சகோதரா…

Sunday, July 28th, 2013 @ 7:32PM

letterஇந்த மடலில் நமக்கு வாழ்வாதாரமாய் இருக்கும் குடிநீர் பற்றியே கருத்துகளை பரிமாறி கொள்ள நினைக்கிறேன். கடந்த ஒரு மாத காலத்தில் குடிநீர் விற்பனை பற்றி எல்லா நாளிதழ்களும் ஒரு சிறப்பு கட்டுகரை வெளியிட்டன. அது என்னால் வாசிக்கப்பட்டபோது, அத்துனை பதிவுகளும் ஏதோ ஏக போக விற்பனையை குறை சொல்வதாய் இருந்ததே தவிர அதன் உண்மையை வெளிகொணரவில்லை. என்ன உண்மை. எதை நாம் விழைகிறோம், எதை பதிவு செய்ய வேண்டும் அதன் மூலம் மக்கள் என்ன மனநிலைமாற்றம் பெற வேண்டும்?

சகோதரா!

குடிநீர் என்றால் என்ன? அதன் பகுப்பீடு எப்படி நடக்கிறது. தங்கத்தை பற்றியே நமது அறிவும், மதிப்பீடும் நிலைபாடும், தண்ணீரை பற்றிய அறிவும் நிலைபாடும் ஒன்றாக இருக்கிறதா? முன்னுரை இப்படி ஒரு பீடிகை யுடன் ஆரம்பம் செய்ய காரணம் என்ன தெரியுமா? மூன்றாவது உலகப்போர் மூள குடிநீர் ஒரு காரணமாய் இருக்கலாம் என்று சமூக இயலாளர்கள் பதிவு செய்து, பயந்து கொண்டு வாழ்கிறார்கள். நமது முன்னோர்கள் ஏதோ கடும் பாவம் செய்தவனை தண்டனைக்கு பழிக்கும்போது அவனுக்கு தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லாமல் ஆகட்டும் என்றும் அவன் அரசு பணி செய் பவன் ஆயின் அவனை தண்ணீர் இல்லாத காட்டிற்கு மாற்றிவிட வேண்டும் என்றும் மொழிவீர்கள் இல்லையா? அவ்வளவு கொடுமை தண்ணீர் இல்லாத வாழ்வு. இந்த ஒரு எனும் பந்தில் 70% நீர் தான், நம்மை சூழ்ந்துள்ள கடலின் பரப்பு நிலத்தின் பரப்பளவை விட 3 மடங்கு. சரி அதை வைத்து ஒன்றும் செய்ய இயலாது. பின் அதன் பயன் என்ன? இருக்கும் தண்ணீரோ ஏராளம் ஆனால் பருக தகுந்த நீரோ அதில் 3% கூட இல்லையாம். மக்கள் தொகை பெருகும் விகிதாசாரத்தை கணக்கில் கொண் டால், இருக்கும் நீர் இன்னும் எத்துனை ஆண்டுகளுக்கு வருமோ எனும் அச்சம் மேலோங்குகிறது. போதாதென்று காடுகள் அழியும் விதம் மேலும் கவலை அளிக்கிறது.

சகோதரா!

விசும்பின் துளிவீழின் அல்லால்மற்ற றாங்கே
பசும்புல் தலை கான்பு அரிது
என்றான் வள்ளுவன்.

நீரின்றி அமையாது உலகு என்றான். சரி, இத்துனை அரிதான இந்தத் தண்ணீரை இயற்கை குறைவாக கொடுக்கிறது. ஒரு பகுதி மக்கள் நலமோடும் மறுபகுதி மக்கள் தவிப்போடும் வாழவா இயற்கை வழிசெய்து வைத்து இருக்கிறது. இல்லவே இல்லை சகோதரா! இது இல்லாமலோ, போதாமலோ எழும் சிக்கல் இல்லை. இருப் பதை சரியாக, முறையாக, பயன்படுத்த தெரியாமலும், பகிர்ந்து அளிக்க மாட்டாமல் விடுவதன் கோளாறு. போறது என்று இன்று இதன் வழி ஒற்று அரசியல், மற்றும் வியாபாரம் இதன் மூலம் நிலை கொள்ள துவங்கி விட்டது. பின் பிரச்சனைக்கு குறைவு ஏது.

பாதுகாப்பான, சுத்தமான குடிநீர் வழங்க வேண்டியது ஓர் அரசின் கடமை. நம் அரசு எதை தான் உருப்படியாய் செய்தது. எந்த ஓர் நோய் என்று மருத்துவரிடம் சென்றா லும் முதலில் சொல்வது இது குடிநீர் மூலம் வந்த நோய் என்றும் சுத்தமான குடிநீர் குடிக்கவும் பரிந்துரை செய்கிறார். அதுசரி கூடிய விரைவில் அவர் தனது மருத்துவ குறிப்பில் பரிந்துரை செய்வார் குடிநீரை, நாமும் முனி நன்நீரை மருந்து கடையில் வாங்க வேண்டி வரலாம்.

சகோதரா நாம் வளரும் நாடு, நம்மிடம் எல்லா இயற்கை வளமும் உள்ளது. எத்தனையோ மேம்பட்ட தொழில் செய்ய நமக்கு தொழில் அதிபர்களும் அதிபர் களும் உண்டு. அது ஏன் குடிநீர் வியாபாரத்திற்கு வெளி நாட்டு கம்பெனிகள் ஒரு சராசரி மனிதன் இந்தியாவில் அரிசி, பால் வாங்கவே சிரமப்படும்போது தண்ணீருக்கா அவனால் பணம் ஒதுக்க முடியுமா? அப்படி அது ஓர் முக்கியமான பொருள் என்றால் அதை தரவேண்டியது அரசாங்கம் தானே. நமது நியாவிலை கடைகள் அதை யும் வழங்கட்டுமே. இதில் ஏதோ சித்து விளையாட்டும், மாயாஜாலமும் ஒளிந்து இருக்கிறது என்பது வெளிப்படை சகோதரா. நம்மிடம் வற்றாத ஜீவ நதிகள் உள்ளன. இன்னும் இயற்கை நம்மை முற்றிலுமாக புறக்கணிக்க வில்லை. எப்படியோ மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது. இந்த மழையின் கொடையை நாம் என்ன செய்கிறோம்.

குடிநீர் எனும் பெயரில், மக்களின் பயத்தை மூலதனமாக்கி ஒரு பெரும் வியாபாரம் நடந்து கொண்டு இருக்கிறது. போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது என்று முடுக்கிவிடப்படும் விளம்பரம் பார்க்கிறோம். AIDS பற்றிய விளம்பரம், அதன் மூலம் பாய்ந்தோடும் பணம் நாம் அளித்த ஒன்று தான். அரசாங்கம் அறிவிக்கட்டுமே எந்த நீரும் 1000 சி கொதிநிலைக்கு உட்படுத்தபட்டு குளிர வைக்கப்பட்டால் அதுதான் சுத்தமான நீர் என்று தண்ணீர் கொதிக்க வைக்க ஆண்டிற்கு 2 எரிவாயு உருளைகளை மானியமாக தரட்டுமே? இது ஒன்றும் இயலாத ஒன்று இல்லை. இதன் மூலம் வரும் கொள்ளை இலாபம், கிடைக்கும் பங்கு யாருக்குதான் ஆசை விட்டது.

சகோதரா ஏதோ மக்களுக்கு சேவை செய்வது போல் நாடகமாடுகிறது அரசு. கேவலம் குடிநீர் வழங்க முடியாதா கையாளகாதவர்கள் ஏன் நம்மை ஆள வேண்டும். முன்பு எல்லாம் எங்கு சென்றாலும், சரி, முன் பின் தெரியாதவர்கள் கிட்ட தண்ணீர் கேட்டால் முகம் சுளிக்காமல் கொடுப்பார்கள். இனி 50 ரூபாய் கேனில் வாங்கிய நீரை. சும்மா தருவார்களா இல்லை மயக்கத்தில் இருப்பவன் கேட்டால் மக்கள் இனி தருவார்களா?

சகோதரா!

இதன் மூலம் ஒரு உள்நாட்டு சண்டை மூள வேண்டும். ஒருபுறம் தண்ணீர் (மது) கொண்டு, பெரும் வியாபாரம் செய்து பணம் ஈட்டுகிறது அரசு. மறுபுறம் குடி தண்ணீர் கொடுக்க துப்பில்லாமல் நிற்கிறது. இவர்கள் வாழத்தான் வேண்டுமா? இல்லை நமக்கு சொரனை அற்று விட்டதா? வெளிநாட்டில் இருக்கும் கம்பெனிகளை வரவைத்து, சாலை போடலாம், வாகனம் செய்யலாம், ராக்கெட் தொழில்நுட்பம் பெறலாம். அதில் ஏதோ நன்மையுண்டு. அங்குள்ள நிறுவனங்கள் இங்கு வந்து ஒரு லிட்டர் தண்ணீரை 25 காசுகளுக்கு வாங்கி ஏதோ சுத்தப்படுத்துகிறோம் என்று சொல்லி, கொஞ்சம் மெக்னிசியம், துத்தநாகம் எனும் நஞ்சை கலந்து நமக்கு 20 ரூபாய்க்கு விற்கிறார்கள். இதை கேட்க ஆள் இல்லை. அது வேண்டாம் சகோதரா இந்த நிறுவனங்கள் கிரிக்கெட் பந்தயத்திற்கு வாரி இறைக்கிறார்களே அப்போதாவது நமக்கு புத்தி வர வேண்டாம்… அய்யோ இவன் என்னிடம் பிடுங்கி யாருக்கோ கொடுக்கிறான் என்று? சகோதரா! தயவு செய்து இந்த பாழாய் போன பிரச்ச னைக்கு முற்று புள்ளி வைப்போம். உடனடியாக!

– நெமோ

Categories: Article, June 2013, Whistle, கடிதம்
Tags:

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: