கொள்கை அடிப்படையிலான அரசியல் குறித்து விவாதிக்க டெல்லியில் வட்ட மேசை மாநாடு

Friday, July 19th, 2013 @ 10:41PM

English version: http://news.loksatta.org/2013/07/delhi-round-table-to-discuss-value.html

கொள்கை அடிப்படையிலான அரசியலை மீட்டெடுத்து மக்களுக்கு மக்களாட்சியின் மேல் நம்பிக்கை ஏற்படச் செய்யவும், அரசியலை வியாபாரமாகக் கருதும் அரசியல்வாதிகளைக் களையெடுக்கவும் வேண்டிய செயல் திட்டங்களை தீட்டும் பொருட்டு இந்தியா முழுவதிலும் உள்ள தலைசிறந்த குடிமகன்கள் பலரைக் கொண்ட குழு புது டெல்லியில் ஜூலை 20-ஆம் தேதி கூடுகிறது.

லோக் சத்தா கட்சியின் தேசிய தலைவர் டாக்டர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், முன்னால் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, திரு.கே.என்.கோவிந்தாச்சார்யா, திரு. ஆரிப் முஹம்மத் கான், திரு.பி.வி. ராஜகோபால் மற்றும் கர்நாடகா மாநில முன்னால் தலைமைச் செயலர் திரு.சிரஞ்சீவி சிங் ஆகியோர் இதில் பங்கு பெறுகின்றனர்.

மாற்று அரசியல் குறித்த ஒரு வட்ட மேசை மாநாடு காலையில் Constitution Club, Deputy Speaker’s hall-லிலும், பொதுக் கூட்டம் மதியம் மாவலன்கார் ஹால், V.P.House-சிலும் நடைபெற உள்ளன.

கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறும் போது, நாடு பல முக்கிய பிரச்சனைகளை சந்தித்து வரும் இந்த கால கட்டத்தில், இன்றைய அரசியல் தலைவர்கள் மக்களை முற்றிலும் கைவிட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினர்.

“ஐம்பதுகளில் சேவை நோக்கம் கொண்ட அரசியல் தலைவர்கள் இருந்தது போய் தற்போது வெறும் வியாபார நோக்கம் கொண்டவர்கள் அதிகம் இருப்பதே இன்றைய அரசியல் சூழ்நிலை மிகவும் சீர்கெட்டு இருப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. உண்மையில், பல அரசியல்வாதிகளுக்கு அரசியல் ஒரு லாபம் ஈட்டும் தொழில் நிறுவனமாகவே மாறிவிட்டது. சூழ்நிலை இவ்வாறு மிக மோசமாக இருப்பதால் தொடர்ந்து பல்வேறு ஊழல்கள் நடைபெறுவது என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.”

இதன் காரணமாக சாதாரண குடிமகனுக்கு அரசியல் தலைவரின் மீது இருந்த நம்பிக்கை முற்றிலும் நீங்கிவிட்டது என்று ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர். நாடு பயங்கரவாதிகளின் கையிலோ, அரசு மட்டும் சட்ட ஒழுங்கு இல்லாத குழப்ப நிலைக்கோ செல்வதற்கு நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. எனவே நாட்டு நலனில் அக்கறை உடைய ஒவ்வொருவரும் மக்களாட்சி முறையைப் பாதுகாக்கவும், சாதாரண குடிமகனுக்கு மக்களாட்சியின் மேல் நம்பிக்கை ஏற்படவும் தீவிரமாகப் போராட வேண்டும்.

இன்றைய அரசியலில் ஏற்பட்டுள்ள பெரும் இடைவெளி மாற்று அரசியல் கொண்டு நிரப்பப்பட வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் கருதுகின்றனர். அச்சுறுத்தப்படும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் சமூக நல்லிணக்கம், பொருளாதார வளர்ச்சியிலும் சுற்றுச்சூழலிலும் ஏற்பட்டுள்ள ஏற்றத் தாழ்வுகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பெரும் போட்டிக்கு உட்படும் ஊழல் மற்றும் கூடிப் பெருகி வரும் வேலையின்மை ஆகியவை உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சனைகளாக உள்ளன.

Categories: Press Releases

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: