தொலைநோக்குத் திட்டம் 2023 – நிலை என்ன?

Saturday, July 6th, 2013 @ 4:13PM

தற்போதைய தமிழக அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே தொலைநோக்கு திட்டம் 2023 என்ற ஆவணத்தை உலக வங்கி உதவியுடன் தயாரித்து வெளியிட்டது. இது போல் திட்டம் இயற்றி செயல் முனைவது ஒரு மாநில அரசிற்கு இது முதல் முறையாகும். திட்டங்கள் நன்றாக இருப்பினும் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பது பலரது கேள்வியாக இருந்தது. அதற்கான பதிலை இங்கு ஆராய முனைகிறோம்.

முதலில் இத்திட்டம் நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளரும் என எதிர்பார்த்திருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. எனவே தாமதத்திற்கு அதுவும் ஒரு காரணம். அதைத் தவிர்த்து இன்ன பிற செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் நிலையில் இல்லை.
கல்வி மேம்பட பல யோசனைகள் கூறப்பட்டிருந்தது. ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழுவோ, ஏன் ஒரு நிரந்தர துணை வேந்தரோ கூட இன்னும் நியமிக்கப்படவில்லை. மாவட்ட அரசு மருத்துவமனைகள் அனைத்தும் கல்லூரிகளாக உயர்த்தப்படும் என்ற திட்டமும் நகரவில்லை.

மின்துறையில் சொல்லப்பட்ட திட்டங்களில் LNG உள்ளிட்ட பெரும்பாலான திட்டங்கள் பல்வேறு நிலைகளில் உள்ளன. தமிழகத்தின் மின் நிலையை கருத்தில் கொண்டு இத்திட்டங்களுக்கு முதலில் நிதி ஒதுக்கபடுகிறது போலும். டிட்கோ(TIDCO) நாகப்பட்டினத்தில் ஒரு துறைமுகத்துடன் கூடிய LNG மின் நிலையம் அமைக்கும் எனவும் கடந்த மாதம் முதல்வர் அறிவித்தார்.

குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டங்கள் முடங்கியுள்ளன. முக்கிய நகரங்களை இணைக்கும் அதிவேக இரயில் மற்றும் சிறப்பு சாலை திட்டங்களும் நகர்வது போல் தெரியவில்லை.

இன்ன பிற திட்டங்களும் தொடங்கப்படாவிடினும் இது இன்னும் ஆரம்ப கட்டம்தான். எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

அகிலன்

Categories: Article, June 2013, Whistle
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: