ட் வேண்டி இணையம் மூலம் விண்ணப்பித்து, எந்த தேதியில் பாஸ்போர்ட் அலுவலகம் போக வேண்டும் என நேரத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

நமக்கு ஒதுக்கப்பட்ட தேதி-நேரத்தில் பாஸ்போர்ட் அலுவலகம் போய் முகவரிக்கான ஆதாரத்தின் அசல் சான்று (அதாவது ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டெலிபோன் ரசீது, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று) காண்பிக்க வேண்டும். அதன் சுய கையெழுத்திட்ட நகல் கொடுக்க வேண்டும். அதேபோல் அடையாள சான்றாக வாக்காளர் அடையாள அட்டை, ட்ரைவிங் லைசென்ஸ் அரசு அலுவலர்களாக இருந்தால் ID Card இவற்றை காண்பிக்க வேண்டும், நகல் கொடுக்கப்பட வேண்டும். வயதிற்கான சான்றாக 1987-ற்கு பிறகு பிறந்தவர்கள் பிறப்புச் சான்றும், 1987க்கு முன் பிறந்தவர்கள் பள்ளிச் சான்றும் வயதிற்கான சான்றாக கொடுக்க வேண்டும்.

2000-க்கு பின் திருமணம் ஆனவர்கள் திருமண பதிவும் சான்று கொடுப்படவேண்டும்.

குறித்த தேதி, நேரத்தில் உரிய பாஸ்போர்ட் அலுவலகம் சென்று முகவரிக்கான அசல் சான்றையும், அசல் அடையாள சான்று, வயதிற்க்கான அசல் சான்று, கல்விக்கான அசல் சான்றையும் நேரில் ஆஜராகி காண்பிக்க வேண்டும். அவை அனைத்திற்கும் நகல் ஒன்றையும் சுய கையெழுத்திட்டு கொடுக்க வேண்டும். இந்தச் சான்று சரிபார்ப்பு பணி நான்கு நிலைகளில் நடக்கும். அடுத்து 10 விரல்களின் கைரேகையும் பதிவு செய்து கொள்வார்கள். அப்போதே போட்டோ எடுத்துக் கொள்வார்கள். (மொட்டையுடன் நீங்கள் சென்றால் முடி வளர்ந்த பிறகுதான் போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள்).

பிறகு 36 பக்க பாஸ்போர்ட்டுக்கு ரூ1500/-ம், 60 பக்க பாஸ்போர்ட்க்கு ரூ.2000/-ம் கட்டணமாக கட்ட வேண்டும். (தட்கல் முறையில் விரைவாக 36 பக்க பாஸ்போர்ட் எடுக்க ரூ.3500/-, 60 பக்க பாஸ்போர்ட் எடுக்க ரூ.4000/-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.)

உரிய கட்டணம் செலுத்தப்பட்டு அனைத்து சான்றுகள் சரி பார்க்கப்பட்டபின் காவல்துறைக்கு (Police Verification) அனுப்பி, கொடுக்கப் பட்ட முகவரியில் வசிப்பது உண்மைதானா எனவும் வழக்குகள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு, வசிப்பது உண்மை என்றும் எந்த வழக்குகளும் இல்லை என அறிக்கை அளித்தப்பின் 30 நாட்களுக்குள் பதிவு தபாலில் பாஸ்போர்ட் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும்.

தமிழ்நாட்டில் பாஸ்போர்ட் சேவை மையம் 8 இடங்களில் செயல்படுகிறது.

சேவை பெறும் மாவட்டங்கள் பட்டியல்

சென்னையில் (சாலிகிராம்ம், தாம்பரம், அமைந்தகரை)

சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்கள்.

கோயம்பத்தூர்

கோயம்பத்தூர், ஈரோடு, நாமக்கல், சேலம், நீலகிரி, திருப்பூர்.

மதுரை

மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல்.

திருநெல்வேலி

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி.

திருச்சி

திருச்சி, கரூர், பெரம்பலூர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் அரியலூர்.

மேலும், பாஸ்போர்ட் எடுப்பதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டாலோ, அல்லது Police Verification-ன் போது லஞ்சம் கேட்டாலோ, லோக் சத்தா கட்சியை தொடர்பு கொள்ளவும்.

சிவ இளங்கோ

Categories: Article, May 2013, Whistle

3 Comments to "பாஸ்போர்ட் பெறும் வழிமுறைகள்" add comment
arunlove
August 24, 2013 at 10:09 am

V v v v nice

tamilbalan
April 21, 2014 at 3:52 pm

thanks

shijil
January 31, 2015 at 7:49 am

மிக்க நன்றி. உங்களை எப்படி தொடர்பு கொள்வது?

Leave a Reply

%d bloggers like this: