அடையாளம் என்னும் அரசியல்

Wednesday, June 19th, 2013 @ 11:24AM

“அடையாளம் என்னும் அரசியல்” – இது வரலாறு முழுவதும் நிறைந்துள்ளது. நம்மை இனம், மொழி, நிறம், ஜாதி, இடம் என ஏதாவது ஒருவிதத்தில் அடையாளப் படுத்தி அந்த அடையாளம் இல்லாதவரை நமது எதிரியாக உருவாக்குவது.

இவை அனைத்துமே நமது பிறப்பால் நம் மீது ஒட்டியவை. அந்த விபத்து சற்று மாறியிறிந்தால், நமது இப்போதைய அடையாளம் தலைகீழாக மாறியிருக்கும்.

இதில் பெரும்பாலும் இன்று குறைந்து விட்டது. உதாரணமாக நிறம் சார்ந்த அடையாளம், மதம், ஜாதி குறைந்து கொண்டிருக்கின்றது. மனதளவில் மாறாவிட்டாலும், அது தவறு என்று பெரும்பாலும் உணர்கின்றனர் . நம்மை அடையாளப்படுத்துவதன் மூலம் நமது உணர்வுகளைத் தூண்டி சிந்திக்கும் திறனை மிக சுலபமாக குறைய வைக்கலாம்.

சரி, அப்படி என்றால் நமது அடையாளம் என்ன? நாம் ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொன்றாக இருக்கின்றோம். நமது தெரு, ஊர், மாவட்டம், வடக்கு-தெற்கு, மாநிலம், நாடு, மனிதன், உயிர்… நாம் யார் என்று கேட்டல், நமது பதில் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொன்றாக இருக்கும். உயிரியல் வகுப்பில் சென்று நான் இந்தியன் என்று சொல்வது முட்டாள்தனமாக இருக்கும்.

இதில் பிரச்சனை என்னவெனில், நம்மை ஒரு வட்டத்திற்குள் அடைத்து, இன்னொரு வட்டத்தை நமது எதிரி என்று கூறுவது. நமது பிரச்சனைகளுக்கு அவரை காரணமாக்குவது. பெரும்பாலும் மக்கள் எதாவது ஓர் அடையாளத்தில் மாட்டிக் கொள்கின்றனர். தனது அடுத்த பெரிய அடையளத்தை மறந்து விடுகின்றான். சிலருக்கு அது மாநிலத்திற்குள் (தெலுங்கானா), சிலருக்கு அது மாநிலம் (தமிழன், மராட்டியன்). சிலருக்கு அது நாடு (தீவிரவாதம்).

நம்மை சுற்றி இருக்கும் அடையாளங்கள் ஒவ்வொன்றும், நம்மை நாமே நிர்வகிக்க, வசதிக்காக உருவாக்கபட்டவை. தற்போதைய நிலையில், நமது நிர்வாகம் நாடளவில் உள்ளது. எனவேதான், மிகச் சிறந்த தலைவர்கள் நம்மை இந்தியர்கள் என்கின்றனர். கண்ட அளவில் நமது நிர்வாகம் இருக்கும் எனில், நிச்சயமாக ஆசியன் என்றிருப்பார்கள் .

எப்பொழுதேனும் ஏதெனும் காரியத்தில் இரண்டு அடையாளங்களில் நலன் ஒத்துபோகாமல் இருந்தால், நாம் நமது பெரிய அடையளத்தை தேர்வு செய்ய வேண்டும். நமது ஊரை பாதித்து வீடு நலன் அடைதல் தவறு. நமது குப்பையை ரோட்டில் போடுவது தவறு. நமது நாட்டிற்காக இன்னொரு நாட்டினை அழிப்பதும் தவறு.

இங்கிருக்கும் அனைத்தும் நமதே. ஊர், மாநிலம், நாடு, மனிதன், உயிர்கள், இந்த உலகம் எல்லாம் நமதே. நிர்வாக வசதிக்குத்தான் எல்லைகளே தவிர நமக்கு இல்லை. யாதும் ஊரே, யாவரு(து)ம் கேளிர்!

மகேஷ் குமார்

Categories: Article, June 2013, Whistle

4 Comments to "அடையாளம் என்னும் அரசியல்" add comment
ஆமாச்சு
June 21, 2013 at 8:22 pm

லோக் சத்தா அடையாளம்தான் பெரிசு போல! புதிய மதம் லோக் சத்தா!

Mahesh
June 22, 2013 at 11:15 am

The article argues against Politics on Identity and you are trying to do the same :P

Siva Ramaswami
June 22, 2013 at 12:33 am

அடையாளம் என்பது மனிதனுக்குத் தேவையே. அது எந்த வகை அடையாளமாக இருக்க வேண்டும் என்பதை அவன் தேர்ந்தெடுப்பதில் தான் பிரச்சினையே. அஹிம்சை என்பது மகாத்மா காந்தியின் அடையாளம், வீரம் என்பது அலெக்சாண்டரின் அடையாளம், அழகு என்பது கிளியோபாத்ராவின் அடையாளம், ஊழல் என்பது அரசியல் வியாதிகளின் அடையாளம், இன விரோதம் என்பது ஹிட்லரின் அடையாளம்… இப்படி அனைவருடைய அடையாளங்களையும் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். ஆனால் முதல் இரண்டு பேருடைய, வேண்டுமானால் மூன்றாவது ஆளையும் சேர்த்துக் கொள்ளலாம், அடையாளத்தைக் குறித்து சிந்திக்கும் போது உண்டாகும் உணர்வு மற்றவர்களைக் குறித்து எண்ணும் போது வருவதில்லை. அதில் தான் வித்தியாசம் இருக்கிறது.

Mahesh
June 22, 2013 at 11:14 am

Yes . Cherishing the Identies of ideas and even culture etc is alright.
But Not sucumbing to the politics of it ! Not making it a primordial loyalty !

Leave a Reply

%d bloggers like this: